கடவுள் சம்பந்தமான விவாதங்கள் என்பது அல்வா சாப்பிடுவது போல இருக்கிறது இந்த நாட்களில். யாரையாவது வம்புக்கு இழுத்து எங்கட நாத்திக கருத்துக்களை பகிர்ந்து கொள்வது ஏதோ அலாதி சுகம். ஆனால் இப்படியான குணங்கள் மூலம் பலரின் மனது புண்படுத்தப் படுவதும் பலரினுடைய வெறுப்பை சம்பாதிப்பதும் உண்மை. சமூகத்திற்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டு கடவுள் எதிர்ப்புக் கொள்கைகளை வெளியிடுபவர்கள் தங்களை அண்மித்த உறவுகளிடையே இவ்வாறான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் சிரமத்தையே எதிர் கொள்கிறார்கள். நாத்திக கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முயலும்போது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அது மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது. தான் முழுமையாக நம்பும் விடயத்தை ஒன்றும் இல்லை என கூற முனையும் போது கருத்துக்கள் பற்றிய நோக்குதலை விட அந்தக் கருத்தை சொல்பவர் பற்றி , அவரை ஒதுக்க வேண்டும் என்ற மன நிலையே அநேகமானோருக்கு உருவாகி விடுகிறது. உதாரணத்துக்கு என்னுடைய விடயத்தில், அம்மாவிடம் எனது நம்பிக்கையீனம் பற்றிக் கூறிய பின் அவரின் வேண்டுதல்கள், விரதங்கள் அதிகரித்திருக்கின்றன எனக்கு நம்பிக்கை வர வேண்டும் என்று.
ஆக எனக்குள் உள்ள இந்த நாத்திகம் சார் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்பது புரிவதற்கு கொஞ்சக் காலம் எடுத்திருக்கிறது. இந்த தடவை விடுமுறையில் ஊருக்கு வந்த தமிழன் கறுப்பியோடு பல விடயங்களைக் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒத்துப் போகிறது எங்கட கருத்துக்கள். தனிப்பட்ட சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாமல் விடுவதன் மூலம் அதிக மனிதர்களைச் சம்பாதிக்கலாம் என்பது சரியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்த வலைப்பதிவு விதிவிலக்கே. என் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் இவள் என் மனைவி.
யாரவது நண்பர்கள், நண்பிகளுடன் பேசும்போது சிலர் "கடவுளே ....." என்று ஏதாவது விசயத்துக்கு பெருமூச்சு விடும்போது எனக்கு point கிடைத்துவிடும். ஒரு நமட்டுச் சிரிப்புடன் கடவுள் என்று சொல்லுவேன். ஏன் நம்பிக்கை இல்லையோ ? அப்பிடி என்ன பிரச்சினை என்று உரையாடல்கள் நீளும்.
சுயநலம்தான் கடவுள் நம்பிக்கைஎன்று நான்கூற , யாருக்குமே கெடுதல் இல்லாத சுயநலம் நலம்தானே என அவன் கூற எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருக்கும் போது உரையாடல்கள் தனிப்பட்ட தாக்கல்கள் இன்றி கருத்துசார் மோதல்கள் மூலம் அதி உச்சக் கட்டத்தை எட்டும். இப்படியான கருத்துப் பகிர்தலில் என்னோடு கருத்தைப் பகிர்ந்து கொண்டு எந்த வித மனக் கோணல்களும் ஏற்படாத உறவுகள் இருக்கின்றன. சில வேளை யோசிப்பதுண்டு அட கடவுள் என்ற ஒரு கோட்பாடு இல்லாவிட்டால் இவ்வாறெல்லாம் நாம் கதைகக் கூட முடியாதே என்று.
மத்தியானம் சாப்பிட்டு வந்து எங்கட ஊரில இருக்கிற கோயில் மண்டபத்தில படுக்கிறபோது கிடைக்கிற சுகத்தை அனுபவிப்பதற்காகவே விடுமுறையில் வீடு செல்ல நினைத்ததுண்டு.
என்னதான் நம்பிக்கை இல்லாவிட்டாலும் சில இறை பாடல்கள் மனதை என்னவோ செய்கின்றன. அழகா குமரா பரவசமானேன் உன் பார்வையிலே நான் வசமானேன், ஆயர்பாடி மாளிகையில் போன்ற பாடல்கள். மடு தேவாலயத்திற்கு இந்த வருட உற்சவத்திற்கு செல்லக் கிடைத்தது நண்பர்களோடு சென்றிருந்தோம். அந்த அமைதியான நேரத்திலே ஒலித்துக் கொண்டிருந்த பாடல், A .R . ரஹ்மானின் இசையில் கார்த்திக் பாடிய சக்தி கொடு பாடலில் "உண்மையும் நீயே இறைவா "எனும் வரிகளில் மனதில் ஏற்படும் நிறைவு, "அன்பென்ற மழையிலே" பாடலின் ரம்மியம், நாகூர் கனீபாவின் சில இஸ்லாமிய கீதங்கள் தரும் திருப்தி,ராஜேஷ் வைத்யாவின் வீணை பேசும் பக்திப் பாடல்கள் இவையெல்லாம் கடவுள் கோட்பாடு தந்த வரங்களே.
சூரன் போர், திருவிழாக்களில் ஒன்று சேரும் ஓர் இளைஞர் கூட்டம். காணவே முடியாத சிலரை காண்பிக்கும் லூர்து மாதா தேவாலய கூடு சுத்தல் பெருநாள், வல்லிபுரக் கோவில் திருவிழாக்கள் , அடிபட்டு வாங்கிய கடலை அவல், கூடு சுத்தல், திருவிழாக்காலத்தில் தோன்றி மறையும் கண நேரக் காதல், நோன்பு திறக்கும் தருணம் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஷில் குடித்த கஞ்சி, அடித்த ஜோக்குகள், சம்பாதித்த நட்புகள், ஒவ்வொரு வருடமும் நத்தாருக்கு அமல்ராஜ் வீட்டுக்குப் போய் அடித்த அரட்டைகள், ஸகலானுடன் கடவுள் பற்றி தெளிவாக இடம் பெற்ற விவாதங்கள், பிரதி சொன்ன "கடவுள் = 0" கதை, நவராத்திரி பூசைக்கு தமிழ் பிள்ளைகள் எல்லோரையும் காணக் கூடிய பல்கலைக்கழக வாணி விழாக்கள். ஒருவரை அதி உச்சமாக வாழ்த்துவதற்கு பாவிக்கும் "God Bless U"
இப்படி எத்தனை எத்தனை.........
இடைவேளை
....................................................................................................
பொர்ணமி தினத்திலே வெள்ளை உடையோடு பன்சலை செல்லும் சகோதர மொழி பேசும் பெண்கள். அதிலென்ன விசேசம் என்று கேட்கலாம். ஜோன்சன் சொன்ன கதைதான் ஞாபகம் வருது. "மச்சான் உன்ட ஆளை நீ எப்பாவாவது தனி வெள்ளை உடுப்போட பாத்தா வாழ்க்கையில அவளை உன்னால மறக்கவே முடியாதடா" அதுக்குப் பின்னர்தான் அந்த வெள்ளை உடை ஏனோ ........................................ ஆனாலும் என்னவளை நான் அவளை வெள்ளை உடையில் காணல்லை ஏனெண்டால் அவள் தமிழ் பேசும் ஊரில இருக்கிற பிள்ளையெல்லோ :)
நல்ல வேளை பார்க்கல்லை. கஷ்டப்படவேண்டியிருந்திருக்கும் மறப்பதற்கு.
..................................................................................
தொடர்கிறது .....
யார் மனதையும் புண்படுத்தாத மேலே குறிப்பிட்டது போன்ற பல சந்தோசங்களைக் கொடுத்ததனால் அந்த இல்லாத கடவுளைக் கொஞ்சம் பிடிக்கும். கடவுள் இருக்கிறார் என நம்பியிருந்த நாட்களில் நடந்த அதிகமாக வையப் பட்ட கடவுள் இல்லை என்ற இந்த நாட்களில் என் மனதால் நேசிக்கப் படுகிறார்.
ஆக அந்த இல்லாத கடவுளை இப்ப கொஞ்சம் பிடிக்கும். நல்ல வேளை கடவுள் இல்லை, இருந்திருந்தால் பிடிக்காமல் போயிருக்கும்.
விவாதம் வேண்டாமே :)
சூரன் போர், திருவிழாக்களில் ஒன்று சேரும் ஓர் இளைஞர் கூட்டம். காணவே முடியாத சிலரை காண்பிக்கும் லூர்து மாதா தேவாலய கூடு சுத்தல் பெருநாள், வல்லிபுரக் கோவில் திருவிழாக்கள் , அடிபட்டு வாங்கிய கடலை அவல், கூடு சுத்தல், திருவிழாக்காலத்தில் தோன்றி மறையும் கண நேரக் காதல், நோன்பு திறக்கும் தருணம் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஷில் குடித்த கஞ்சி, அடித்த ஜோக்குகள், சம்பாதித்த நட்புகள், ஒவ்வொரு வருடமும் நத்தாருக்கு அமல்ராஜ் வீட்டுக்குப் போய் அடித்த அரட்டைகள், ஸகலானுடன் கடவுள் பற்றி தெளிவாக இடம் பெற்ற விவாதங்கள், பிரதி சொன்ன "கடவுள் = 0" கதை, நவராத்திரி பூசைக்கு தமிழ் பிள்ளைகள் எல்லோரையும் காணக் கூடிய பல்கலைக்கழக வாணி விழாக்கள். ஒருவரை அதி உச்சமாக வாழ்த்துவதற்கு பாவிக்கும் "God Bless U"
இப்படி எத்தனை எத்தனை.........
இடைவேளை
....................................................................................................
பொர்ணமி தினத்திலே வெள்ளை உடையோடு பன்சலை செல்லும் சகோதர மொழி பேசும் பெண்கள். அதிலென்ன விசேசம் என்று கேட்கலாம். ஜோன்சன் சொன்ன கதைதான் ஞாபகம் வருது. "மச்சான் உன்ட ஆளை நீ எப்பாவாவது தனி வெள்ளை உடுப்போட பாத்தா வாழ்க்கையில அவளை உன்னால மறக்கவே முடியாதடா" அதுக்குப் பின்னர்தான் அந்த வெள்ளை உடை ஏனோ ........................................ ஆனாலும் என்னவளை நான் அவளை வெள்ளை உடையில் காணல்லை ஏனெண்டால் அவள் தமிழ் பேசும் ஊரில இருக்கிற பிள்ளையெல்லோ :)
நல்ல வேளை பார்க்கல்லை. கஷ்டப்படவேண்டியிருந்திருக்கும் மறப்பதற்கு.
..................................................................................
தொடர்கிறது .....
யார் மனதையும் புண்படுத்தாத மேலே குறிப்பிட்டது போன்ற பல சந்தோசங்களைக் கொடுத்ததனால் அந்த இல்லாத கடவுளைக் கொஞ்சம் பிடிக்கும். கடவுள் இருக்கிறார் என நம்பியிருந்த நாட்களில் நடந்த அதிகமாக வையப் பட்ட கடவுள் இல்லை என்ற இந்த நாட்களில் என் மனதால் நேசிக்கப் படுகிறார்.
ஆக அந்த இல்லாத கடவுளை இப்ப கொஞ்சம் பிடிக்கும். நல்ல வேளை கடவுள் இல்லை, இருந்திருந்தால் பிடிக்காமல் போயிருக்கும்.
விவாதம் வேண்டாமே :)
23 comments:
கடவுள்
இருக்கிறாறா?
இல்லையா
இருவரிடையே விவாதம்..
ஒருவர் இப்போது உயிரோடு இல்லை!
ஒருவர் இருக்கிறார் இப்போது சிறையில்!!
எங்கோ படித்தது!!!!
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, ஒருவன் தான் செய்யும் செயல் ஒவ்வொன்றும் சரியா பிழையா என்று அவனது மனச்சான்றுக்கு தெரிந்த ஒன்றே. அதற்காக கடவுளின் பெயரால் சட்டங்கள் ஒன்றும் அவசியம் இல்லை.
கடவுளை முட்டாள்தான் நம்புவான்
கடவுள் என்று ஒன்றும் இல்லை
இந்த மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்
கடவுள் நம்பிக்கை விட்டு மனிதனாக வாழ முயற்சி செய்யுங்கள்
கடவுலை நம்ப வேண்டிய அவசியமில்லை
இன்னும் நம்மக்கள் இவற்றை நம்பிக்கொண்டிருப்பதால் அவர்களை மாற்ற வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது அதனால் தான்
உலகில் கடவுள் உண்டு என்பதை நம்பிக் கொண்டிருக்கிற மக்களை விட, கடவுள் நம்பிக்கை அற்ற மக்களின் தொகையே அதிகமாகும். எனவே கடவுள் எண்ணமானது மற்றவனால் புகுத்தப்பட்டதே யாகும்
மனிதனுக்குக் கடவுள் எண்ணம் தானாகத் தோன்றியதா? பிறரால் புகுத்தப்பட்டதா? என்பதைச் சிந்திக்க வேண்டும். கடவுள் எண்ணம் தானாகத் தோன்றியது என்றால், உலகில் உள்ள 350-கோடி மக்களுக்கும் தோன்றியிருக்க வேண்டுமே! மற்ற ஜீவன்களான ஆடு, மாடு, கோழி, கழுதைகளுக்குத் தோன்றியிருக்க வேண்டுமே
இயலாமை எப்போது எமக்குள் குடிகொல்கிறதோ அப்போதே எமக்குள் இத்தகைய பூச்சாண்டி காட்டுபவர்கள் பல மதங்களின் பெயரால் எமக்குள் வந்து எம்மையே ஆட்டுவிக்கிறார்கள் இது தான் உண்மை
மூட நம்பிக்கையின் மொத்த உருவம் இந்து மதம் உலகத்திலேயே மிகவும் கேவலமான மதமாக இந்துமதம் முதல் இடத்தில் உள்ளது இப்படி காட்டுமிராண்டியான கேடு கெட்ட மதம் உலகில் வேறு எங்கும் இருக்கிறதா இருந்தால் சொல்லுங்கள்
மதம் கடவுளை தொழுபவன் வணங்குபவன் காட்டுமிராண்டி என்று இதை விமர்சனம் செய்தால் மனம் புண்படுகிறதாம் கேவலம்டா
மதத்தை நம்புவது நீயானால் நாசமாய் போவது நீயே
உங்களை எல்லாம் திருத்தவே முடியாதுமதம் வைத்து பிழைப்பு நடத்துவோர்
வாழ்ந்துகொண்டே இன்னும் இன்னும் ஏமாற்றிக்கொண்டே இருப்பர்
உறவுகளே நாம் வணங்கும் கடவுளுக்கு இத்தனை தலைகள் இருந்தும், இத்தனை கைகள் இருந்தும்.அந்த கைகள் இவ்வளவு ஆயதங்களைப்பிடித்திருந்தும்
எம் இனத்தை சிங்களன் அழிக்க முற்பட்ட போது தடுக்காமல் மௌனமாக இருந்தது ஏன்?
இவற்றை எல்லாம் இன்னும் நம்பிக்கொண்டிருப்பதன் நோக்கம்தான் என்ன?
கடவுள் என்று இன்று நாம் வணங்கப்படும் பொருள் நம்மைக்காப்பதற்க்கா?
இல்லை நாம் துன்பப்படும் போது , நாம் அழிக்கப்படும்போது மூடிக்கொண்டு வேடிக்கை பாரத்துக்கொண்டு இருப்பதற்க்கா?
கடவுள் என்ற ஒன்றுதான் மனிதன் சாதி மதம் என்று படிப்படியாக மனிதன் பிரியக்காரணமாய் இருக்கிறது
கடவுள் இருக்கிறதா இல்லையா உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து பார்க்க நாம் ஏன் தயங்குகின்றோம்
ஆதிகாலத்தில் பிறந்த மனிதனுக்கே ஆடையின்றி அலைந்தவன்தானே ... ஆனால் மனிதர்களுக்கு முன் பிறந்த கடவுளுக்குமட்டும் எப்படி ஆடை ஆபரணங்கள் வந்தது...
நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை விரட்டி விட்டு கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மூடநம்பிக்கையை நமக்குள் ஏற்ப்படுத்திக்கொண்டுள்ளோம்
வணக்கம். உங்கள் வரவு, நல்வரவு ஆகுக. தந்தை பெரியார் கூகிள் குழுமம், கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு , பெண் விடுதலை , தமிழர் நலன், மனித இன ஒற்றுமை.. மனித இன நன்மை. மதவெறி மாய மனிதநேயம் வளர்க்க நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்........
கடவுள் இல்லை என்று சொல்லும் படித்தவன் பெரும்பாலும் கொஞ்ஞமாவது நல்ல எண்ணங்களும் சிந்தனைகளும் உள்ளவர்களாக இருப்பார்கள்
நாத்தீகர்களில் பலவகை உண்டு. ஏதோ நம்ம பாட்டுக்கு இருப்போம், இந்த கடவுள் எல்லாம்… என்னத்துக்கு ஐயா டயம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு, என்று தனிப்பட்ட முறையிலே எந்த இயக்கமும் சாராத பல நாத்தீகர்களை நான் சந்தித்து இருக்கிறேன்.
அடிப்படையில் கடவுள் என்கிறவர் ஒருவர் இருக்கிறாரா என்று ஆராய்பவர்கள், தங்களின் ஆராய்ச்சியின் ஒரு நிலையாக கடவுள் இல்லை என்கிற கோட்பாட்டை முன் வைக்கின்றனர்.
மொத்தத்திலே பொதுவாக நாத்தீகர்கள் கடவுள் இல்லை என்னும் கோட்பாட்டை உடையவர்கள் ஆவார்கள.
கடவுள் இருக்கு என்கிறவர்கள் மதவெறி கோட்பாட்டில்மனம் சிக்கிய அப்பாவிகள். இவர்கள பெரும்பாலும் தாங்கள் வளரும் போது, வீட்டிலே தங்களை சுற்றியுள்ள சமூகத்திலே கேட்கப் படும் கருத்துக்களை. சில நூலகளில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்களை அப்படியே ஏற்று அதை நம்புகிறவர்கள ஆவார்கள்.
நாம் முன்பே பல முறை சொன்னது போல அமைதியாக தங்கள் வழிபாட்டை நடத்திக் கொள்பவர்களை நாம் குறை சொல்லவோ, புண்படுத்தவோ விரும்பவில்லை. ஆனால் சிலர் தாங்கள் நம்புவதை உலகில் உள்ள எல்லோரும் நம்ப வேண்டும் , பின்பற்ற வேண்டும் என்கிற உணர்ச்சியில் மாட்டிக் கொள்கின்றனர். மெதுவாக ஒருவரை அணுகி அன்பாகப் பேசி, படைத்தவர் என்று ஒருவர் இருக்கிறார் என்று நம்ப வேண்டும் என்று ஆரம்பிக்கிறார்கள். பிறகு அந்த ” படைத்தவன்” தொடர்பாக அவர்கள் சொல்லும் அனைத்தையும் நம்ப வேண்டும் என்று அன்புக் கட்டாயத்தை அதிகப் படுத்துகின்றனர்.
அவர்கள் சொல்லுவதை ஏற்க மறுத்தாலோ, எதிர்த்து சொன்னாலோ அவர்களால் அதை சகித்துக் கொள்ள இயலாத நிலைக்கு சென்று விடுகின்றனர். முதலில் மனதில் வருத்தம் உருவாகி, பிறகு ஆத்திரமும் கோவமும் அதிகமாகி வெறி பிடித்த நிலையை அடைகின்றனர்.
மனதிலே வெறி ஏற்பட்டால் சிந்திக்கும் தன்மை இல்லாமல் மனதிலே எல்லாம் மறைந்து, தான் நம்புவதை மற்றவன் ஒத்துக் கொள்ள செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே அவனை ஆக்கிரமிக்க, எந்த அளவுக்கு வெறி அதிகமாகிறதோ அந்த அளவுக்கு அவன் ஆபத்தானவனாகிறான்.
போய் மத வெறியர்கள் பிறரை தாக்கவும் ஆரம்பித்து விடுகின்றனர். இதை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அன்று தொட்டு இன்று வரை மத வெறிக்கு பலியான உயிர்களின் எண்ணிக்கை பல கோடிகள், அது இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதை ஒப்பு நோக்கும் போது நாத்தீகர்கள் கடவுள் இல்லை என்பதை தங்கள் கருத்தாக சொல்லுகின்றனர், மேலும் நாத்தீகர்களும் பிறர் தங்கள் நாத்தீகக் கொள்கைகளை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் நாத்தீகக் கொள்கையை ஒத்துக் கொள்ளாதவர் மீது நாத்தீகர்கள், தனிப் பட்ட அளவிலே காசு குடுப்பதாக ஆசை காட்டுதல், மிரட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுவதில்லை, ஆயுதம் தாங்கிய தாக்குதல் நடத்துவதில்லை. உலகில் உள்ள எல்லோரும் நாத்தீகக் கொள்கையை ஒத்துக் கொள்ள செய்ய வேண்டும் என்கிற வெறியுடன் அவர்கள் செயல்படுவதில்லை. “ஏய், நீ நாத்தீகக் கொள்கையை நம்பவில்லை என்றால், நீ இறந்த பின் என் தலைவன் உன்னை நரகத்திலே தள்ளி எரியும் நெருப்பில் போட்டு வதக்குவான்” என்று சொல்ல நாத்தீகர்களால் முடியாது. வேண்டுமானால், “ஏய் நீ நாத்தீகக் கொள்கையை ஒத்துக் கொள்ளவில்லை, உனக்கு இப்பவே பேஜாரக்கி விடுவோம்” என்று வேண்டுமானால் சொல்லலாம்.
மத வெறியராய் இருப்பதை விட நாத்தீகராய் இருப்பதை மேலானது சரியா?
நாத்தீகர்கள், கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல! நம்ப முடியாததால் நம்புவதில்லை! அவர்களுக்கு நடிக்கத்தெரியவில்லை! தன் மனதில் தோன்றுவதை உண்மையாக சொல்கிறார்கள்! அவ்வளவுதான்!
நற்குணங்களுடன், மனிதாபிமானத்துடன் இருந்து தன்னால் உணரமுடியாத கடவுளை வணங்கவோ வழிபடவோ நாத்தீகர்கள் செய்யவில்லையென்றால் அது ஒண்ணும் தவறல்ல! அது எந்த வகையிலும் அவர்களை குறைக்காது
நாத்தீகர்கள் என்றும் பகுத்தறிவுமிகுந்த சிந்தனையின் முன்னோடிகளாகத் திகழ்ந்து வருகின்றனர்.
நாத்தீகர்களின் எண்ணிக்கை இச்சமூகம் நினைப்பதை விட அதிகமே. எழுந்து வெளியே வாருங்கள். சுதந்திரத்தை உணர்வீர்கள். உங்கள் எடுத்துக்காட்டு பிறர்கள் தங்களையும் வெளியே கொண்டு வர ஊக்குவிக்கும். (அவர்களாக வெளியே வர வேண்டுமே தவிர கட்டாயத்தால் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)
நாத்தீகர்கள் தனியாக இல்லை என்பதை தெரியப்படுத்தும். கலந்துரையாடல்கள் மூலம் நாத்தீகத்தின் மேலுள்ள தவறான எண்ணங்களை வெளியேற்றவும் உதவும். நம்மை சபித்து ஒரு இருட்டில் தள்ள அனுமதிக்க மாட்டோம் என்பதையும் நாம் மறைந்து விட மாட்டோம் என்பதையும் இவ்வுலகம் உணரட்டும்.
"நான் ஒரு நாத்தீகன்" என்று கூறுவதில் தயக்கம் குறையும். நாத்தீகர்கள் பல நிறம், தோற்றம் மற்றும் பல எண்ண்ஙள் போன்ற வேறுபாடுகள் கொண்டவர்கள் என்பதை அவர்களுக்குப் புரிய உதவுவோம். தொழிலாளிகளும் வல்லுனர்களும் நம்முள் அடங்குவர். அப்பா, அம்மா, மகன், மகள், சகோதரன், சகோதிரி மற்றும் வயோதியர்கள் போன்றவர்களும் நம்முள் அடங்குவர். நாம் அனைவரும் மனிதர்கள் (இயற்கையின் பரிணாமத்தால் வந்தவர்கள்) நல்ல நண்பர்கள், நல்ல குடிமக்கள். நாம் அனைவரும் நல்ல மக்கள் இயற்கையை மிஞ்சும் மாசக்தி கடவுள் ஒன்றின் ஆறுதல் நமக்குத் தேவையில்லை.
அரசியலிலும் பள்ளிக்கூடங்களிலும் மதங்கள் நுழைவதை எதிர்த்துக் குரல் கொடுப்போம். மத எண்ணங்கள் நமது குழந்தைகளின் உள்ளங்களிலும், அரசாங்கத்திலும் திணிக்கப்படுவதைக் கண்டுநாத்தீகர்கள் மட்டுமின்றி பல இலட்சக் கணக்காணோர் வருந்துகின்றனர். அறநெறிக் கொள்கைகளிலிருந்தும், அரசாங்கக் கொள்கைகளிலிருந்தும் நாம் தெய்வத்தை அகற்ற வேண்டும். நாம் இக்கணம் எழுந்து நின்று புறப்பட வேண்டும். சிறந்து விளங்க வேண்டும்
நாத்திகர்கள் என்றும் பகுத்தறிவுமிகுந்த சிந்தனையின் முன்னோடிகளாகத் திகழ்ந்து வருகின்றனர். ஆகவே உங்கள் கருத்துக்களை எந்த ஒரு தயக்கமும் இன்றி(facebook)பிரச்சாரம் மூலம் பகிர்ந்துக்கொள்ளலாம்.sri.surash@yahoo.com
இந்து மதம் என்றால் அர்த்தம் என்னவென்று முதலில் பார்ப்போம்!
இந்தியா, இந்து மத நாடு என்கிறது. இந்து மத வெறி நாய்களின் கூட்டம். அது முஸ்லிம்களைத் தாக்குவோம், கிறித்துவர்களைத் தாக்குவோம் என்கிறது.
இந்து மதம் என்றால் அர்த்தம் என்னவென்று முதலில் பார்ப்போம்!
இந்து மதத்தின் உண்மையான பெயர் பிராமண மதம் என்பதாகும். பெரியார் பாணியில் சொன்னால் இந்து மதத்தின் உண்மையான பெயர் பார்ப்பன மதம் ஆகும்.
ஒரு முஸ்லிம் குரான் படித்து தேவையான தகுதியை வளர்த்துக் கொண்டால் மசூதிக்கு நிர்வாகியாகலாம்,ஒரு கிறித்துவன் பைபிள் படித்து அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டால் கிறித்துவ கோவிலின் பாதராகலாம்.
ஆனால் ஒரு இந்து வேதம் aபடித்து, அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டால் இந்து மத கோவிலுக்கு அர்ச்சகராக , நிர்வாகியாக முடியாது.அதற்கு ஒரே தகுதி பிராமண சாதியில் பிறந்திருக்க வேண்டும் என்கிறது,வெட்கம் கெட்ட,கேவலமான இந்துமதம். இப்படி கேடு கெட்ட மதம் உலகில் வேறு எங்கும் இருக்கிறதா, இருந்தால் சொல்லுங்கள்?
ஆண்டவனுக்கு முன்னால் அனைவரும் சமம் என்கிறன எல்லா மதங்களும்.ஆனால் இந்து மதம் அதை ஒப்புக் கொள்வதில்லை.பிராமணர்கள் மட்டுந்தான் உயர்ந்தவர்கள்.மற்றவர்கள் கீழ் சாதியினர் என்கிறது, தினம் தினம், இந்து மதம்.
இந்தியாவில் இருக்கிற முஸ்லிம்களும்,கிறிஸ்தவர்களும் மதம் மாறிய இந்தியர்கள்.
இவர்களைத்தான் அந்த இந்து மத வெறி நாய்கள் குறி வைக்கின்றன
என்றைக்கு மனிதன் கோவிலுக்குப் பூட்டுப் போட்டுப் பாதுகாத்தானோ, அன்றைக்கே கடவுள் நம்பிக்கை செத்துப்போன இரகசியம் உங்களுக்குத் தெரியுமா? தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுளால் உங்களை எப்படிக் காப்பாற்ற முடியும், சிந்தியுங்கள்!
கடவுள் என்று ஒன்று இருந்தால் எல்லோரையும் அவர் காப்பாற்றட்டும். மத வெறி நாய்களே நீங்கள் யார் கடவுளைக் காப்பாற்ற?
ஓ... மனிதன் படைத்த கடவுளை மனிதனே காப்பாற்றுகிறான் என்ற உண்மையை ஊருக்கும்,உலகத்துக்கும் வெளிச்சம் போட்டுக்காட்டவா?
காந்தி இந்து- முஸ்லிம் ஒற்றுமை வலியுறுத்துகிறார் என்று காந்தியைக் கொன்றது, இந்து மத வெறியன் தான் என்று நிரூபிக்கப் பட்ட பிறகும் இன்று வரை காந்தியைக் கொன்றது நாங்கள் தான் என்று ஒத்துக் கொள்ளும் தைரியம் இல்லை, இந்த பேடிகளுக்கு...!
பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம், பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம் கோவில் இருக்கும் தெருப் பக்கந்தான் ஊர்வலம் போவோம் என்று போய் மசூதிக்குள் கல்லை விட்டு எறிவது,கிரிஸ்தவ கோவில்களைத் தாக்குவது போன்றஅந்தக் கூட்டத்தின் நாற்றமடிக்கும் சாதனைப் பட்டியல்கள் நீளுளுளுகின்றன.......
இந்த இந்து மதவெறிநாய்களின் ஆட்டம் பார்த்து தான் எதிர்வினை என்ற பெயரில் முஸ்லிம் மதவெறி நாய்கள் நாடு விட்டு நாடு வந்து, நாட்டுப் பற்றை விதைக்காத,இந்த தேசத்தில் மதத்தின்,கடவுளின் பெயரால் ஆட்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி தருகிறார்கள், வெடிகுண்டு வெடிக்க நாட்டுப் பற்றை விதைக்க வேண்டிய பிரதமர் மன்மோகன் சிங் போன்றவர்கள் அமெரிக்கா முன்பு மண்டியிட்டு கிடக்கும்போது, சாதாரண இந்திய முஸ்லிம் குடிமகனுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்?
அந்தியர்களை துரத்தியடித்த அதே காங்கிரஸ் கட்சி இன்று அந்நிய பெண் சோனியா காந்தி,அமெரிக்கா என்று அடிமைப்பட்டுக் கிடக்கிற அசிங்கம் இங்கே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்க கம்பெனிகள் அங்கே அமெரிக்காவில் மூடப்பட்டால் ,இங்கே இந்தியர்கள் உடனே வேலை இழந்து நடுத்தெருவுக்கு வரும் அதிசயத்தை தான் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, மானங்கெட்ட காங்கிரஸ் கட்சி.
இந்து மதத்தின் பெயரால் ஏய்த்துப் பெண்களை சூறையாடுகிற சாமியார்களாக பிரேமானந்தா முதல் காஞ்சி காமக்கேடி சங்கராச்சாரியார்கள் வரை பிடிபடுகிறார்கள்.போலீஸில் பிடிபடாதவனை சாமியார் என்றும், பிடி பட்டவனை போலி சாமியார் என்றும் வருணிக்கின்றன, பத்திரிக்கைகள்.
மதத்தின் பெயரால்,கடவுளின் பெயரால் நடக்கின்ற தவறுகளை பெரியார், பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்)இயக்கங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டும் போது, அந்த இந்து மதவெறி நாய்கள் "அய்யோ! இந்து மதத்தையும்,இந்துக்களையும் புண்படுத்துகிறார்களே!" என்று ஊளையிடுகின்றன.
இந்திய அரசியலில் இரண்டே இரண்டு அணி தான்.ஒன்று மதத்தை தலையில் வைத்து ஊர்வலம் போகிற அணி, இன்னொன்று அந்த மதவாதத்தை எதிர்க்கிற அணிஅந்த மதவெறிநாய்களை மண்டையில் "நச்"சென்று அடிக்கிற எதிர்சக்தியாக பெரியார் இயக்கம், அதைச் சார்ந்த இயக்கங்கள், பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்)இயக்கங்கள், அதைச் சார்ந்த இயக்கங்களே அந்த சாதி,மத வெறிபிடித்த வெறி நாய்களுக்கு சாவுமணி அடிக்கிற சக்தியாக இருக்கின்றன.
நாளைக்கே உங்கள் வீட்டு வாசல் முன்பு நின்று அத்வானி,வாஜ்பேய்,இராம.கோபாலன்,இல.கணேசன் ,துக்ளக் சோ எனப் பல பெயர்களில் உங்கள் வீட்டுக்கு முன்னால் நின்று ஓட்டுப் பிச்சைக் கேட்டுவருவார்கள்மதத்தின் பெயரால்,கடவுளின் பெயரால்,சாதியின் பெயரால் மனிதர்களுக்கு எதிராக கிளம்பும் எந்த சக்தியும் சிலுவை சுமந்தோ,முஸ்சுலிம் குல்லாய் போட்டோ, எந்த வேஷம் போட்டு வந்தாலும், அந்த மத நச்சுப் பாம்புகளை தயங்காமல் தலையில் தட்டி நசுக்கித் தூக்கியெறியுங்கள்...!
கேவலமான இந்து மதம்
இந்து மத வெறி நாய்களின் கூட்டம்
கடவுள் எப்படி உண்டானார்?
பகுத்ததறிவுள்ள மனிதன் இந்த 20- ஆம் நூற்றாண்டில் கடவுள், மதம், வேதம், மதத் தலைவர் என்றெல்லாம் நம்பிக் கொண்டும் ஏற்றுக்கொண்டும் நடப்பது மனித சமூதாயத்திற்கு மிகமிக வெட்கக்கேடான காரியமாகும்.
ஏனென்றால் இவையெல்லாம் 1000, 2000, 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட
கால மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட கருத்தும், காரியங்களுமாகும். இவைகள் அறியாமையின் காரணமாகவும், அக்காலக் காட்டுமிராண்டித்தன்மை காரணமாகவும், நல்லெண்ணத்துடனோ அல்லது கெட்ட எண்ணத்துடனோ பல கற்பனையான அதிசயம் அற்புதம் என்பவைகளை உண்டாக்கி, அவற்றின் மூலம் மக்களை நம்பச் செய்து ஏற்பாடு செய்யப்பட்டவைகளேயாகும்.
ஏன் அப்படிச் சொல்கிறேனென்றால், கடவுள், மதம், வேதம், வேத தத்துவம், மதத் தலைவர்கள் என்பவர்கள் ஆகியவை எதுவும் நம்பியாக வேண்டியதே ஒழிய, அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு, அனுபவத்திற்கு, சாத்தியத்திற்குப் பொருத்தமில்லாததாகவே இருப்பதால் தான் இப்படிச் சொல்கிறேன்.
அக்காலத்திய எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், அந்த மதத் தலைவர்கள், தன்மைகள் எல்லாம் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும், பொருத்தமில்லாமல் நம்பித்
தீரவேண்டியவர்களேயாவார்கள்.
உதாரணமாக:
கடவுளை உண்டாக்கியவன் யார் என்பதே யாருக்கும் தெரியாது. "தானாக உண்டானான்" என்று தான் சொல்லுவார்கள். எப்போதென்பது யாருக்கும் தெரியாது. இவை இரண்டும் தெரிய முடியாமல் இருப்பது தான் கடவுள் என்றால் அதைப்பற்றி அறிவுள்ள மக்களுக்குத் தெரியப்படாமல் போனதற்குக் காரணம் என்ன?
அன்றியும், கடவுள் ஏன் உண்டானார்? ஏன் ஏற்பட்டார்?அவர் வேலை என்ன? அந்த வேலைகளை அவர் ஏன் மேற்கொண்டார்? இவை மனிதனுக்கு மாத்திரம்தானா? இவை இல்லாமல் இருந்தால் என்ன? என்பனபற்றி யாருக்காவது தெரியுமா? கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்றால் இந்த அடிப்படைக்குக் காரியம் -
கருத்துக்கூட மனிதனுக்குத் தெரியும்படி செய்ய சர்வ சக்திக்கு முடியாமல் போனது ஏன்? தவிரவும், சர்வ சக்தியுள்ள கடவுள் இருப்பதாக நம்ப வேண்டி இருக்கிறதே ஒழிய தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள காணமுடிவதில்லையே! மற்ற ஜீவராவிகளுக்குச் சொன்னால் தெரியாதே! அது ஏன்?
தவிர, இந்துக்கள் என்பவர்கள் ( பார்ப்பனர்களும், பார்ப்பனதாசர்களும்) முதலில் உலக நடப்புக்குக் "கடவுள்" தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், மனிதத் தன்மைக்கு மேற்பட்ட குணமுள்ளவர்களான தேவர்கள் என்பவர்கள் தாம் காரணம் என்றும், இந்திரன், வருணன், வாயு, பிரமன், விஷ்ணு, ருத்திரன், எமன், சந்திரன், சூரியன் முதலியவர்கள் உலகத்தை நடத்துகிறார்கள் என்றும் கருதி, சொல்லி நடந்து வந்தார்கள்.
பிறகு பிரமா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்கள் என்று ஆக்கினார்கள். பிறகு அவற்றை மனிதனை விட இழிதன்மை – குணங்கள் உடையவனாக ஆக்கிப் பிரச்சாரத்தால் நிலை நிறுத்திவிட்டார்கள். இதிலிருந்து ஒரு கடவுள் என்பதும் கடவுள் சர்வசக்தி உடையது என்பதும் பெரிதும் மறைந்துவிட்டன.
அதன் பிறகு இந்த மூன்று கடவுள்களின், அவற்றின் மனைவி, மக்கள்களின் அவதாரம், அம்சம் என்பதாகக் கருதி, 300- கடவுள்கள், 3000 -கடவுள்களாக ஆக்கப்பட்டு விட்டன. அதன் பின்பு பார்ப்பனர் தங்கள் வயிற்றுப் பிழைப்பைக் கருதி, இந்த ஆயிரக்கணக்கான கடவுள்களுக்குச் சோறு, சிலை, கல்யாணம், சண்டை, சச்சரவு, மக்களைக் கொல்லுதல் என்பன போன்ற காரியங்களைக் கற்பித்து, மக்களுக்குள் புகுத்தி, மக்களைப் பயன்படுத்தி ஜீவித்து வருகிறார்கள்.
இந்தக் கருத்து தத்துவத்தில் உலகில் பல பாகங்களில் இருந்தது என்றாலும் இந்தியாவில் மாத்திரம் நிலை பெற்று நடந்துவருகிறது. மற்ற பாகங்களில் இக்கருத்து பெரிதும் மறைந்து, ஒரு கடவுள், அதற்கு உருவமில்லை, அதற்கு ஒன்றும் தேவையில்லை, கடவுளைப் பிராத்தனை செய்வது தான் கடவுள் காரியம் என்பதாகக் கருதி பலர் நடந்துவருகிறார்கள்.
இந்தக் கருத்துக்கு மேற்பட்ட மதங்கள், மதத் தலைவர்கள், வேதங்கள் இருந்து வருகின்றன. இந்த மதக்காரர்களுக்குப் பிராத்தனை, ஜெபம், தொழுகை முதலியவைகள் தாம் முக்கிய கடவுள் தொண்டாக இருந்து வருகின்றன. இதற்குக் காலம், தலைவர், வேதம் இருந்தாலும் அவையும் பெரிதும் மூட நம்பிக்கை அடிப்படையில் தான் கற்பிக்கப்பட்டிருக்கிறன்றன.
"
இந்து மதத்திற்கு"க் காலம் பல ஆயிரம் வருஷங்கள் கொண்ட யுகக் கணக்கில் சொல்லப்படுகின்றது. தலைவர்கள் - ரிஷிகள் - முனிகள் - தெய்வீகத்தன்மை கொண்ட அவதாரங்கள், புருஷர்கள் என்கிறான். வேதங்களோ தெய்வங்களால் அசரீரியாய்ச் சொல்லப்பட்ட சப்தங்கள் என்கிறான். இந்த மூன்றையும் ஓப்புக்கொள்ளாவிட்டால் இந்துமதம் (ஆரிய மதம்) என்பது இருப்பதற்கில்லை.
அதாவது அசரீரியாய் இருந்த வேதத்தைப் பராசரன் மகன் வியாசன் தொகுத்து உருவாக்கினானாம். இந்தப் பராசன் என்பவன் பாண்டவர்களுக்குப் பாட்டனாம். இந்த வியாசன்தான் பாரதத்தைச் சொன்னானாம். இவன் சொல்ல கணபதி என்கின்ற கடவுள் எழுதினானாம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் இந்து (ஆரிய) மதம் ஏற்றத்தக்கதாகும். இதுபோல் தான் மற்ற கிறிஸ்து, இஸ்லாம் (முகமது) முதலிய மதங்களுமாகும்.
கிருஸ்துவ மதத்தலைவர் ஏசு கிருஸ்து என்பவர் 2000 - ஆண்டுகளுக்கு
முன் தகப்பனில்லாமல், பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம். ஆகவே அவர் கடவுளுக்கு மகனாம் (தேவதுமாரனாம்) ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம். செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம். பல அற்புதங்களைச் செய்தாராம். வியாதிகளைப் பார்வையால் சவுகரியப்படுத்தினாராம். ஒரு ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான பேர்களுக்குக் கொடுத்துப் பசியாற்றினாராம். குருடர்களுக்கு கண்ணைக் கொடுத்தாராம். இப்படி பல காரியங்கள் செய்தாராம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க முடியும்.
அறிவைக் கொண்டு பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக் குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்? கடவுள் தோன்றி எத்தனையோ காலம் ஆனபிறகு அப்போது (2000 வருடங்களுக்கு முன்) மாத்திரம் எதற்காக மகனை உண்டாக்கினார்? அதற்கு முந்தின காலத்தில்
ஏன் உண்டாக்கவில்லை? அப்போதெல்லாம் செத்தவvகள் இல்லையா? குருடர்கள் இல்லையா? பசித்தவர்கள் இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது?
கடவுள் செய்யவேண்டியதை – சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன் அவர் வரவில்லை?
இப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா?
இது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது? முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு? குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா?
உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப்
பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும் ஏன் சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்?
கடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது! இதுதான் கடவுள் தன்மையா? இவையெல்லாம் மனிதத் தன்மையா? மனிதக் கற்பனையா? தெய்வத்தன்மையா
ஏன் உண்டாக்கவில்லை? அப்போதெல்லாம் செத்தவvகள் இல்லையா? குருடர்கள் இல்லையா? பசித்தவர்கள் இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது?
கடவுள் செய்யவேண்டியதை – சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன் அவர் வரவில்லை?
இப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா?
இது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது? முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு? குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா?
உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப்
பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும் ஏன் சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்?
கடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது! இதுதான் கடவுள் தன்மையா? இவையெல்லாம் மனிதத் தன்மையா? மனிதக் கற்பனையா? தெய்வத்தன்மையா
ஏன் உண்டாக்கவில்லை? அப்போதெல்லாம் செத்தவvகள் இல்லையா? குருடர்கள் இல்லையா? பசித்தவர்கள் இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது?
கடவுள் செய்யவேண்டியதை – சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன் அவர் வரவில்லை?
இப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா?
இது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது? முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு? குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா?
உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப்
பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும் ஏன் சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்?
கடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது! இதுதான் கடவுள் தன்மையா? இவையெல்லாம் மனிதத் தன்மையா? மனிதக் கற்பனையா? தெய்வத்தன்மையா
ஒரு சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால் அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம், மகன், குமாரன், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம், தூதர்கள், சமயங்கள், மதங்கள், போதகர்கள் இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால் இவையெல்லாம் மூட நம்பிக்கை, அதாவது அறிவைக் கொண்டு சிந்திக்காமல் கண்முடித்தனமாய் நம்ப வேண்டியவை ஆகின்றனவா இல்லையா? இது மனிதர் என்பவர்களுக்கு ஏற்றதா என்று கேட்கிறேன்.
இதற்காகக் கோபிப்பதில் பயன் என்ன? மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால் மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய முடியும்? அறிவுள்ளவர்களே! பகுத்தறிவாதிகளே! சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர மண்டலத்திற்கு மனிதன் போய் வரும் காலம்; காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி மக்களை மடையர்களாக்காதீர்கள்!
இஸ்லாத்தின் மூட நம்பிக்கை-
இஸ்லாம் என்றாலே மூட நம்பிக்கையின் மொத்த உருவம் என்று கருதும் அளவிற்கு இன்று முஸ்லிம்களின் நிலை இருந்து வருகிறது. இந்த மூட நம்பிக்கைகளில் பெரும்பாலும் பெண்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்றால் மிகையாகாது.
இன்றுள்ள முஸ்லிம்களிடையே மூடநம்பிக்கைகள் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றன. மூடநம்பிக்கையில் மாற்றாரோடு போட்டி போடும் அளவிற்கு ஏன்? அவர்களையே மிஞ்சும் அளவிற்கு அதல பாதாளத்தில் இருக்கின்றார்கள். இவை நம்மை மறுமையில் நரகத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதை அவர்கள் சிந்திப்பது கிடையாது. முஸ்லிம் மக்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ஃபான் மாதம் 15ம் நாள் அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் 3 யாசீன் ஓதி இரவு முழுதும் நின்று வணங்கி மறு நாள் ஒரு நோன்பையும் நோற்பது வழக்கம். இந்த வழிகேட்டிற்கு பெயர் தான் சபே பராஅத்.
மேலும் மூன்று யாசீன் ஓதுவதற்கு உண்டான விளக்கம் என்பதும் சுயமாகச் சிந்திப்பவர்களுக்குப் புலப்படும். அன்று இரவு ஒரு யாசீன் ஓதினால் 1 வருடத்திற்கு எந்த முஸீபத்தும் வராது, இரண்டாவது யாசீன் ஓதினால் பரகத்(பணம்) செல்வம் கொழிக்கும், ஆயுள் அதிகரிக்கும் 3வது யாசீன் ஓதினால் அவர்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு கப்ரின் வேதனையை நீக்கி விடும் என்ற மூடநம்பிக்கை சாதாரண அறிவுபடைத்தவனுக்குக் கூட புலப்படும்.
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று ...இதை விமர்சனம் செய்தால் மனம் புண்படுகிறதாம்
மனித காட்டு மிராண்டி ஆகிவிட கூடாது.மானமும் அறிவும் உள்ள மனிதன் பகுத்தறிவுடன் சுயமரியாதை உணர்ச்சியுடன் வாழவேண்டும்
கடவுளை மற மனிதனை நினை தயவு செய்து இனிமேல் மத குறிகளை இடாதிர்கள்,கடவுளை வணங்காதிர்கள்
மதத்தை நம்புவது நீயானால் நாசமாய் போவது நீயே.
1) நமது நாட்டில் சைவ சமயத்திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந்ததா?
2) அது எது?
3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?
4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?
5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள்கைகள் என்ன?
6) அதற்கு ஆதாரம் யாது?
7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கட வுளாகக் கொண்டதா?
8) அல்லது தனித் தெய்வமில்லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத்திரமோ அடிப் படையாகக் கொண்டதா?
9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?
10) ஒரு தன்மையா?
11) ஒரு குணமா?
12) சிவனுக்கு உருவம் சொல்லப்படு கிறதே- அது ஏன்?
13) அதற்குப் பெண்டு பிள்ளைகளும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?
14) சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக் கான பெயர்கள் வடமொழியில் இருப் பானேன்?
15) ஆயிரக்கணக்கான கடவுள் களுக்கும் அவர்களது பெண்டு பிள்ளை களுக்கும் வேறு வேறு பெயர்கள் ஏன்?
16) சைவத்திற்கும், சமணக் கொள் கைகளுக்கும், பவுத்த கொள்கை களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
17) ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள் ளுகின்றதா? மறுக்கின்றதா?
18) சைவ சமயாச்சாரியர்கள் என் பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்விகளையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக்கின்றனரா?
19) சமணர்கள் வேத வேள்வியை நிந் தனை செய்தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?
20) சைவ சமயத்திற்குள்ள சித்தாந் தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?
21) சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித்தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?
22) சமயாச்சாரிகள் என்போர்களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?
23) சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர்களையும், சமணர்களையும் துன்புறுத்தியதேன்?
24) துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர்களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப் பதேன்?
25) வடமொழிக் கதைகளையும் வட மொழி புராணங்களையும் தள்ளிவிட்டால் சைவர்களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?
26) சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?
27) எத்தனைக் கடவுள்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன?
28) இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?
29) சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?
30) விக்ரக ஆராதனை உண்டா?
31) வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?
32) ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?
33) சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?
34) சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?
35) சைவக் கோயில்களில் இப் போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படு கின்றதா?
36) அது சைவத்திற்கு முரணானது அல்லவா?
37) முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?
38) கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?
39) ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல் லப்பட்டால் அது ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?
40) கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வரு கிறது?
41) பிள்ளையார் என்ற ஒரு கட வுளுக்குச் சைவத்தில் இடம் இருக் கின்றதா?
42) கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா?
43) ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?
44) சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகாபுராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?
45) நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
46) அவைத் தனித்தனி கடவுள் களா?
47) நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?
48) மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
49) சமணர்கள் கழுவேற்றப்பட்ட தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின் றார்களா? கோயில்களில் இன்னமும் திருவிளையாடல் புராண கதை உற்சவங் கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?
50) திருநீறு எதற்காகப் பூசுவது?
51) இலிங்கத்திற்கும், ஆவுடையா ருக்கும் சொல்லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?
52) ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?
53) இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?
54) கைலயங்கிரி எது? சுப்பிரமணி யன் எது? கந்தன் எது? குமரன் எது?
55) மலையரசன் மகனென்றால் என்ன?
56) இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவைகளால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?
57) இவை இப்படியே நடக்க வேண் டியது தானா?
58) இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?
59) அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்ப லாமா? அல்லது இப்படியே இருக்க வேண்டுமா?
60) சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண்டார்களா?
61) மறுபிறப்பை ஒப்புக் கொள்ளு கின்றார்களா?
62) திதிகளை ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
63) பிராமணர்களை ஒப்புக்கொள்ளு கின்றார்களா?
64) சமயாச்சாரிகளின் அற்புதங் களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
65) மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்த தாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
66) ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ் வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தலமூர்த்தி தீர்த்த புராணங்களை உண்மை என் பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
67) சைவர்களுக்குச் சரியான முறை எது?
68) சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?
69) வருணாசிரமம் உண்டா?
70) உண்டென்றால் ஆதாரம் எது?
71) இல்லை என்றால் ஆதாரம் எது?
72) இப்பொழுது அமலில் இருப் பதற்குக் காரணம் என்ன?
73) சைவ மடங்கள் எதற்கு?
74) அவைகள் இதுவரைச் சாதித்த தென்ன?
75) அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?
76) இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?
77) இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சமயத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?
78) அருகதை உடையவர் யார்?
79) பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளு கின்றார்களா?
80) வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல்களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?
facebook
sri.surash@yahoo.com
eelam.tamil@yahoo.com
Post a Comment