Tuesday, 13 October 2009

அப்ப வரட்டே.

...................................................................................
இடத்தை பிடிக்கோணும்
இல்லாட்டி கீழை இருந்துதான்
தீபாவளி எண்டபடியால் நல்ல சனம் என்ன ?????
ஏறடா ஏறடா ரெஜின் ..........
ரகு எங்கை நிக்கிறாய் ????
இஞ்சி கடைசிப் பெட்டிக்கு கிட்டகெதியா வாடா ....
சுரேஷ் எங்கடா ??
ஆரோடையோ போனில கதைக்கிறாண்டா .
சனியன் திருந்தாது .
சரி சரி வந்திட்டன் வந்திட்டன்.
பராஜ் ஆக்களுக்கு சீற் கிடைக்கல்லை....
ஆடிக் கொண்டு நிண்டவங்கள்
கீழை இருந்து வரட்டும் .......மதி
எங்க போனாலும் சிலோதாண்டா அவன் ... கஜன்
குமணன் வந்தால் ஆருக்கும் சீர்கிடைக்காமல் போகும் ...
பிந்தி ஏறீற்று பராஜ் சொன்ன நியாயம்.
......
.................
...............
.................................................................................
என்ன அப்பிடிப் பாக்கிறீங்கள் ? வேறை ஒண்டும் இல்லை. விடுமுறைக்கு ஊருக்கு (யாழ்ப்பாணம்) செல்கிறேன் . இதன் காரணமாக பதிவுலகத்தை விட்டு ஒருமாதம் தூரத்தில் இருக்கப் போகிறேன்.
சரி போட்டுவாறன் எல்லாருக்கும். வந்து சந்திக்கிறன் . அப்ப வரட்டே ........

10 comments:

Unknown said...

கவனமாய்ப் போய் இன்னும் கவனமா வாங்கோ

பனையூரான் said...

சரி அண்ணா

வந்தியத்தேவன் said...

எங்களுக்கு கிளியரன்ஸ் இல்லை. அதனால் யாழ்ப்பாணத்தைப் பார்ப்பது கஸ்டம் தான் நம்ம பால்குடி அங்கே நிற்கின்றார் என அறிந்தேன்.

ஆ.ஞானசேகரன் said...

//வேறை ஒண்டும் இல்லை. விடுமுறைக்கு ஊருக்கு (யாழ்ப்பாணம்) செல்கிறேன் .//

சென்று வாருங்கள் நண்பரே

நிலாமதி said...

நலமே சென்று சுகமாய் வருக ........வருக.

M.Thevesh said...

உங்கள் பிரயாணம் இனிதே நிறைவேற
என் வாழ்த்துகள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

happy journey..

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....

ARV Loshan said...

சந்தோசமாப் போயிட்டு வாங்கோ..

பால்குடி said...

சந்தோசமாப் போயிட்டு வா... வரேக்க வடை கொண்டு வர மறக்காத...
போன உடனேயே திரும்பி வாறதுக்கான விசாவுக்கு பதிஞ்சிடு. விசா எடுக்கிறது சரியான கஸ்டம்.

வந்தியண்ணே, பால்குடி ஊரிலேந்து திரும்பீட்டான். நீங்கள் ஊருக்கு விசா எடுக்கிறத விட தமிழ்நாட்டில எங்கையாலும் இடம் பாத்து குடி போங்கோ... சொந்த வீட்டுக்கு போக விசா மறுக்கிற நாடு நம்ம நாடாத்தான் இருக்கும்.

பனையூரான் said...

வழியனுப்பி வைத்த அனைவருக்கும் நன்றிகள்