Tuesday 11 August 2009

அலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பது எப்படி?

அலுவலகங்களில் என்ன தொழில் புரிபவராக இருந்தாலும் தொழில் புரியும் எல்லோரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அனேகமாக இருக்கும். "அவர் என்னைக் கணக்கே எடுக்கிறார் இல்லை , அவன் என்னை மதிக்கிறானே இல்லை " இது போன்ற வார்த்தைகளை அநேகமான தொழில் புரிபவர்கள் உதிர்ப்பார்கள். இவ்வாறான சிக்கல்களைத் தவிர்த்து சக, உயர் ,அடுத்த மட்ட ஊழியர்கள் அனைவரினதும் மதிப்பிற்கும் உரியவராக மாறுவது எப்படி என்பது பற்றி ஒரு சில அனுபவத்தகவல்கள் .


**அலுவலகத்தில் ஒரு நாளின் யாருடானான முதல் சந்திப்பாயினும் காலை வணக்கம் சொல்லத் தவறாதீர்கள்.



**சக மட்ட ஊழியர்களை (வயதில் அதிகமானோரையும் குறைந்தோரையும்)சகோதர உறவு முறை சொல்லி அழையுங்கள்.(அண்ணா,தம்பி ,அக்கா, ....)உங்களது வயதுக்காரரை பெயர் கூறி அழையுங்கள்.(முக்கியம்இவ்விரு தகவல்களும் உங்கள் சக ஊழியருடன் மாத்திரமே உயர்மட்ட அதிகாரிகளுடன் இல்லை)



**உங்களுக்கு கீழுள்ள ஊழியர்களை அவர் வயதில் அதிகமானவராக இருந்தாலும் அலுவலக நடைமுறை காரணமாக பெயர் கூறி அழைக்கும் நிர்ப்பந்தம் இருக்கலாம். அலுவலகத்தில் அதைப்பேணி அலுவலகத்திற்கு வெளியே அவரின் வயதிற்குரிய மதிப்பை அவசியம் கொடுங்கள்.



**கூட்டங்களில் உங்கள் கருத்துக்களை முன்வைக்கும்போது "நான் நினைக்கிறேன் இவ்விடயத்தை இவ்வாறு செய்யலாம் " என்று கூறுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதாவது நான் நினைக்கிறேன் என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள் . அப்படி உபயோகிக்கும்போது மற்றவர்களுக்கு நீங்கள் கர்வம் பிடித்தவர் போல ஒரு தோற்றப்பாடு ஏற்படும். எனவே " இந்த விடயத்தை இப்படி செய்தால் என்ன " என்ற பாணியில் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

**அலுவலகம் சார்ந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும்போது அழைப்பை மேற்கொண்டவர் உடனடியாக பெயரை கூறாது பேச முற்படும்போது "நீங்கள் யார் பேசுகிறீர்கள் ?" என கேட்காதீர்கள். அது அவருக்கு முகத்தில் அடித்தது போல இருக்கும் . ஆறுதலாக "உங்கட பெயரைத் தெரிஞ்சு கொள்ளலாமா?" எனக்கேளுங்கள்.



**புன்னகையை எப்போதுமே அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.



இப்படி நிறைய இருக்கு சுலபமாகக் கடைப்பிடிக்கக் கூடிய இவ்வளவு விடயங்களுமே காணும் நல்ல பெயர் எடுக்க .



இதற்கு அப்புறமும் உங்கள யாரும் மதிக்கவில்லைஎண்டா பின்னூட்டம் மூலம் சொல்லுங்கோ .

4 comments:

ஊர்சுற்றி said...

அருமையான தேவையான தகவல்கள்.

//கூட்டங்களில் உங்கள் கருத்துக்களை முன்வைக்கும்போது "நான் நினைக்கிறேன் இவ்விடயத்தை இவ்வாறு செய்யலாம் " என்று கூறுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதாவது நான் நினைக்கிறேன் என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள் . அப்படி உபயோகிக்கும்போது மற்றவர்களுக்கு நீங்கள் கர்வம் பிடித்தவர் போல ஒரு தோற்றப்பாடு ஏற்படும். எனவே " இந்த விடயத்தை இப்படி செய்தால் என்ன " என்ற பாணியில் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்//

அருமை. ரொம்ப நன்றி.

Raju said...

அய். நல்லாருக்கே...!
:)

ஆ.ஞானசேகரன் said...

//இந்த விடயத்தை இப்படி செய்தால் என்ன " என்ற பாணியில் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.//

இந்த விடயத்தை எல்லா இடங்களிலும் பயன்படுத்தினால் நல்லது

பனையூரான் said...

நன்றிகள் ஊர்சுற்றி, டக்ளஸ் , ஞானசேகரன் அண்ணா
//இந்த விடயத்தை இப்படி
பகிர்வுக்கு