Tuesday, 27 April 2010

இப்பிடியும் வர்ணிக்கலாமுல்ல..

சேலை அணிந்த போது நீ மரபுக் கவிதை
சுடிதாரில் புதுக் கவிதை
ஆனால் என்கனவில் ஹைகூவாய்......
........................................................................

எட்டு மாதம் போயும் உன் இடதுகையிலுள்ள
கெளரி காப்பின் சிவப்புநிறம்  குறையவில்லை.
அது உன்னை அணைத்துக் கொண்டிருக்கும்
சந்தோச வெட்கத்தால்.
........................................................................

ஆண்டாள்மாலை போல தாவணியை நீ அணிய
(அதாங்க சிம்ரன் ஸ்ரைல்)
அடிவயிறு கலக்குதடி
நீ ஆண்டாள் போல யாரையும் நினைக்கிறியோ எண்டு.
..........................................................................
கழுத்தில் உள்ள சங்கிலியை கையிலெடுத்து
என்னோடு நீ பேசும்போது
"எப்போது இதைக் கழற்றி தாலியைக் கட்டப் போறாய்"
என கேட்பதுபோல் இருக்கிறது.
.........................................................................
அடிக்கடி உன் சேலையை சரி செய்யாதே
பாவம் உன்னைத் தொட்டுக்கொண்டிருக்கும்
சேலை நூல்கள்.
.......................................................................
பயந்து போய் தடுக்காதே
காற்றில் பறக்கின்ற  தாவணியை
உன்னை அணைப்பதை நிறுத்தி
அவை எங்கும் பறந்துவிடா ..............
                                                       நன்றி தமிழன் கறுப்பி
....................................................................
குடை பிடித்து நடக்காதே
அழகு வெளியே போகாமல்
முழுவதும் தரைக்குத் தெறித்து
பூமியதிர்ச்சி வந்துவிடும்.



6 comments:

தமிழ் மதுரம் said...

வணக்கம் நண்பா! கவிதை நகைச்சுவை கலந்து சிரிக்க வைக்கிறது. நல்லாத்தான் யோசிக்கிறீங்கள் போங்கோ.

sathishsangkavi.blogspot.com said...

//பயந்து போய் தடுக்காதே
காற்றில் பறக்கின்ற தாவணியை
உன்னை அணைப்பதை நிறுத்தி
அவை எங்கும் பறந்துவிடா//

கவிதை கலக்கல்....

வடலியூரான் said...

//எட்டு மாதம் போயும் உன் இடதுகையிலுள்ள
கெளரி காப்பின் சிவப்புநிறம் குறையவில்லை.
அது உன்னை அணைத்துக் கொண்டிருக்கும்
சந்தோச வெட்கத்தால்.

பின்னுறாய் மச்சான். உண்மையிலேயே கவிதைகள் நல்ல ஆழமான கருத்துடையதாகவும் கவித்துவமாகவும் உள்ளது.வாழ்த்துக்கள்

Muruganandan M.K. said...

எல்லாமே சிறப்பாயிருக்கு.
முதல் மாரக் இற்குத்தான்.

"குடை பிடித்து நடக்காதே
அழகு வெளியே போகாமல்
முழுவதும் தரைக்குத் தெறித்து
பூமியதிர்ச்சி வந்துவிடும்."

பனையூரான் said...

நன்றி கமல், Sangkavi, வடலியூரான்,Doctor

பனையூரான் said...
This comment has been removed by the author.