Saturday, 10 October 2009

ஏமாற்றினால்.....

அண்மையில் எனது தொலைபேசி இலக்கத்தை மாற்றினேன்.இந்தப் புது இலக்கம் மூலம் ஏமாற்றும் ஒரு படலத்தை எமது மட்ட தோழர்கள் எல்லோருமாக சேர்ந்து அரங்கேற்றினோம். பல்கலைக்கழகத்தின் எமது நட்புவட்டம் இதில் சிக்கி சின்னாபின்னமானது. ஒவ்வொருவரைப் பற்றியும் நன்கு தெரியும் என்பதால் அவர்களுடைய தற்போதைய தேவையைப் பொறுத்து ஏமாற்றினோம். தொலைபேசியில் உரையாடி அதனை பதிவு செய்து (record) கொண்டு மீண்டும் மீண்டும் கேட்டு அந்த உரையாடல்களை ரசித்ததில் மேலும் ஆர்வம் அதிகரித்தது. சொன்னால் நம்பமாட்டீர்கள் இதில் சிக்கியவர்கள் எப்படியும் ஒரு முப்பது பேரிலும் கூட.
பல்கலைக் கழகத்திலிருந்து தற்போது வெளியேறிய சகோதரர்களை ஏமாற்ற வேலைவாய்ப்பு எனும் ஆயுதத்தை பலத்த அளவில் கையாண்டோம். தனியார் நிறுவனங்களில் இவர்கள் ஏற்கெனவே பயிற்சிக் காலத்தில் (Trainig period) பணிபுரிந்ததாலும் இவர்களுடைய தொலைபேசி இலக்கங்கள் வெளியே செல்வதற்குரிய சாத்தியக்கூறுகள் நிறையவே இருந்ததாலும் எங்களை நம்பி விட்டார்கள். நீண்ட நாட்கள் எம்முடன் பழகியிருந்தாலும் அவர்களோடு தாய்மொழியில் உரையாடாததால் அடையாளம் காண முடியாது போனது.
மேலும் சிலருடனான உரையாடல்கள் இவ்வாறான சொந்தத் தேவைகள் என்று இல்லாமல் வெறும் நகைச்சுவை சார்ந்ததாக போனது. இப்படியான தொலைபேசி ஏமாற்று நிகழ்வுகள் என்பது ஒரு சாதாரணமான விடயம்தான் ஆனால் பலர் இதில் மாட்டிக்கொண்டது எங்களுக்கு எதோ சாதித்தது போன்ற உணர்வைத் தோற்றியிருந்தது . பைத்தியம் பிடித்தவர்கள் போல இதே வேலையானோம். study leave காலம் என்பதாலும் எல்லோரும் விடுதிகளில் தங்கியிருந்தே படிப்பதால் யாருக்கும் போர் அடித்தால் மச்சான் "வாடா ஆருக்கும் ஆத்தல் குடுப்பம் " என ஒன்று சேர்ந்து கலாய்த்தோம். என்னதான் ஏமாற்றினாலும் சொந்தத் தேவை விடயத்தில் ஏமாற்றப்பட்டோருக்கு உண்மையைக் கூறினோம். சிலர் ஊகித்துக்கொன்டார்கள். அத்தோடு உரையாடல் பதிவுகளும் (Recodings) சூப்பர் ஹிட்ஸ் ஆனது. கொஞ்ச நாட்களுக்குப் பின் எல்லோருக்கும் எங்களுடைய வேலை பற்றி தெரிய வந்ததால் நிறுத்திக்கொண்டோம்.
சிறிது நாட்களின் பின் ............
அனேகமாக நானே இந்த உரையாடல்களில் கலந்து கொண்டதால் எதோ ஒரு குற்ற உணர்வு போன்ற ஒரு தோற்றப்பாடு. ஏமாற்றப்பட்டோரிடமிருந்து தூரமாகிவிடுவோமோ என்ற யோசனை மனதை உறுத்தியது. இதற்கு மேலும் வலு சேர்ப்பதாக பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் " உங்களில சரியான கோபம் எந்த விடயத்தில விளையாடுறது என்று ஒரு கணக்கில்லையோ " எனக் கேட்டது என்னவோ போலானது. இவ்வாறு வெளியில் உண்மையைக் கூறாது எத்தனை பேரின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறேனோ தெரியவில்லை என்ற யோசனை அடிக்கடி வந்து போகிறது. தனிமைப் பட்டது போன்ற ஒரு உணர்வு
பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொள்ளும் சிறந்த விடயங்களில் முதலாவது நட்பு. இவ்வளவு காலம் இருந்துவிட்டு இறுதிக் காலத்தில் அந்த இனிய நட்பு வட்டத்தில் அநேகமானோரிடமிருந்து அப்பாற்பட்டு விடுவோமோ என்ற பயம் ஆட்கொண்டிருக்கிறது.
நகைச்சுவை, நகைச்சுவைக்காக ஏமாற்றுதல் என்பவற்றின் வரையறைகள், எல்லைக் கோடுகள் தெளிவாகப் புரிந்திருக்கின்றன பல உள்ளங்களை நோகடித்து.
ஒரு நகைச்சுவை ஆயிரம் பேரை சிரிக்கவைத்த போதும் ஒருவனை அழ வைக்கிறது என்றால் அது நகைச்சுவை என வரையறுக்கப்பட முடியாது.8 comments:

யாழினி said...

ஏன் அவ்வாறு செய்தீர்கள்? ஒருவரை மன வேதனைப்படுத்துவதென்பது தவறு தானே பனையூரன். அவர்களிடம் சென்று மனப்பூர்வமாக மன்னிப்பு கோருங்கள். சும்மா நகைச்சுவைக்கு தான் இதை செய்தோம் எனக் கூறுங்கள். ஒருவேளை அவர்களும் அதை நகைச்சுவையாக ஏற்றுக்கொண்டு பழையபடி உங்கள் நண்பர்கள் ஆகலாம். உங்களை அன்புடன் ஏற்றுக் கொள்ளலாம்.

பால்குடி said...

முதலில் இவ்வார கிரீடத்துக்கு வாழ்த்துக்கள்.
பல்கலையில் இதெல்லாம் சகஜமப்பா எண்டு சொன்னாலும் பலர் இவற்றினால் பாதிக்கப்படுவது உண்மையே...
முதல் முதல் கே. எஸ். எங்கட அறையில தங்கியிருந்த நண்பர்கள் எல்லாருக்குமாச் சேத்து அடிச்ச ஆப்பு எண்டைக்குமே மறக்கமுடியாதது... (சந்தர்ப்பம் வரும்போது பிறகு பகிர்ந்து கொள்கிறேன்)

Subankan said...

இவ்வாறான விளையாட்டுக்கள் பல்கலையில் சகஜம்தான். ஆனால் அந்த பதிவுசெய்து வைத்தவற்றால் பிரச்சினைகள் ஏற்படலாம். கவனம். மற்றபடி இப்படியான விளையாட்டுக்களால் விழி பிதுங்கிய அனுபவங்கள் நிறைய உண்டு.

ஆ.ஞானசேகரன் said...

முற்றிலும் தவறான விளையாட்டு

பனையூரான் said...

யாழினி said...
//ஏன் அவ்வாறு செய்தீர்கள்? ஒருவரை மன வேதனைப்படுத்துவதென்பது தவறு தானே பனையூரன். அவர்களிடம் சென்று மனப்பூர்வமாக மன்னிப்பு கோருங்கள். சும்மா நகைச்சுவைக்கு தான் இதை செய்தோம் எனக் கூறுங்கள். //
தவறுதான் யாழினி. செய்த பிறகுதான் தவறு எண்டு தெரிஞ்சது. ஆனால் பெரிசா சொல்லுற அளவுக்கு ஒருத்தரும் கோவிக்கல்லை. நான்தான் கவலைப்பட்டேன்

பனையூரான் said...

பால்குடி said...
//முதலில் இவ்வார கிரீடத்துக்கு வாழ்த்துக்கள்.
பல்கலையில் இதெல்லாம் சகஜமப்பா எண்டு சொன்னாலும் பலர்
//
நன்றி பால்குடி

பனையூரான் said...

Subankan said...
//இவ்வாறான விளையாட்டுக்கள் பல்கலையில் சகஜம்தான். ஆனால் அந்த பதிவுசெய்து வைத்தவற்றால் பிரச்சினைகள் ஏற்படலாம்//
சகஜம்தான் ஆனால் கனபேரை ஏமாற்றினது மனதுக்கு ஒரு மாதிரியா......

பனையூரான் said...

ஆ.ஞானசேகரன் said...
//முற்றிலும் தவறான விளையாட்டு//
தவறுதான் செய்த பிறகுதான் தெரிஞ்சது