Sunday 23 September 2012


????????????????????

எதையுமே வரையறுத்த கணித விஞ்ஞான பாடங்கள் படிச்சு எதையுமே ஒரு தேற்றம், விஞ்ஞான விளக்கம் கேக்கிற மன நிலை எப்பத்தான் எங்களுக்கெல்லாம் மாறுமோ தெரியல. அது என்னவோ படிச்சத நாங்கள் எங்கையும் பிரயோகிச்சு பார்க்க முயலல்தான்  அப்பிடி போல. ஒவ்வொரு சம்பவங்களுக்கும் விளக்கம், தீர்வு, அடுத்த கட்டம் எண்டு சிந்திக்கிறதே பிழைப்பா போச்சு. இப்படி ஒரு சம்பவம் நடந்திச்சு எண்டு அப்படியே உள்வாங்கி சமன்பாட்டில X = ??? காணாம விட மாட்டம். வரையறுத்தல், தீர்த்தல், எதிர்வு கூறல், விளக்க முயலல் எண்டு மனம் கணித தன்மை கொண்டே நிக்குது. இத்தனைக்கும் கணிதத்தில புலி கிடையாது. அது ஒரு வாழ்க்கைத் துணை போல கூடவே வந்தது. வைப்பு (கீப்) கிடையாது, அது என்ன துணை??? எப்போதும் நேசிக்கப் ப்படும் உறவில்லை துணை . ஆனா வைப்பு அவ்வாறில்லை அநேகமாக  ..:) கல்வியை உவமித்தல் கடைசியில் இவ்வாறனதொரு பிறழ்வு கலந்த மன நிலையில் , எதற்கான உவமைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்கிற ஒரு வாசிப்பு நுகர்வு புரியாத மன நிலையில்தான் நிகழ்கிறதா? அல்லது எழுத்து, அதன் போக்கு புதுமையாக  இருக்க வேண்டும் என்கிற அற்ப ஆசைகளின் வெளிப்பாடா? இதற்கு கூட வரையறைகளை தேடவே மனம் எத்தனிக்கிறது, எனக்கே புரியாத என்ன சொல்ல விளைகிறேன் என்று தெரியாத திடமான நோக்கு இல்லாத மன  நிலையில் எழுத வேண்டும் என்கிற மன நிலையை தேடிக் கொண்டிருக்கிறேன்,  மது போதையில் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. என்னை உத்தமனாக்க என்னோடு போராடுவதில் போதை எப்போதுமே வென்று விடுகிறது. சிரிப்பை, கண்ணீரை விரைவாகக் கொண்டு வந்து மனிதனாக்க முயல்வதில் போதைக்கு முதலிடம் , எப்பவும் உன்னுடன். :) எதோ ஒரு விமர்சன வரையறுப்புகள் கூட நேரேதிர்த்தன்மை கொண்ட நோக்கல் இவ்வாறான மனோ நிலையை கொண்டு வரும் என்கிற நம்பிக்கையிலும் ஏன் இவ்வாறான தேடல்கள் என்ற கேள்விகள் கூட பதில் இல்லதவையாய் போகட்டும் . எழுதும்போது எழுத்துக்கள் கேள்வி கேக்கட்டும். கையில் ஓர் நடுக்கம் இருக்கட்டும். ஏன் என்கிற கேள்விகளிற்கான பதில்கள் கோர்வையாகி அவை கேள்விகளாகட்டும். இப்பதிவுக்கான தலைப்பை சிந்திக்க முதல் தலையங்கம் தானாகவே அங்கு வந்து விழட்டும். 
...........................................................................................................................

 உன்மீதான அக்கறைகளை ஏற்றுக் கொள்ளும்  மன நிலை உனக்கு  எப்போதும் இருக்கட்டும் என்பது நீ நம்பும் கடவுள்கள் மீதான பிரார்த்தனைகள் ஆகட்டும்  :)
........................................................................................................