இலங்கை நில அளவைத் திணைக்களம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள் . இலங்கையில் உள்ள பழம்பெரும் வேலைத் திணைக்களங்களில் ஒன்று. இத் திணைக்களத்தில் பணியாற்ற ஒரு அரசாங்க நில அளவையாளரை உருவாக்குவதற்கு தியத்தலாவையில் பயிற்சி நெறி உள்ளது . BDC எனப்படும் இந் நெறி இரண்டு வருட கற்கைக் காலத்தைக் கொண்டது. பௌதீக விஞ்ஞான (Phisical Science)கற்கையை பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தவர்களை உள்வாங்கி இந்த பயிற்சி நெறி போதிக்கப் பட்டுவந்தது. மேலும் B.SC ( Surveying Science ISMD) எனும் பட்டப் படிப்பும் உள்ளது .(ISMD - Institute of Surveying and Mapping Thiyathalawa).
நில அளவைத் திணைக்களத்திற்கு இலங்கை சபரகமுவப் பல்கலைக் கழக பூகோள விஞ்ஞான பீடத்தில்( Faculty of Geomatics) B.SC (Surveying Science) நெறியை நிறைவு செய்த மாணவர்களும் உள்வாங்கப் படுகிறார்கள். பூகோள விஞ்ஞான பீடத்தில் இக் கற்கைநெறி நான்கு வருட காலத்தைக் கொண்டது. கற்கையை நிறைவு செய்து இறுதி மூன்று மாதங்களுக்கு மாணவர்கள் ஒரு நில அளவையாளராக தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
பூகோள விஞ்ஞான பீடத்திலிருந்து வெளியேறுவோரை நில அளவைத் திணைக்களத்திற்கு வேலைக்கு அனுப்ப முன் தியத்தலாவையில் அவர்களுக்கு மூன்று மாத பயிற்சி நெறி ஒன்று உள்ளது . திணைக்கள நடைமுறைகள் தனியார் நிறுவன நடைமுறைகளுடன் வேறுபடும் என்பதால் அப்பயிற்சி நெறி அவசியமானதாக இருக்கலாம். ஆனால் அங்கு பயிற்றப் படும் விடயங்கள் கேலிக் கூத்தாக உள்ளன.
திட்டப் படம் (plan) ஒன்றை கையால் வரையும் பயிற்சியை வழங்கி பட்டப் படிப்பு முடித்தோருக்கு ABCD எழுத கற்றுக் கொடுக்கிறார்கள். தொழில் நுட்ப கணணி வளர்ச்சியில் நில அளவைத்தினைக்களம் எத்தனையோ வருடங்கள் பின்னே நிற்கிறது. நில அளவைத் துறையை கற்காதவர்களுக்கே இவ்விடயம் சிரிப்பாக இருக்கும். எத்தனை மென்பொருள்கள் எத்தனை புதிய சிந்தனைகள் வளர்ச்சியடைந்த இக் காலத்தில் பாரம்பரிய முறைகளை பேண நினைப்பது எவ்வளவு மோட்டுத் தனமானது. நில அளவைத் திணைக்கள உயர் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக சிரத்தை எடுத்து திணைக்களத்தை நவீன மயப் படுத்தாவிடின் இலங்கையில் நில அளவையாளராக பணி புரிய யாருமே முன்வரமாட்டார்கள் .
7 comments:
தமிழ்10 தளம் வழங்கும் அடுத்த வார கிரீடம் விருதிற்கு உங்கள் பெயரும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது . இதனை உறுதி செய்வதற்கு tamil10 @ymail .com என்னும் முகவரிக்கு உடனே தொடர்பு கொள்ளவும்
நன்றி
தமிழ்10 சார்பாக
தமிழினி
பணயூர்காரரே...வாழ்த்துக்கள் அய்யா..இந்த வார கிரீடம் வாங்கிருகியே.மகிழ்ச்சி...அப்டியே இந்த வருஷ கிரீடத்தையும் வாங்கி போடுங்க...!
நன்றிகள் வாழ்த்துக்களுக்கு Veliyoorkaaran
வாழ்த்துக்கள் நண்பா.... இந்த வார தமிழ்10 கிரீடம் உன் தலையில். சந்தோஷமாக இருக்கிறது.
தமிழ்10 கிரீடம் உங்கள் தலையில் வாழ்த்துக்கள். கலக்கலாக எழுதுங்கோ. சக்தி சூப்பர் ஸ்டார் பற்றிய பதிவு வேலை செய்யவில்லை.
நன்றி கிருத்திகன்
நன்றி வந்தியத்தேவன். அவசரப்பட்டு publish பண்ணி drafts இல save பண்ணினதுதான் சிக்கல்
Post a Comment