மனிதன் வேலை ஏதும் செய்யாமல் இருக்கும்போதுதான் தேவையில்லாத சிந்தனைகள் கனவுகள் எல்லாம் வந்து கெட்டுப் போகிறான் எனக் கேள்விப்பட்டதுண்டு. அனுபவிக்கும்போது உண்மைதான் போலிருக்கிறது. சிறிது நாட்களாக பகல் நேரம் முழுவதும் படிப்போடு சம்பந்தப்பட்ட வேலை ஒன்று சந்தித்ததால் ஈடுபாடாக வேலை செய்யக் கூடிய மன நிலை உருவாகியிருக்கிறது. தேவையற்ற கற்பனைகள் குறைந்து விட்டிருக்கின்றன. நீ கனவிலோ நினைவிலோ வருவதில் குறைந்திருக்கிறாய். தேவையற்ற சிந்தனைதான் காதலோ என எண்ணத் தோன்றுகிறது. இவ்வளவு காலம் கழித்துத்தான் விளங்கியதோ என சிரிக்கலாம் போலிருக்கிறது. நான் மறந்தாலும் உன்னை ஞாபகப்படுத்துகிற நண்பர்கள். இதனால் அவர்களை தலையில் தூக்கிக் கொண்டாடவும் இல்லை. வெறுக்கவும் இல்லை. சமநிலையான மனநிலை. வயது போய்விட்டதால் அப்படியோ ??? என்ன பெரியவயது ? இல்லை இல்லை கால் சதம் அண்மித்து விட்டால் பிறகென்ன? அனாலும் ஒரு மூலையில் உனக்கான இடம் உறுதியாகத்தான் இருக்கிறது. FACE BOOK இலே உனது சுவரில் PROFILE PICTURE இலே நீ போட யாரோ hi jothika where is ur soorya ?? என எழுதியிருந்த போது சிலிர்க்கின்ற மனது. ஒரு தலைக்காதல் சீ................. இல்லை இல்லை காதல் மீதான ஏக்கம் உனக்கு இருக்கா இல்லையா?? எத்தனை தரம் என்னையே நான் பார்த்துக் கேட்பது ???? எதோ வேலை செய்து கிழிச்சு எல்லாத்தையும் மறந்த ஞானி போல பேசினாயே போடா அரை லூசு ,,,,,,,,,,,.........................
..........................................................................................
பங்குனி பருவப் பாளை. இந்த தருணத்தில் யாழ்ப்பாணத்தில் நிற்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பது அளவுக்கதிகமான சந்தோசம்.
3 comments:
பருவத்தே பயிர் செய் ......காதலிக்கும் காலத்தில் காதலித்து கொள் கலியாணம் செய்யும் வயதில் அதை, செய்து கொள். பின்பு இந்தக்காலம் மீண்டும் வராது....அது போகம் தப்பிய மழை போல . வளமானவாழ்க்கைக்கு என் வாழ்த்துக்கள். மிக நீண்ட நாட்களின் பின் வலைத்தளம் வந்தேன். நட்புடன் அக்கா நிலா
//பங்குனி பருவப் பாளை. இந்த தருணத்தில் யாழ்ப்பாணத்தில் நிற்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பது அளவுக்கதிகமான சந்தோசம்.
mmmmmmmm njoy.......
எல்லாம் வயசு கோளாறுங்க
Post a Comment