Thursday, 20 May 2010

செம்மொழியான தமிழ் மொழியாம் ..

செம்மொழி மாநாடு இப்போது  அவசியமானதா  இல்லையா  என்ற  விமர்சனத்துக்கு அப்பால்  அப்பால் இந்தப்  பதிவை நோக்கவும்.

 செம்மொழி மாநாட்டுக்காக இசைப்புயலின் இசை அமைப்பில் வெளிவந்த "செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடல் அண்மையில் கேட்க கிடைத்தது. தமிழர் வாழ்க்கை முறை தொல்காப்பியம்,   திருவள்ளுவர், ஐம்பெருங்  காப்பியங்கள்   என்பவற்றை இலகு தமிழில் நல்ல வரிகள் சேர்க்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.  அதிகமான  பாடகர்களையும்  சேர்த்திருப்பது நல்ல முயற்சி. 

அமைதியான நடையில் பாடல் ஆரம்பித்து செல்கிறது. ஆனால் இடையில் ராப் (RAP ) இசை புகுத்தப்பட்டிருப்பது  ஒரு மாதிரியாக இருக்கிறது. பாடலின் இறுதியில் வரும் பெண்குரலின் மேலைத்தேய இசையைத் தழுவிய அந்த பாடும்  முறையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இசைப்புயல் தமிழின் பெருமையை உணர்த்தும் பாடலை வழங்குகிறோம் என்று மறந்தது  போல தெரிகிறது. ரஹ்மானின் இசைத் திறமையையும் அவர் தமிழிசையில் மேலைத் தேய, வேறு நாட்டின் இசைவடிவங்களைப் புகுத்தி எமது இசைவடிவங்களையும் சிறப்பாகக் கையாண்டவர் என்பது மறுக்க முடியாது. ஜோதாஅக்பர் திரையிசையில் கையாண்ட இசை நுட்பங்களைப்  போல  எமது செம்மொழிப் பாடலுக்கும் தமிழர் பாரம்பரிய வாத்தியங்களையும் இசை வடிவங்களையும்  கையாண்டிருந்தால் பாடல் சிறப்பாக  இருந்திருக்கும்  என்பது எனது கருத்து. அவ்வாறு இல்லாவிட்டாலும் ஆகக்குறைந்தது அந்த ராப் இசையையாவது தவிர்த்திருக்கலாம்.

இசைப்புயல் எப்படியான பாடல்களை வழங்கினாலும் ஏற்றுக்கொள்ளும் என்மனம் இந்த இசையை ஏற்றுக்கொள்ளவில்லை.

17 comments:

கன்கொன் || Kangon said...

// இசைப்புயல் எப்படியான பாடல்களை வழங்கினாலும் ஏற்றுக்கொள்ளும் என்மனம் இந்த இசையை ஏற்றுக்கொள்ளவில்லை. //

எனக்கும் கிட்டத்தட்ட இதே மனநிலை தான்...

இன்னும் சிறப்பாக செயற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆனால் இந்தப் பாடலுக்கு நிறையவே வரவேற்பு இருப்பது என் பார்வையில் தான் பிழையோ என்று சிந்திக்க வைத்தது...
ஒத்த கருத்துள்ள ஒருவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி... :)

தயாளன் said...

நானும் பாடலைக் கேட்டேன்.

நீங்கள் கூறுவது முற்றிலும் சரி.

ARV Loshan said...

உங்கள் விமர்சனத்தை அப்படியே ஏற்கிறேன்..
எனக்கும் இந்த பாடல்/கீதம் பெரிதாக ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...
This comment has been removed by the author.
Krubhakaran said...

http://ilakindriorpayanam.blogspot.com/2010/05/blog-post_19.html

என் கருத்தும் இதே தான், படித்து பருங்கள்

Vasanth Kumar said...

செம்மொழியான தமிழ் மொழியாம்!
மிகச் சிறப்பான இசை.
உலகத் தமிழ் மூதறிஞர் கலைஞர்.
உலக இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான்.
ஆகா! உலகத் தமிழ் படைப்பு!

செம்மொழியான தமிழ் மொழியாம்! செம்மொழித் தமிழர்களை உணர்வுபூர்வமாக ஒன்றிணைக்க இதைவிட மிகச் சிறந்த கருவி வேறென்ன இருக்க முடியும்? தமிழின் தொன்மை, பண்பாடு, இலக்கிய மேன்மையை பார்புகழச் செய்யும் பாடல்.

மூதறிஞர் எழுத்துக்கு
இளைய தமிழனின் இசை!
கலைஞரின் எழுத்துக்கு இசையமைக்க
தனி தைரியம் வேண்டும்.
உலகத் தமிழுக்கு கவியமைக்க
தனி புலமை வேண்டும்.
இரண்டும் கைகூடினால் இப்படித்தான் இருக்கும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற போதே எல்லோரும் ஒருங்கிணைந்துவிட்டோம்.

தனித்த பாரதியார், பாரதிதாசன், அவ்வை போன்ற தமிழ் மூதறிஞர்களின் தனித்த படைப்புகளை பாடலாக்கினால், அப்பாடல் அவர்களை மட்டுமே பாடியிருக்கும். ஆனால், கலைஞர் வள்ளுவன், அவ்வை, யாதும் ஊரே யாவரும் கேளிர், கம்பன், தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று தமிழ் இலக்கிய பாடல் அடிகளையும் மற்றும் தமிழ் மூதறிஞர்கள் அனைவரையும் பாடல் வரிகளில் பயன்படுத்தி தமிழின் புகழுக்கு இன்னும் புகழ் சேர்த்துவிட்டார்.

தமிழ் அணிகலன்கள் தொல்காப்பியம், ஐம்பெரும் காப்பியங்கள் என்று தமிழுக்கு அணி சேர்த்த அத்தனை இலக்கியத்திற்கும் இங்கே சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

அமைதி வளர்க்கும் அன்பு மொழி!
அய்யன் வள்ளுவனின் தாய் மொழியாம்!
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற மொழி!
ஆதி அந்தம் இல்லாத மொழி!
ஓங்கி வளரும் உயிரான உலக மொழி!
கலை அனைத்திற்கும் வித்தான மொழி!
தமிழின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்திருக்கிறார் கலைஞர்.

தமிழிசைக் கருவிகளுடன், அயலிசைக் கருவிகளும் பயன்படுத்தியிருப்பதிலும், இடையில் பிலேசின் ஆப்ரிக்க ரேப் இசை பயன்படுத்தி இருப்பதிலும் ஒன்றும் குற்றமில்லை. அல்லாமல் உலக இசையில் செம்மொழித் தமிழ்! தமிழை வேறுபாடின்றி உலகே கேட்க்கிறது! உலகம் முழுதும் தமிழ் பரவும் வகை செய்தோம்! வாழ்க உலகத் தமிழ் இசைப் புயலே!

உழைத்து வாழ்ந்தோம்! உழைத்து வாழ்வோம்!
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
நம் மொழி!

சுதர்ஷன் said...

உங்களுடைய கருத்து என கூறியது சரி ..ஆனால் நீங்கள் எதிர் பார்க்கும் இசை.. தமிழின் பெருமையை தமிழில் எடுத்துக்கூறுவது போல .. ஒரு பிரயோசனமுமில்லை .. ரகுமானின் திறன் மேலைத்தேய இசையுடன் நமது இசையை கோர்த்து வழங்குவது . எம் தமிழர் தவிர ஏனையோரும் , உதாரணமாக மொழி தெரியாதோரும் ரசிக்க வேண்டும் .. கூடுதலாக தமிழ் மொழி தெரியாதவர்கள் வெறும் இசையை மட்டுமே வைத்துக்கொண்டு மிகவும் நன்றாக வந்திருப்பதாக கூறுகின்றனர் . தமக்கு வரிகள் விளங்கவில்லையே என கவலைப்படுகின்றனர் . பாடல் வரிகளை கையாண்ட விதம் பிடிக்கவில்லையோ ? அவருடைய வரிகளை எவராலும் இப்படி கையாள முடியாது . ஏதோ இலக்கிய கவிதை மாதிரி எழுதியதை பாடலாக்குவது கடினம். அதையும் முடித்துள்ளார் ரகுமான் . ராப் இசையின் தமிழ் உச்சரிப்பு சற்றும் குறையவில்லை நண்பரே ... மீண்டும் மீண்டும் கேளுங்கள் . எனக்கும் முதல் 5 தடவைகள் கேட்டவுடன் பிடிக்கவில்லை . கேட்டு பாருங்களேன் ... ஆனால் ஒன்று இவர்ட வரிக்கு வேற எவனும் இப்பிடி இசை போட மாட்டான் .. வந்தே மாதரம் கூட முதலில் பேசப்படவில்லை .. காட்சி அமைப்பு வந்தவுடன் பெரிதும் பேசப்பட்டது ..

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

'தாய் மண்ணே வணக்கம்' பாடலும் இதுவும் இரட்டைப் பிறவிகளா? கூடவே பாடிக்கொண்டு வந்தால் அருமையாக ஒத்துவருகிறது!
(இந்த பின்னூடத்தை இரண்டாவது முறையாக போடுகிறேன். முதலாவது என்ன ஆயிற்று?! Reject செய்யப்பட்டால் ஏனென்று ஒரு சிறிய விளக்கம் என் ஈமெயில்லுக்கு அனுப்பமுடியுமா? ப்ளீஸ்.)

பனையூரான் said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. உண்மையைச் சொன்னால் நான் ஒரு ரஹ்மான் பைத்தியம். ரகுமானின் ஹிட்டாகாத சில பாடல்கலளைக் கூட ஏதாவது இருக்கும் என்று கொஞ்சம் ஆழமாக அவரது இசையை நேசிக்கும் ரகம். செம்மொழிப் பாடலின் இசையில் ரகுமானின் திறமை நன்றாக தெரிகிறது .ஆனால் இந்த இசை இந்த சந்தர்ப்பத்துக்கு பொருத்தமற்றது போன்றே எனக்குத் தோன்றுகிறது அவ்வளவுதான். வெறுமனே இசை என்று அந்தப் பாடலை நோக்கினால் அது மிகவும் சிறப்பான ஒரு பாடல். ஆனால் இங்கு இசையைவிட பாடல் அமைக்கப்பட்டுள்ள நோக்கம் தனித்துவம் பேணப்படவில்லை என்பதே எனது கருத்து.

பனையூரான் said...

//செய்யப்பட்டால் ஏனென்று ஒரு சிறிய விளக்கம் என் ஈமெயில்லுக்கு அனுப்பமுடியுமா? ப்ளீஸ்.)
//

என்ன கோளாறு என்று தெரியவில்லை M.S.E.R.K.

நன்றி வருகைக்கும் பகிர்வுக்கும்

பனையூரான் said...
This comment has been removed by the author.
பனையூரான் said...
This comment has been removed by the author.
ரமேஷ்பாபு said...

பொத்தாம் பொதுவா நல்லா இல்லன்னு சொல்லிட முடியாது.ஆனா நல்லா இருக்குன்னும் சொல்லிட முடியாது.இந்தா பாட்ட இது வரைக்கும் நூறு முறை கேட்டு இருப்பேன்.முதல் முறை கேட்கும் போது பிடிக்கல.அடுத்த முறை பரவாலன்னு இருந்தது.அதற்கடுத்து ஒ கே வா இருந்தது.இப்ப என்னோட பேவராய்ட் பாடல்கள்ள இதுவும் ஒன்னு.ரஹ்மான் இஸ் கிரேட்.

chandni said...

mel kuriyavargalin karuthugalai muttrilum marukiren...... ippadalai ketkum anaithu tamizh makkalum naam tamizhar enbathil perumitham kolla vendum....

Anonymous said...

நானும் இந்த பாடலின் இசை வடிவமைப்பை பற்றி மனக்குறைவோடுதான் இருந்தேன், இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பை நேரில் பார்க்கும் வரை.