Friday, 14 October 2011

chellam என்கிற எந்தன்..........................

செல்லம் என்று தலைப்பிடலாம்தானே அதென்ன chellam என்று ஆங்கிலதில? அப்படித்தான்! அத தமிழில எழுதினா "S " என்ற  முறையில் உச்சரிக்கலாம் . chellam என்கிறப்ப அந்த ச் + எ    என்ற  அந்த உச்சரிப்பு சரியாக வரும். எண்ட காதலிய அப்பிடித்தான் கூப்பிடுவன். நீ மட்டும் இல்லை நாங்களும் அப்படித்தான் எண்டு சொல்றீங்களோ ? சரி சரி வருவம். அப்படி அந்த சொல்லை உச்சரிக்கிறப்பதான் அந்த காதலின் உறுதி விருப்பம்    ச் + எ எண்டு வெளிப்படுத்தலாம். I  need  u  chellam. ஆ பனையூரான் காதல் வந்திட்டோ என்று கேட்கப் போறீங்கள். வேண்டாம் அதேதும் வேண்டாம். காதல் ஏதும்  எண்டா அவளிட்ட சொல்றத விட்டிட்டு இல்லை  இல்லை எண்ட செல்லத்திட்ட sorry எண்ட chellaththidda சொல்றத விட்டிட்டு blog  ல எழுதணுமா ???? Sorry chellam.

அருகில் இருக்கும் போது பேசி பேசி இருக்க நேரமில்லை தூர இருக்கும்போது பேசாமல் இருக்கிற  நேரமில்லை எண்ட baba . (பிள்ளை )

காதல் காதல் .................அப்பிடித்தான் ..................

"ஜேய் "
அப்படி கூப்பிடாதடா ..
ஏன்  பிடிக்கலையோ ?
பிடிக்குது
அப்ப
அப்படித்தான் நெடுகவும் கூப்பிடாத ....

???????????????

ma angel .......................
இதுபற்றி .....
தேவதையை ஒப்பிட்ட அன்புள்ள காதலியே . அர்த்தமிலாப் பதிவு  ஒன்றை கிறுக்குத் தனமாய் எழுதி யாரும் என்னை ஏச யாராக இருந்தாலும் உனக்காக அவர்கள் மீது  நான் கோபப் பட இந்தப் பதிவு ....

சீ...... இப்படி எல்லாம் எழுதி நீ பார்த்து சந்தோசப் படவாவாது யாரையும் காதலிச்சிருக்கலாம் .

அமைதியாக நீண்ட கால  முத்தங்களை  பகிரா விட்டாலும்  குறுகிய நேர நெருக்கங்களில் என்றும் உன்னோடு chellam......உன்னவன் ..... 

Monday, 10 October 2011

தலை வெடிக்குது

அப்பிடி ஒண்டும் வெட்டிப் புடுங்கலை ஆனால் தலை வெடிக்குது. போதாமல் இருக்கிற நேரம். நேர முகாமைத்துவம் எண்டு பெரியாள்  மாதிரிக் கதைக்கிற நானா இப்பிடி? புதுசா சேர்ந்திருக்கிற வேலை. இன்னும் ஒரு இடத்துக்கு வரலை உடல்  மனசு எல்லாம்தான். அழகான கற்பனைகள் விதண்டாவாதங்கள் குறைஞ்சு போகுது. வயது வர வர இப்பிடித்தானோ. என்னை எப்படா கட்டி முடிக்கப் போறீங்கள் என்று எங்களைப் பார்த்து ஏக்கமாய்  கேட்கிற எங்கட நூல் நிலையம். இப்ப எல்லாம் அந்த கனவுக் கட்டடம் என்னை பார்த்து நக்கலா சிரிக்கிற மாதிரி ஒரு தோற்றப்பாடு.  சுத்தி சுத்தி படமெடுக்க, பொறடா என்னை அம்மணமா போட்டோ எடுக்கதடா எண்டு சொல்றவள் இப்ப?????

போட்டோ மட்டுந்தான் உன்னால எடுக்கேலும். போட்டோவை எடுப்பாய் facebook இல போட்டு சும்மா நாலு வரி  எழுதுவாய் அவளவுதான். ஒரு பக்கம் ஒண்டு வச்சிருகிராய் இப்ப அதக் கவனிக்க உனக்குப் பஞ்சி என்னடா என்று கேட்கிறாள் . நீங்கள் தொடங்கிப் போட்டு அரைகுறை உடையோட நிக்கிறதப் போல என்னை நிப்பாட்டி வச்சிருக்க, ஏன் உந்த வடிவான காசுள்ள பிள்ளைய இன்னும் ஒருத்தருக்கும் கட்டிக் குடுக்கலை? வேற ஈதும் சிக்கலோ எண்டு கேட்கிற மாதிரி உங்கட நிர்வாகத்தையும் கேட்கப் போறாங்கள் எண்டு சொன்னது போல இருந்தது கடைசியா படம் எடுத்தப்ப.  

வளர வளரப் படம் எடுத்து அழகு பார்த்த நாங்கள் வளாந்தாப் பிறகு கணக்கில எடுக்காம இருக்கிறது உண்மையா வடிவா இல்லை. .
கடைசியா சொல்றன் ஒரு contractor ஒருத்தனிட்ட என்ன விடுங்கோ. கால எல்லை ஒண்டை குடுங்கோ. அதுக்குள்ளே முடிக்காமல் விட்டால் ஒவ்வொரு நாள் பிந்திறதுக்கும்  ஒரு பொருத்தமான தொகையை களிக்கிறது எண்ட மாதிரி செய்தா நல்லம். இல்லாட்டி உங்களால ஏலாது. எத்தினை நாளுக்கு மேசன் வீட்டை விடிய போய்க் காவல் நிக்கிறது. அதுக்குள்ளே சன்னல் நிலையை ஓடர் குடுங்கோ. காசை வச்சுக் கொண்டு என்ன வட்டியையே பெருக்கிறீங்கள்? கடைசியா கனவில வந்து சொன்னது இப்பிடித்தான் .