வலைப்பதிவர் சந்திப்புக்கு சென்று எனது வசிப்பிடமான விடுதிக்குத் திரும்பியபின்னும் இன்னும் அந்த நினைவுகள் அகலவில்லை. என்ன நடந்தது என விலாவரியாக அநேகமானோர் பதிவுகள் போட்டுவிட்டனர் . அதைப் பற்றி பதிவுபோடாமல் அங்கால நகரேலாமக் கிடக்கு. சந்திப்பில் நிகழ்ந்த சம்பவங்களில் நெஞ்சில் நின்றவையை ...................
***இலகுவான தமிழில் அளவான சுருதியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய சதீஷன் ஆரம்பத்திலேயே ஒட்டிக்கொண்டுவிட்டார். முழுவதுமே தமிழில் தொகுத்தளிக்கும் ஒன்றுகூடல்களில் பங்குபற்றும் வாய்ப்பு (இப்போது வாழும் சூழலில் அந்த வாய்ப்பு எங்கள் பலருக்கு இல்லை. இருக்கிற இடம் அப்பிடி . சரி சரி அது சொந்த ,சோக .................ஏன் சோகக் கதையை இஞ்ச கதைப்பான்?) நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்தது பயங்கர சந்தோசம் .
பிளாக்கர் 10 வது பிறந்தநாள்
***குட்டிப் பதிவர் யசீர். வியக்க வைத்த பதிவர்.
***நிகழ்ச்சியை livestream செய்வதில் முன்னின்று உழைத்து நல்ல ஒரு விடயத்தைச் செய்ததால் எல்லாராலும் பாராட்டப்பட்ட மது.
***யாழ்தேவி, mayalanka திரட்டிகள் பற்றி விளக்கங்கள் தந்த முக்கியமான ஒருவரான மருதமூரான் என் கல்லூரி நண்பன். சந்திப்பின்போதுதான் தெரிந்தது. மிக்க மகிழ்ச்சி. சந்திப்பு முடிந்தபின் கதைக்கக் கூட நேரம் கிடைக்கவில்லை அவசரமாக சென்றுவிட்டேன் (சூழ்நிலை அப்படி). ஒரு நாள் சந்தித்துப் பேசுவோம்.
***தமிழ் விசைப்பலகை, யாழ்தேவி திரட்டி தலைப்புகளில் இடம் பெற்ற விவாதங்களில் நல்ல பல விடயங்களைப் பகிர்ந்துகொண்ட மூத்தவர்களான மேமன் கவி சேது ஆகியோர் . பல அரிய விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ள மயூரன் அண்ணாவின் தெளிவான கருத்துப் பிரேரணைகள். நகைச்சுவையான பேச்சுகள். தீர்க்கதரிசனமான சிந்தனைகள்.
*** இலங்கைப் பதிவர்களை ஒன்று சேர்க்கும் திரட்டிக்கு யாழ்தேவி என்ற பெயர் பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தை சித்தரிக்கிறது என்ற பெரும்பாலான கருத்துக்கள். காரசாரமாக கதைக்கப் பட்ட விடயங்களில் இது முக்கியத்துவமானது.
*** வார்த்தைப் பிரயோகங்களில் வட்டார வழக்குகள் பதிவுகளில் பாவிப்பது ஆரோக்கியமான விடயம் எனக் கூறப்பட்ட கருத்துக்கள் எல்லாராலும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது மிகவும் திருப்தியாக இருந்தது. இலங்கைத் தமிழை சில ஊடகங்கள் மறந்து கஷ்டப்பட்டு style tamil பேசுவது குறித்துக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
சந்திப்புக்கு வந்த பால்குடி வடையையும் , பட்டீசையும் கண்டிட்டு என்னைக் கழற்றி விட்டது . சும்மா சொல்லக் கூடாது எல்லோரையும் விழுந்து விழுந்து கவனித்தார்.
ஏற்பாட்டுக் குழுவில முக்கியமான தலைகள் நன்றிக்கும் மதிப்பிற்கும் உரியவர்கள் .
மறந்துபோயும் சீரியஸா எதையும் பேசக்கூடாது என்ற கொள்கையோடு பேச்சுக்களில் சிரிப்பையூட்டி , நிகழ்ச்சிகளில் அடிக்கடி பின்னூட்டங்களிலும் தூள் கிளப்பினார் அண்ணன் புல்லட் .
அமைதியான அண்ணன் ஆதிரை கல்லூரிக் காலத்திலேயே எனக்கு அண்ணன்.
இன்றைய நிகழ்ச்சி முழுக்க சிங்கம் என விழிக்கப் பட்ட இந்த சிங்கம்
குழந்தையைப் போல குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் அண்ணன் வந்தி
# include
void main()
{
{
clrscr();
int i;
for(i=1; i= infinitive;i++)
{
cout<<"இந்த வலைப்பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ";
getch();
}
9 comments:
////யாழ்தேவி, mayalanka திரட்டிகள் பற்றி விளக்கங்கள் தந்த முக்கியமான ஒருவரான மருதமூரான் என் கல்லூரி நண்பன். சந்திப்பின்போதுதான் தெரிந்தது. மிக்க மகிழ்ச்சி. சந்திப்பு முடிந்தபின் கதைக்கக் கூட நேரம் கிடைக்கவில்லை அவசரமாக சென்றுவிட்டேன் (சூழ்நிலை அப்படி). ஒரு நாள் சந்தித்துப் பேசுவோம்.////
மச்சான் உன்னோட பேசவேண்டும் என்று தேடியும் ஆளைக்காணேல்லா…. எங்க போனாய் அவசரமாக?.
பனையூராரே உங்களிடம் மட்டும் ஒரு ரகசியம் நானும் உங்கள் கல்லூரி பழைய மாணவன் தான்.
பனை ஊரான் உங்கள் எழுத்துக்கள் நன்றாக உள்ளன. அந்த நினைவிலிருந்து எந்நாளும் மீளமுடியவில்லை.
உங்கள் பதிவும் எங்கள் நினைவலைகளை மீட்டன..
சிங்கம் சிங்கம் என்று எல்லாரும் போட்டு அசிங்கப்படுத்துராங்கள்.. நீங்க வேற.. ;)
மருதமூரான். said...
//மச்சான் உன்னோட பேசவேண்டும் என்று தேடியும் ஆளைக்காணேல்லா…. எங்க போனாய் அவசரமாக?.//
என்ட இருக்கிற இடம் கொழும்பு இல்லை. கொழும்பில இருந்து 5 மணித்தியாலம் பயணம் செய்யோணும். தங்கின இடத்தை காலி செய்ய வேண்டிய கட்டாயம் அதான்.
வந்தியத்தேவன் said...
//பனையூராரே உங்களிடம் மட்டும் ஒரு ரகசியம் நானும் உங்கள் கல்லூரி பழைய மாணவன் தான்.//
பால்குடி எனக்குச் சொன்னவன் உங்களைப் பற்றி. ஆனால் எனக்கு மட்டும் சொல்லுறன் எண்டு பின்னூட்டத்தில சொன்னது ஆகலும் நக்கல்.
SShathiesh said...
//பனை ஊரான் உங்கள் எழுத்துக்கள் நன்றாக உள்ளன. அந்த நினைவிலிருந்து எந்நாளும் மீளமுடியவில்லை.//
நன்றி அண்ணா
LOSHAN said...
//உங்கள் பதிவும் எங்கள் நினைவலைகளை மீட்டன.. //
நன்றிகள்
//சிங்கம் சிங்கம் என்று எல்லாரும் போட்டு அசிங்கப்படுத்துராங்கள்.. நீங்க வேற.. ;)//
என்ன லோஷன் அண்ணா இதுக்கே சலிச்சா எப்பிடி ? இன்னும் எவ்வளவோ சொல்லோனும் எண்டு நினைச்சனான்.
கூட்டி வந்திட்டு கழட்டி விட்டாலும் அதை மழுப்பிறதுக்கு கேக் தந்தனான் எல்லோ...
Post a Comment