Monday 29 October 2012

விடுமுறை

விடுமுறை:- match, போதை,  Airtel super Singer Junior 3 Final,மாற்றான், போதை தரும் மீட்டல், உம்சைட்

ஈத் விடுமுறை எனக்கு 3 நாட்கள் சிலருக்கு 5 நாட்கள் எண்டு மன நிலையில் மாற்றங்களை  உருவாக்க கூடிய சூழ்நிலைகளில் மந்தமில்லாமல் நித்திரைக் குறைவோடு.


Match  
கிரிக்கெட்  தொடர் வெற்றி 2-0

போதை 
வாந்தி எடுக்க முதல் இதை உள்ளே எடுக்கும் போது ஆளையாள் நல்லா கழுவுவம்,
Mc 




மாற்றான்
Gulf  Cinema Qatar


காதல் வரும்போது கூட ஒட்டிப் பிறந்ததால் எதிர் காலத்தை பற்றி சிந்திக்காமல் காதலிக்க கூடிய மன நிலையைக் கொண்ட மனிதர்களோடு  நகர்த்த நினைத்தது உலக மயமாதலின் அடையாளப்படுத்துகையோ ? , பாடல்களை நன்றாக படமாக்கி இருக்கிறீர்கள். ருக்வேநியாவில் போய் சூர்யா நீங்கள்  காட்டும் ஹீரோயிசம் நீங்கள் செய்த மாபெரும் பேய்க்கூத்து.  வித்தியாசமான சுவாரஸ்யமான கருவோடு வருகின்ற தமிழ் சினிமா இடைவேளைக்கு முதல்  அநேகமான இயக்குனர்கள் சிறந்த ஒரு பொழுது போக்குத்தனத்தையும் நகைச்சுவை காட்சிகளையும் இடைவேளைக்கு பின்  சீரியஸா கதையை நகர்த்துவதையும் ஒரு மரபாக ஆரம்பித்து விட்டீர்கள். pendriva  தகவல்களை laptop இல மாத்திரம் அல்ல mail இல attach பண்ண மாட்டீங்களோ . தயவு செய்து pendrive ஐ  வச்சு கதையை கொண்டு போறத நிப்பாட்டுங்கோ. நாங்கள் எங்கேயோ நிக்கிறம். கிளைமாக்ஸில் எல்லா வில்லன்களும் வசனம் பேசி உண்மையை ரசிகர்களுக்கு சொன்னால்தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புரியும். இதுவும் மரபாப் போச்சு. பாட்டு இல்லாத படங்களை எதிர்பாக்கிறம்  நண்பர்கள்,  நான்இப்பிடி கன  பேர். இசையை வெறுக்கல. பொருத்தமில்லாமல் வேண்டாம் சினிமாவுக்கு இசை. 

Airtel Super Singer Junior 3 Finale 



இறுதிப்போட்டிக்கு  முதல் Airtel Super Singer Junior சுகன்யாவுக்கு கிடைக்கும் எண்டு எதிர் பார்த்தேன் .  சுகன்யா தேர்ந்தெடுத்த அஞ்சலி அஞ்சலி பாட்டு கைவிட்டு விட்டது. ஏனோ சரியாக பாடதது உணர முடிந்தது, அன்றைய போட்டியில் பிரகதிக்கு கிடைக்கும் எண்டு நினைத்தேன்.  எல்லோருடைய performance  இல் அவருடையது பிடித்திருந்தது. ஆஜிதுக்கு ரசிகர்கள் அதிகம். வாழ்த்துக்கள்  தீர்மானிப்பது ரசிகர்களே என்று தான் விளம்பரம். வாழ்த்துக்கள் ஆஜித். உங்கள் ஆரோமலே ரொம்ப பிடிக்கும் , சுகன்யா, பிரகதி  விரைவில் உங்கள் குரலில் நல்ல பாடல்கள் கேட்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது . யாழினி, கௌதம் யாரும் சளைத்தவர்கள் இல்லை .

உம்சைட்
நாங்கள்  உளத்த போகும் கடல். அதுக்குத்தான் இந்த முறையும் இரவில் ,,,,,




 போதை தரும் மீட்டல்

ஞாபகங்கள் நடந்தவற்றை மீள  கொண்டு வரல் போதையால் மாத்திரம் முடிந்து விடுகிறது ஆனால் போதையில் நடந்தவை மறந்தால் கூட.

----------------------------------------------------------------------

உன் மடி மீதாவது உறங்கி அன்பாக ஓரிரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் என்பது ஏக்கம்.உன்னிடம் அந்த மன நிலையை சொல்லப் போவதில்லை . அன்பை வெளிப் படுத்த சமூக வரையறைகள் ஏற்புடையவை அல்ல . ஆக கற்பனையில் நான் எண்ணுவதை ஒரு தூய்மையில் விழ கூடிய கீறல்களை என் எழுத்துக்கள் தந்து விடக்  கூடும். நினைப்பதை எல்லாம் எழுதி விடுகின்ற அளவுக்கு என் மனம் இலட்சியத் தனங்கள் மிகுந்ததல்ல  . புரிதல், உணர்தல் ,பகிரல் இவற்றில் எல்லையே இல்லா உணரல் பகிர்வதற்கு ஏற்றது போல இல்லாமையால் எமக்கிடையேயான புரிதல்களை கேள்விக் குறி ஆக்கிவிடும்.
----------------------------------------------------------------------

Sunday 23 September 2012


????????????????????

எதையுமே வரையறுத்த கணித விஞ்ஞான பாடங்கள் படிச்சு எதையுமே ஒரு தேற்றம், விஞ்ஞான விளக்கம் கேக்கிற மன நிலை எப்பத்தான் எங்களுக்கெல்லாம் மாறுமோ தெரியல. அது என்னவோ படிச்சத நாங்கள் எங்கையும் பிரயோகிச்சு பார்க்க முயலல்தான்  அப்பிடி போல. ஒவ்வொரு சம்பவங்களுக்கும் விளக்கம், தீர்வு, அடுத்த கட்டம் எண்டு சிந்திக்கிறதே பிழைப்பா போச்சு. இப்படி ஒரு சம்பவம் நடந்திச்சு எண்டு அப்படியே உள்வாங்கி சமன்பாட்டில X = ??? காணாம விட மாட்டம். வரையறுத்தல், தீர்த்தல், எதிர்வு கூறல், விளக்க முயலல் எண்டு மனம் கணித தன்மை கொண்டே நிக்குது. இத்தனைக்கும் கணிதத்தில புலி கிடையாது. அது ஒரு வாழ்க்கைத் துணை போல கூடவே வந்தது. வைப்பு (கீப்) கிடையாது, அது என்ன துணை??? எப்போதும் நேசிக்கப் ப்படும் உறவில்லை துணை . ஆனா வைப்பு அவ்வாறில்லை அநேகமாக  ..:) கல்வியை உவமித்தல் கடைசியில் இவ்வாறனதொரு பிறழ்வு கலந்த மன நிலையில் , எதற்கான உவமைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்கிற ஒரு வாசிப்பு நுகர்வு புரியாத மன நிலையில்தான் நிகழ்கிறதா? அல்லது எழுத்து, அதன் போக்கு புதுமையாக  இருக்க வேண்டும் என்கிற அற்ப ஆசைகளின் வெளிப்பாடா? இதற்கு கூட வரையறைகளை தேடவே மனம் எத்தனிக்கிறது, எனக்கே புரியாத என்ன சொல்ல விளைகிறேன் என்று தெரியாத திடமான நோக்கு இல்லாத மன  நிலையில் எழுத வேண்டும் என்கிற மன நிலையை தேடிக் கொண்டிருக்கிறேன்,  மது போதையில் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. என்னை உத்தமனாக்க என்னோடு போராடுவதில் போதை எப்போதுமே வென்று விடுகிறது. சிரிப்பை, கண்ணீரை விரைவாகக் கொண்டு வந்து மனிதனாக்க முயல்வதில் போதைக்கு முதலிடம் , எப்பவும் உன்னுடன். :) எதோ ஒரு விமர்சன வரையறுப்புகள் கூட நேரேதிர்த்தன்மை கொண்ட நோக்கல் இவ்வாறான மனோ நிலையை கொண்டு வரும் என்கிற நம்பிக்கையிலும் ஏன் இவ்வாறான தேடல்கள் என்ற கேள்விகள் கூட பதில் இல்லதவையாய் போகட்டும் . எழுதும்போது எழுத்துக்கள் கேள்வி கேக்கட்டும். கையில் ஓர் நடுக்கம் இருக்கட்டும். ஏன் என்கிற கேள்விகளிற்கான பதில்கள் கோர்வையாகி அவை கேள்விகளாகட்டும். இப்பதிவுக்கான தலைப்பை சிந்திக்க முதல் தலையங்கம் தானாகவே அங்கு வந்து விழட்டும். 
...........................................................................................................................

 உன்மீதான அக்கறைகளை ஏற்றுக் கொள்ளும்  மன நிலை உனக்கு  எப்போதும் இருக்கட்டும் என்பது நீ நம்பும் கடவுள்கள் மீதான பிரார்த்தனைகள் ஆகட்டும்  :)
........................................................................................................

Monday 28 May 2012

கிறிஸ் ஏஞ்சல் (Criss Angel ), Magic நுட்பங்கள்

பின்னணி  குரலையும் கேட்டால் மட்டுமே புரியும்.





















தண்ணீரில் நடத்தல் 


எப்பிடி??
.................................................................................................................................



பறத்தல் 



எப்பிடி ?????



Roller


எப்படி????

................................................................................................................................................

வேறு சில நுட்பங்கள்






Friday 18 May 2012

கனகாலம் கடந்து போக

எங்க  போனாலும் துரத்திக் கொண்டிருக்கிற  கடவுள். பேசவே கூடாது         இந்தத் தலைப்புப் பற்றி என்று யோசித்தாலும் முடியுதில்லை ஏன் ??
முதலில் நான் இது பற்றி தெளிவா இருக்கிறனோ  என்பதிலே நிறைய சிக்கல் நேற்றுக் கூட கடவுளை தூசணங்களால் அர்ச்சனை??கடவுள் எனப் படும்  விடயம்  இருக்கு அது கூடாது என்று நினைக்கிறேனா கடவுளே இல்லை என்று நினைக்கிறேனா? ஏன்திட்டோணும்    

எங்களுக்கு எதுவுமே நல்லது நடக்கலை எண்டு கடவுளை நம்பிக்கையை விட்டாலும் கடவுளை முன்வைச்சோ அதை நம்பியோ எதுவும் நாங்கள் தொடங்கலை பிறகு என்ன  கோதாரிக்கு   திட்டி. நாங்களா நம்புவம் எதுவுமே செய்யாம கடவுள் வழி காட்டுவார்  என்று இருப்போம் நல்லது நடக்கல்லை எண்ட   உடன திட்டித் தீர்க்கிறன். சமுதாயத்துக்கு  கருத்து சொல்றது என்பது  இல்லை இங்க பிரச்சனை நான் ஏன் திட்டினேன்  . நம்பிக்கை வராது .ஓ ....... கடவுள  நம்பிறன்   என்பது  இல்லை கதை. கோபம் வரக்கூடாது. இல்லை எனப் படும்   விசயத்திலை ஏன் கோபம் வரோணும் .

விட்டிடு அதை விட்டிடு இண்டையோட உதைப்பற்றி கதைக்கிறத  விட்டிடு. சரி நாங்கள் இறை நம்பிக்கைஇல்லாதவர்களாய் இருந்திருந்தா விடிவு கிடைச்சிருக்குமா.? ????/ 

எனக்கு  நம்பிக்கை இல்லை. விடிவு கிடைக்கல்ல என்ற கோபத்த நம்பிக்கை உள்ள  ஆக்களில காட்டிக் கொள்வதோட   இச்சையை தீர்க்கிற வேலையத்தான் செய்து கொண்டிருக்கன் . விட்டிடு இந்தத் தலைப்பை  இனியாவது

மூண்டு வருடமாச்சு .....
......................................................................................................................................

வெறும் புகழுக்கான எழுத்தைத்தான் இவ்வளவு காலம் எழுதியிருக்கிறேன் என்பது உண்மை போலத்தான் தெரிகிறது. நல்லா எழுதிறாய்? ஏன் இப்ப எழுதுவதில்லை ? வித்தியாசமான எழுத்து . இவ்வாறு எத்தனையோ பேர் மனசாரப் பாராட்டினாலும் அந்த  போதைதான் எழுதக் கூடிய மன நிலையைத்    தந்திருக்கிறது, ஒரு புகழுக்கப்பால்   என்னால் எழுத முடிந்தால் மாத்திரம் எழுதலாம்.
...................................................................................................................................
27 வருசங்கள் அருகே இருந்து பேசாமல் இருந்ததை எத்தனை நாளுக்குள் பேசி முடிப்பது. தனிமை என்ற உணர்வை இல்லாது செய்திருக்கிற ஏற்கெனவே அறிமுகமாகிய புது அறிமுகம்.
...................................................................................................................................
அரபிகளுக்கு மனுசனை மதிக்கத் தெரிவதில்லை ஏன் யாழ்ப்பாணத்தில நீ குறைஞ்ச சாதி எண்டு செய்யிற கூத்துக்களை  விடவா அரபிகள் மோசம்???


Sunday 15 January 2012

இனித்திடும் பொங்கல்


சின்ன வயதில இருந்தே ரொம்ப பிடிச்சுப் போன பண்டிகை எண்டா எனக்கு தைப்பொங்கல்தான். முக்கியமா தைப் பொங்கல் எண்டா என்னதான் பொங்கல் விசேசங்கள் இருந்தாலும் அந்த இப்பவும் ஞாபகம் வாறது சின்ன வயதில  மூக்கம் கடற்கரையும் பட்டமேத்தலும்தான் . பருத்தித் துறையில வடக்கு கடற்கரையில் (நடராசா அரங்கு) பட்டமேத்தல் போட்டி, கபடிப் போட்டி எண்டு  விசேசம் அதிகமாக இருந்தாலும் நாங்கள் எங்கட வீட்டுக்கு அருகிலுள்ள உறவுகள் அதிகமாக போவது மூக்கம் கடற்கரைக்குத்தான் . பொங்கல் எல்லாம் முடிந்து மாலை ஒரு 3 .30  4 . ௦௦ மணிக்கு எல்லோரும் எங்களுக்கு என்று கட்டிய பட்டத்துடன் மூக்கம் கடற்கரையை நோக்கி படையெடுப்போம். நான் எண்ட தோழர்கள் நிறையப் பேர் ஒண்டா வெளிக்கிட்டுப் போக அநேகமாகன வீடுகளிலுமிருந்து அவங்கட அம்மா அப்பா தங்கச்சிமார் அக்காமார் எல்லோரையும் காணக் கூடிய மாதிரி இருக்கும். கடற்கரைக்கு வாற பிள்ளைகளை ரசிக்கிற வயது அப்ப இல்லை.

அந்த வயதில பட்டம் ஏத்திறது ஒரு ப்ராஜெக்ட் மாதிரி. பொங்கலுக்கு   நீண்ட நாளைக்கு முன்னமே பட்டக்காலம் தொடங்கீடும்,  அந்த காலத்துக்கு ஒரு பெயரும் வச்சிருந்தம். வாலாக்கொடி , சீனட்டான் , பெட்டிக் கோடி, வௌவால் , படலம் , நட்சத்திரம் , கொக்கு, பிலாந்து,ஆறுமுகி எண்டு நிறையப் பட்டங்கள். பட்டங்கள் அதிண்ட நுணுக்கங்கள் பற்றி வடலியூரான்  ஒரு பதிவில விலாவாரியாப் போட்ட ஞாபகம் இருக்கு. பதிவை தேடித்  பார்த்தன்  காணல்ல .

தைப் பொங்கல் நாத்து பட்டமேத்த கடலுக்குப் போய்   சிலவேளை நிலத்தில பலமா அடிபட்டோ அல்லது வேற பட்டத்தோட மாடுபட்டோ கிழிந்து போய்விடும் .ஒரு முறை எண்ட பட்டம்  கடற்கரைக்கு போய் ஏத்த  வெளிக்கிட்ட உடனேயே கிழிந்து போக நான் கத்தி கூத்தாடி பெரிய ரகளை பண்ணின  பிறகு ஒவ்வொரு பொங்கலுக்கும்  அப்பா பசை திசு, நூல் கத்தரிக்கோல் எல்லாம் கொண்டு வருவார். பெரிய பட்டங்களை ஏத்தி எங்கட சின்ன பட்டங்களையெல்லாம் மாட்ட வைக்கிற  எங்களை விட பெரிய   பெடிகளிட்ட இருந்து எங்கட பட்டங்களை காப்பாத்த   படுகிற பாடும்   கஷ்டமும் இப்பவும் நெஞ்சில நிக்குது.  பட்டமேத்தலில்  நான் அவ்வளவு தேர்ச்சி இல்லை கட்டவும் பெரிசா  தெரியாது. ஊரில் அருளத்தான், பரணி அண்ணா, ரகு, S .K  இவங்கள்தான் கிங்க்ஸ். பருந்து கொக்கு பட்டம் கட்டிறது எண்டா சரியான கஷ்டம் ஏத்திறது அப்படித்தான் . எங்கட சுற்றாடலில்     அருளத்தான் பிலாந்து பட்டம் கட்டக் கூடிய ஆள். முந்தி நிறையப் பேர் நல்லா பிலாந்து கொக்கு கட்டுவாங்கள் எண்டெல்லாம் சொல்லுவாங்கள் . இன்னொரு க்ரூப் ஒண்டு இருந்தது இவங்கள் எங்கள விட நிறைய வயதுக்கு மூத்தவங்கள் . அப்ப ஒரு 24 25 வயதில இருந்த பெடிகள். ஞானேசன்  மாமா , ரங்கன் அண்ணா ராசன் அண்ணா சேகர் அண்ணா காந்தன் அண்ணா, சீலன் அண்ணா தயா அண்ணா  ஆட்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய வடிவான கொக்கு பட்டம் கட்டி ஏத்தினாங்கள்   . அடுத்த அடுத்த வருஷம் அதை கண்ணன் ஏத்தி  திரிஞ்சது ஞாபகம்  ஒரு நாவல் கலர் செட்டை வெள்ளை கலர் வண்டி சிம்பிள் . வண்டி செட்டை சிம்பிள் தலை இதெல்லாம் கொக்கு பட்டத்திலுள்ள பாகங்கள். technical  terms  என்று சொல்லக் கூடிய அளவுக்கு பிரசித்தமானவை. ஆனா எங்கட ஊருக்கு பக்கத்தில மாதனை எண்டு ஒரு ஊர் இருக்கு அவங்களை மாதிரி என்ன பட்டம் கட்ட ஆராலையும் முடியாது. அவ்வளவு  ஒரு நேர்த்தியா கட்டுவார்கள். நல்ல ஞாபகம் இருக்கு படலத்துக்கு ரண்டு  தடியை நட்டு வச்சு பூட்டி இருந்தாங்கள்.
மாதனை மைதானம் . துசி வீட்டுக் காணி இரண்டு வளவுகளும் பட்டமேத்தல் காலத்தின் பிரதான தளங்கள்.


   1995 இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்துக்கு வந்த பின் கடற்கரைக்கு போவது கனவாய்ப் போனது . அந்தப் பராயத்தில அது பெரிய ஏக்கம் ஏமாற்றம்.  மூக்கத்துக்கு பின்பும்  நாங்கள் காலடி எடுத்து  வைக்க நிறைய காலம் எடுத்திச்சு. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு  கடற்கரைக்கு போகும் காலத்தில் அந்த சிறுபிள்ளைத்தனம் கொஞ்சம் குறைந்து போய் இருந்தது. தைப் பொங்கல் எண்டா இப்ப கூட ஞாபகம் வாறது மூக்கம். 

பிறகு வந்த பொங்கல்கள் அவளவு விசேசமாய்  சொல்லக் கூடிய அளவுக்கு இல்லை. 2006 இல பல்கலைக் கழகத்துக்கு சென்ற பின் எல்லா தைப் பொங்கலும்  அங்கதான். அது ஒரு முக்கயமான கொண்டாட்டம். தமிழ்க் கலாசார மன்றத்தின் பெரிய ஒரு கொண்டாட்டம்.  இப்பதான் நடந்து முடிந்தாலும் எப்போதோ நடந்த நினைவுகளை மீட்க வேண்டும் போலிருக்கிற உணர்வு. எதோ ஒரு படபடப்பு பாஞ்சு பாஞ்சு வேலை  செய்யோணும் என்கிற உணர்வு . Girls அதுவும் பிரதானமான காரணமாய் இருக்கலாம்.  தமிழர் திருநாள் என்று சொல்லுவது எதோ சில மனக் கிளர்ச்சிகளையும் ஒரு அடையாளத்தையும் தந்தது போல உணர்ந்தவை அந்த நாட்கள். 2008  தைப் பொங்கல் பல்கலைக் கழகத்தில் இரண்டு பீடங்கள் மோதிக் கொண்டதில் எங்கட பீடமும் மூடப்பட்டு.    அந்த நேரத்தில பாதை மூடப் பட்டு இருந்ததாதால்  வவுனியாவில்... . 2009 2010 பொங்கல் கல்லூரியில் பல மறக்க முடியாத இனிமையான சில வடுக்களுடன் கூடிய நினைவோடு.


2007 புகைப்படத்தில் கிடைத்தது இந்தப் படம் :)



 2009 பொங்கல்



2010  பொங்கல் 

வடை சுடும்போது 2010  
...........................................

2011 ???????? 
...........................................
2012  கட்டாரில (Qatar) . ஒரு வெள்ளிக்கிழமை வந்திருக்கக் கூடாதா  என்ற எதிர்பார்ப்போடு .

அனைவருக்கும் தைபொங்கல்      வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . மாகி பண்டிகையை  கொண்டாடும் நேபாள நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.