Saturday, 15 August 2009

தமிழ் சினிமா செய்த பிழை ஒன்று

இந்தப் பதிவை ஆரம்பிக்க முதல் தமிழ் சினிமாவை அளவுக்கதிகமாக நேசிப்பவர்களிடம் ஒரு சிறிய மன்னிப்பு.

தமிழ் சினிமா தமிழர் வாழ்வில் ஒரு பெரும் பங்கு வகிக்கும் அத்தியாயமாக மாறிவிட்டது. சினிமா பார்க்காத இளைஞர்கள் தொகை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கிறது. கலாச்சார பாரம்பரிய விழாக்களில் கூட சினிமாப் பாடல்கள் ஒலிக்குமளவுக்கு தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது . எதிர் காலத்தில் தமிழரின் பாரம்பரிய இசையாக தமிழ்த் திரையிசை மாற்றமடையக் கூடும். இவ்வாறான நிலை ஆரோக்கியமற்றது என்றோ ஆரோக்கியமானது என்றோ நான் கூற முனையவில்லை. திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய நன்மை தீமைகள் என கதைத்தால் கதைத்துக்கொண்டே போகலாம். தமிழ் சினிமா செய்த ஓர் பிழை பற்றியே இப் பதிவு.

தொடருங்கள் ................

பணமுள்ளவன் வீட்டில் வெகுமதியிருக்கும் ஏழை வீட்டில் நிம்மதியிருக்கும் என்பது தமிழ் சினிமாவின் தாரக மந்திரங்களில் ஒன்று. நீண்ட கால மகுட வாசகம். இவ்வாறு தொடர்ந்து ஒரு சமூகத்திற்கு கூறிக்கொண்டிருந்தால் இதன் மூலம் எதாவது நன்மையிருக்கிறதா? இக் கருத்தை காலாகாலமாக கூறும்போது அதன் மூலம் ஏதாவது அனுகூலத்தை அச்சமூகம் அடையுமா? என்னைபொறுத்தவரை தீமையே அதிகம் என்பேன்.ஏன்?......................

இந்த எண்ணக்கருவை சினிமா தனது தாரக மந்திரமாகக் கொண்டது ஏழை மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்ற ஒரு நோக்கமே ஒழிய எதுவித தூர நோக்கும் அல்ல. ஏழைகள் எப்போதுமே நிம்மதியாக இருப்பவர்கள் என அடிக்கடி கூறி அவர்களின் புண்பட்ட நெஞ்சை ஆற்றலாம் . ஆனால் அதுவே அவர்களின் முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக அமையக்கூடும் என்பது மறுக்கப்படமுடியாது. பொருளாதார ரீதியில் ஒரு உயர்ந்த ஸ்தானத்திற்கு வரும்போது தனது நிம்மதி அற்றுப் போய்விடும் என்ற ஒரு விசச்செடியை இவ்வாறான கருத்துக்கள் நீரூற்றி வளர்த்துவிடும்.

எழையாக நிம்மதியாக இருந்துவிட்டுப் போகலாம்தானே என்ற கருத்து இன்றைய உலகத்திற்கு எவ்வளவு தூரம் பொருத்தமற்றது எல்லோருக்கும் தெரியும். கவிதைஎழுதுவதற்கும், மேடைகளில் பேசி கைதட்டுப் பெறுவதற்கும் என்றால் இவ்வாறான தலைப்புக்கள் இனிப்பானதாய் இருக்கலாம்.(அன்றாட வாழ்க்கையில் பணத்தின் பங்கு பற்றி நான் இங்கு இம்சையடிப்பது போல இருக்கிறது. அதிகம் அலட்டவில்லை .)

காப்மேயர் "வெற்றிக்கான வழிமுறைகள் " எனும் நூலில் நான் எழையாக இருந்தாலும் நிம்மதியாக இருக்கிறேன் என்ற எண்ணம் அடிமனதில் எப்போதும் இருப்பதாலேயே ஏழை ஒருவன் இறுதிவரை ஏழையாகவே வாழ்கிறான் என்கிறார். மனம் போல்தான் வாழ்வு என்பது உண்மைதான்.

தமிழ் சினிமாவை மொத்தமாக குறை கூறவில்லை. எத்தனையோ நல்ல பல விடயங்களை மக்களுக்கு சினிமா கூறியிருக்கிறது. அக் கருத்து மூலம் பல சீர்திருத்தங்கள் கூட ஏற்பட்டிருக்கின்றன. பொருளாதார ரீதியில் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவன் உயர்ந்த ஸ்தானத்திற்கு வர எடுக்கும் முயற்சிகளுக்கு இவ்வாறான கருத்துக்கள் முட்டுக்கட்டையாக இருக்கும், இருந்திருக்கிறது என்பதே நான் சொல்ல வந்தது.
ஆனாலும் இன்றைய திரையுலகில் இவ்வாறான நிலைப்பாடு குறைவு. சிறிது காலத்திற்கு முன்பே இது அதிகமாகக் காணப்பட்டது.
உங்கள் கருத்துக்களை அவசியம் பின்னூட்டத்தில் எதிர்பார்க்கின்றேன்.

7 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

குண்டான எம்.ஜி. ஆர் படம் .., நன்று தல..,

அப்புறம் நீங்க சொன்ன விஷயம்..

அது சும்மா...

அதக் கேட்டுத்தான் நம்ம மக்கள் ஏழைகளாக இருக்கிறார்களா என்ன?

ச.செந்தில்வேலன் said...

நீங்கள் சொல்வது ஓரளவு உண்மையே

ஆ.ஞானசேகரன் said...

ஒரளவிற்கு யோசிக்கக்கூடியதே

க. தங்கமணி பிரபு said...

1. நீங்க உண்மைய பேசறீங்க
2. சினிமா ஒட்டுண்ணிகளான வெகுஜன ஊடகங்கள் பலகாலமாக இந்த மாயையை வளர்த்து அவர்களும் சொத்து வளர்க்கிறார்கள், கருமம் பிடித்தவர்கள் இப்போ ஊடகக்காரர்கள் சொந்த சினிமாவும் எடுக்கிறார்கள்! இந்த கிருமிகள் என்றைக்கும் தமிழ் மக்களை பகுத்து சிந்திக்க விடமாட்டார்கள்.
3. எனவே இந்த விடயத்தை இன்னும் தெளிவாக, எளிமையாக கூடவே விளக்கமாக எழுதுவீர்களானால் சமூகம் பயன்பெறும்

பனையூரான் said...

SUREஷ் (பழனியிலிருந்து) கூறியது
\\அதக் கேட்டுத்தான் நம்ம மக்கள் ஏழைகளாக இருக்கிறார்களா என்ன?\\


மக்கள் எழையாக இருப்பதற்கு இத்தான் காரணம் என்று நான் கூறவில்லை. ஆனால் இக்கருத்துகள் ஒரு ஊக்கி போன்றது.
நன்றிகள் வருகைக்கும் பகிர்வுக்கும்.

பனையூரான் said...

நன்றிகள் ச.செந்தில்வேலன் , ஆ.ஞானசேகரன்,

பனையூரான் said...

நன்றிகள் க. தங்கமணி பிரபு
பகிர்வுக்கும் தகவலுக்கும்