Friday, 22 October 2010

உன்னை நீ இழக்கிறதுதான் மச்சி.................................

நீ யாரையும் காதலிக்கிறியா ???
ஓம் 
யாரை ?
ஒரு பிள்ளையைத்தான் 
கடுமையா .........   யார் அது ?
சொல்லேலாது.
ஏன் ?
அந்தப் பிள்ளை என்ட காதலை ஏற்றுக் கொள்ளல்லை.
ம். அப்ப நீ காதலிக்கிறாய் 
அதைத்தானே முதல்லையே சொன்னனான் 
காதல் எண்டா என்ன ?
காதலிக்கிறது.
அவ்வளவுதானா 
இல்லை 
அப்ப ?
இன்னும் இருக்கு 
என்ன?? 
உனக்கு என்ன பிரச்சினை?? 
காதலிக்கிறது சரியோ ?
இல்லை 
ஏன் 
ஒரு ஆளைக் காதலிச்சிட்டு அவள் என்னைக் காதலிக்கோணும் எண்டு நினைக்குறது பிழை தானே மச்சான் 
ம்
வேறை எந்த உறவிடமிருந்தும்  இப்படி எதிர்பார்க்கிறது இல்லைத்தானே.  பெரிய ஒரு சுயநலம் பிடிச்ச உறவுதான் காதல்.  
அப்ப காதல் என்பது ஒரு தப்பான உறவுதானே 
ஓம் ஆனாலும் நான் காதலிக்கிறன்.
ஒரு விஷயம் உனக்குப் பிழை என்று தெரிஞ்சும் நீ செய்யிறாய் அப்பிடித்தானே ?
ம் 
அப்ப உன்ட சுயத்தை நீ இழக்கிறாய்
ம்
மொத்தத்திலே உன்னை இழக்கிறாய் 
ஓம் 
உன்னை நீ இழக்கிறதுதான்    மச்சி காதல் 

  

6 comments:

Ramesh Karthikeyan said...

nallarukku

செல்வா said...

ஓ , அப்படிங்களா ..?
நல்லாத்தான் கிளப்புறீங்க ..!!

தமிழன்-கறுப்பி... said...

மச்சி நடத்து! :)
இதை முழுசா சொல்லி இருக்கலாம் இப்படி பஞ்ச் வசனத்தோட நிப்பாட்டினா எப்படி?

ஆனா இது எனக்கு பிடிச்சிருக்கு :) இன்னும் நிறைய எதிர்பாக்கிறன்...

பனையூரான் said...

நன்றி Ramesh Karthikeyan, ப.செல்வக்குமார்

இதுவரைதான் ஞாபகம் இருக்கு -கறுப்பி ஏனென்டால் .......

"தாரிஸன் " said...

//ஒரு ஆளைக் காதலிச்சிட்டு அவள் என்னைக் காதலிக்கோணும் எண்டு நினைக்குறது பிழை தானே மச்சான் //
கலக்குறீங்களே மச்சி....

SN Sujeev said...

no boz...
காதல் எங்கிறது கடவுள் மாதிரி பாஸ்
மந்த கோள்களுக்கும் பூமிக்கும் இருக்கிற மிகப்பெரிய வித்த்யாச்சமே காதல் தான் பாஸ் காதல அவ்வளு சிக்கிரம வரையறுக்க முடியாது நம்ம ஒவ்வொரு அசைவிலையும் காதல் இருக்கு
காதல் மட்டும் இல்லன்ன இந்த உலகம் எப்பவோ அழிஞ்சிறுக்கும்