Saturday, 2 October 2010

நில அளவையாளனின் காதல்

உன்னைக் காதலிக்க தொடங்கின போது prospection diagram 
போல  அழகாக சிக்கலில்லாம இருந்தாய்

நீ கிட்ட கிட்ட வரும்போது Topo surveying செய்வது போல
சின்ன சின்ன வித்தியாசங்கள்
prospection diagram போல இருக்காது field data 

சின்ன சின்ன பிரச்சினைகள்தான் வாழ்க்கையில் பிடிப்புகள் ஏற்படக்காரணம்
field இல ஏற்படுகிற பிரச்சினைகள்ளதான் எங்கட திறமை அதிகரிப்பதும்.

உன்னை பற்றி எழுதும் கவிதைகள்
paln வரைவதுபோல போல ஒரு பிரசவ உணர்வு .

என்னதான் இருந்தாலும் இரவில உன்ட புகைப்படத்தை பார்ப்பது
செய்த வேலையை plan ஆகப் பார்ப்பது போன்ற ஒரு திருப்தி.

சில வேளை உன்னோட கதைக்கைக்க சந்தோசம் சில வேளை கவலை
Level line close ஆகிறதும் ஆகாததும் மாதிரி
இருந்தாலும் நான் வீட்டை சொல்லுற மாதிரி உன்னட்ட பொய் சொல்லுறதில்லை
பல்கலைக் கழகத்தில் level line ஐ   களவு செய்து close ஆக்குவது போல

சில வேளை சில கேள்விகளுக்கு எப்பவுமே பதில் சொல்ல மாட்டாய்
நானும் காத்திருப்பன் பதில் வரும் வரும்எண்டு
சில கழன்று போன control points ஐ நாங்கள் தேடுவது போல

உன்னோட கதைச்சு கதைச்சு சில விடயங்களை ஊகிச்சிக் கொள்ளுவன்
ஆனால் சில வேளை அடுத்த நாள் நீ கதைப்பது நேற்றுக் கதைத்த்தற்கும் 
சம்பந்தம் இல்லாம இருக்கும்
இரண்டு control points இக்கு இடையில வைத்து  setout பண்ணின Road centre line 
அடுத்த இரண்டு points  க்கு    இடையில்  வைத்து  பாக்கிறபோது வாற   வித்தியாசம் மாதிரி

உன் அங்க அழகை  Road cross section க்கு ஒப்பிட்டு வர்ணித்து
உன்னைக் கேவலப் படுத்தமாட்டேன் .

ஒரு முறை வீதி  ஒன்று Surveying செய்யச் சொல்லி company ஆல அறிவித்தல்.
நானும் புளுகிப் புளுகி செய்து செய்து குடுத்தாப்  பிறகு
"பழைய surveying data காணமல் போயிட்டுது அதான் திருப்ப செய்யச் சொன்னோம்
உங்கட data தேவைப் படாது தொலைந்தது  கிடைச்சிட்டுது"
ஆரோ காதலிக்கும் உன்னைக்  காதலிச்சு
கடைசியில நீ அந்த உண்மையைச் சொன்னது  போல கிடந்தது .




 
 வெயில நிண்டதால் ஏற்பட்ட கறுப்பு 
அதனால கண்ணாடி பார்க்க ஏற்பட்ட வெறுப்பு 
ஆனாலும் என்னை பார்த்து நீ சொல்ல மாட்டய் மறுப்பு 
 இந்த நினைப்பு எப்பவும் எனக்கு இருக்கு.

7 comments:

anandaraj said...

very nice

ANANDARAJ said...

ARE YOU SURVEYOR?

அன்புடன் பிரசன்னா said...

unka kavithai ellam nalla erukku..
but unka surveyor termsthan puriyala.....

பனையூரான் said...

thnx anandaraj,
//ARE YOU SURVEYOR?//
yaa

பனையூரான் said...

நன்றி பிரசன்னா

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

வடலியூரான் said...

//உங்கட data தேவைப் படாது தொலைந்தது கிடைச்சிட்டுது"
ஆரோ காதலிக்கும் உன்னைக் காதலிச்சு
கடைசியில நீ அந்த உண்மையைச் சொன்னது போல கிடந்தது .


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

//வெயில நிண்டதால் ஏற்பட்ட கறுப்பு
அதனால கண்ணாடி பார்க்க ஏற்பட்ட வெறுப்பு
ஆனாலும் என்னை பார்த்து நீ சொல்ல மாட்டய் மறுப்பு
இந்த நினைப்பு எப்பவும் எனக்கு இருக்கு.


கவிதை கவிதை பிரமாதம்... எண்டாலும் சாட்டோடை சாட்டா நீங்கள் வெஇயிலிஅ நிண்Dஅதாலை தான் கறுப்பு எண்டு சொல்ல வாறீங்கள் போலகிடக்குது