Friday, 28 August 2009

ஒரு வலைப்பதிவராக.........

இன்று வலைப் பதிவுகள் பாவனையும் உருவாக்கமும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வீதம் பயங்கரமாக அதிகரிக்கிறது. பயனுள்ள விடயங்கள் சம்பந்தமான வலைப் பதிவுகள் அதிகரிக்கின்ற அதே அரோக்கியமான சூழலில் மோசமானவையும் உருவாகத்தான் செய்கின்றன. சரி அதை ஒரு பக்கத்தில் வைத்துவிடுவோம். சொல்ல வந்த விடயம் என்னவெனில் ஒரு தமிழ் வலைப்பதிவராக எமக்கும் ஒரு முக்கியமான பொறுப்பு முன்னே விரிந்து கிடக்கின்றது என்பதுதான் .


அப்பிடி என்ன பொறுப்பு ? சும்மா பீலா விடாதே . வந்தமா வாசிச்சமா எழுதினமா போனோமா எண்டு இல்லாம பொறுப்பு மண்ணாங்கட்டி எண்டெல்லாம் நீங்கள் திட்ட முதல் ஞாபகப்படுத்தி தயவு செய்து திட்ட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் வணக்கம்.

தொழில்நுட்பம் சம்பந்தமான வலைப்பதிவுகள் என்று பார்க்கும்போது கணிசமான வலைப் பதிவுகள் தமிழில் இருக்கின்றன. மேலும் அவை கணணி, மென்பொருள், இணையம் சம்பந்தமாக இருப்பது சந்தோசப் பட வேண்டிய விடயம். அத்துடன் கவலைப்பட வேண்டிய விடயமும் கூட. ஏனெனில் வேறு துறை சம்பந்தமாக உள்ள வலைப்பதிவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.பொதுவாக துறை சார்ந்த வலைப்பதிவுகளின் குறைவுக்கு என்ன காரணமாக இருக்கலாம்???கலை, நாட்டுநடப்பு, நகைச்சுவை, சுவாரஸ்யம் என்ற பாணியில் எழுதும் பதிவர்கள் பொதுவாக தங்களுடைய எண்ணங்கள் மற்றவர்களிடம் சென்று அதை அவர்கள் ரசிக்கும்போதே திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றனர். ஆனால் தொழில்நுட்பம் அறிவியல் ஈடுபாடுடையவர்களிடம் அவ்வாறான மனப்பாங்கு இருப்பதில்லை. தேடலில் ஆர்வமுள்ள இவர்கள் வெளியீடு பற்றி அவ்வளவாக சிந்திப்பதில்லை. இது ஒரு குறைபாடு என நான் கூற முனையவில்லை. ஒரு சாதாரண இயல்பு. குறித்த ஓர் துறை சார்ந்த விடயம் எல்லோருக்கும் புரியாது இருப்பதே இதற்குக் காரணமாகும்.பல்வேறு துறை சார்பாக வலைப் பதிவுகள் தமிழில் உருவாக்குவது நிச்சயமாக ஓர் அரோக்கியமான சூழலை உருவாகும் என்பது உண்மை. இன்றைய உலகைப் பொறுத்த அளவில் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியே வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. அவ்வாறு வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்கினால் அவர்களின் உயர்கல்வி தாய்மொழியிலேயே இருக்கும். தமிழிலே உயர்கல்வி முறை அறிமுகப்படுத்தப்படாமைக்கு போதுமான முதல்கள் எமது மொழியில் இல்லாமையே காரணமாகும். முதல்கள் (source) என கூறுவது அறிவு முதல்களான நூல்கள், இணையத்தளங்கள் என்பன. விஞ்ஞானம் அறிவியல் சம்பந்தமான தமிழ் மொழி நூல்களைப் பெற்றுக்கொள்ளுதல் எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும்.அவ்வாறு தமிழ் மொழியிலேயே அறிவியல் நூல்கள், இணையத்தளங்கள் உருவாக வேண்டுமெனின் முதற்கட்டமாக வலைப்பதிவுகள் உருவாக வேண்டும். ஆம் சகல துறைகளிலும் வலைப் பதிவுகள் உருவாக வேண்டும். இந்த ஆர்வம் அதிகரிக்கும் பட்சத்தில் தரமான அறிவியல் ரீதியான இணையத்தளங்கள், நூல்கள் தமிழிலே வெளிவரலாம். சிறிது கற்பனை செய்து பார்க்கையில் நடக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது.ஆங்கிலத்தில் புலமை பெற்று சிறந்த அறிவியல் விஞ்ஞான நூல்களை வாசித்துப் புரிந்து கொள்ளும் இயல்பு என்பது சகலருக்கும் கிட்டிவிடாது. ஒரு இனம் என்பதற்கு அப்பால் குறித்த ஒரு மொழியைப் பேசும் சமூகத்தின் சிந்தனை அறிவு, பொருளாதார வளர்ச்சியை தாய்மொழியிலான உயர்கல்வி உயர்த்தும் என்பது நடைமுறை உண்மை. இவ்வளவு பெரிய ஒரு விடயத்தை துறைசார் வலைப்பதிவுகளின் உருவாக்கம் ஏற்படுத்தும் என்பது எனது வாதம்.

அந்த வகையில் ..................

நாம் எத்தனையோ ஒரு துறைசார்ந்த திறமையானவர்களை நண்பர்களாகக் கொண்டிருக்கலாம் . அவர்களுக்கு வலைப்பதிவு சார்ந்த நல்ல விடயங்களை தெரிவித்து அவர்களை ஓர் துறைசார் வலைப்பதிவராக உருவாக்க முயற்சித்தால் தமிழ் பேசும் மக்கள் அடையக்கூடிய நன்மைகள் பலவாக எதிர்காலத்தில் இருக்கலாம்.


பி.கு :- அளவுக்கு அதிகமா பெரிய தீர்க்கதரிசி மாதிரி அவித்துத் தள்ளியிருக்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எதோ ஒரு வேகத்தில் ஆர்வத்தில் எழுதியதே இப்பதிவு. உறக்கமில்லா இரவொன்றில் உதித்த ஓர் யோசனை இது. தயவு செய்து திட்டி மாத்திரம் பின்னூட்டம் போட்டிடாதேங்கோ .

16 comments:

ஆ.ஞானசேகரன் said...

ஞாயமான ஒன்றைதான் சொல்லுறீங்க

யோ வாய்ஸ் said...

தயவு செய்து திட்டி மாத்திரம் பின்னூட்டம் போட்டிடாதேங்கோ . //

நல்ல விஷயம் சொல்லிட்டு அப்புறம் ஏன் திட்டுவாங்க என்று நினைக்கிறீங்க. நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புதியதாக துறை சார்ந்த பதிவர்களை எழுத வைப்பது போல..முன்பே மற்ற பதிவுகளைக் காட்டிலும் வேறுபட்ட நல்ல விசயங்களைத் தருகின்ற பதிவுகளுக்கும் இடுகைகளுக்கும் ஊக்கமளிப்பதும் அவசியம்..

குடந்தை அன்புமணி said...

நல்ல விடயம் நண்பா.
சகோதரரி முத்துலட்சுமி அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.

நிலாமதி said...

இதில் திட்டுவதற்கு என்ன இருக்கிறது. பதிவுக்கு நன்றி பாராட்டுக்கள்.
நட்புடன் நிலாமதி. .

மதுவர்மன் said...

நிச்சயமாக, நீங்கள் கூறியிருப்பது போல, அறிவியல், துரைசார்ந்த பதிவுகள் அவசியமே. அத்துடன் அத்துறை சார்ந்த விடயங்களில் தமிழ் விக்கிபீடியாவிலும் பங்களிக்கலாம்.

தமிழ் பேசும் சமூகங்கள், தாய்மொழியில் அறிவியல் விடங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதில்லை என்பது நிதர்சனமான உண்மை.

அதனால் தான், நான் அதிகமாக அறிவியல் விடயங்களை எழுதுவதில் ஆர்வமாக உள்ளேன்.

அறிவியல் விடயங்கலை எழுதும்போது, சாதாரனமாக, குறைந்த நேரத்தில் எழுதமுடியாது. கூடுதலான நேரமெடுத்து, பல்வேறு மூலங்களில் ஆராய்ந்து, ஆதாரங்களுடன் எழுதும்போது, அதிக நேரமெடுப்பதும் தவிர்க்கமுடியாது.

நீங்களும் எழுதுங்கள் அறிவியல் விடயங்களை..

மயில்வாகனம் செந்தூரன். said...

நிச்சயமான, நிதர்சனமான உண்மை....

நல்ல விடயங்களையும், முயற்சிகளையும் ஆதரிக்க, அதன்படி நடக்க நாங்கள் தயார்....

பதிவுக்கு வாழ்த்துக்கள்... தொடருங்கள்....

பனையூரான் said...

ஆ.ஞானசேகரன் கூறியது
//ஞாயமான ஒன்றைதான் சொல்லுறீங்க//
நன்றி ஞானா அண்ணா

பனையூரான் said...

யோ வாய்ஸ் கூறியது
//நல்ல விஷயம் சொல்லிட்டு அப்புறம் ஏன் திட்டுவாங்க என்று நினைக்கிறீங்க. நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்//

அளவுக்கு அதிகமா கற்பனை செய்திட்டனோ எண்டு நினைச்சன்.
நன்றிகள் பகிர்வுக்கு யோ

பனையூரான் said...

முத்துலெட்சுமி கூறியது

//புதியதாக துறை சார்ந்த பதிவர்களை எழுத வைப்பது போல..முன்பே மற்ற ...//

ஓம் முத்துலெட்சுமி அக்கா நீங்கள் சொன்னது ஒரு நல்ல கருத்து.

பனையூரான் said...

குடந்தை அன்புமணி கூறியது

//நல்ல விடயம் நண்பா.
சகோதரரி முத்துலட்சுமி அவர்களின் கருத்தை வரவேற்கிறேன்.//

நன்றி அன்புமணி அண்ணா

பனையூரான் said...

நிலாமதி கூறியது

//இதில் திட்டுவதற்கு என்ன இருக்கிறது. பதிவுக்கு நன்றி பாராட்டுக்கள். //

அளவுக்கு அதிகமா கற்பனை செய்திட்டனோ எண்டு நினைச்சன்.
நன்றிகள் பகிர்வுக்கு
நிலாமதி அக்கா

பனையூரான் said...

மதுவர்மன் கூறியது..
//நிச்சயமாக, நீங்கள் கூறியிருப்பது போல, அறிவியல், துரைசார்ந்த பதிவுகள் அவசியமே. அத்துடன்... //

உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

பனையூரான் said...

மயில்வாகனம் செந்தூரன் கூறியது....

//நிச்சயமான, நிதர்சனமான உண்மை.... //


நன்றிகள் பகிர்வுக்கு

Kiruthikan Kumarasamy said...

மச்சான், நீ அப்ப இருந்தே வலு விண்ணனடா.... அதுசரி பதிவர் சந்திப்பில வந்து பதுங்கி இருந்திட்டு போயிட்டாய். ஏன்??

பனையூரான் said...

Kiruthikan Kumarasamy கூறியது ....
//மச்சான், நீ அப்ப இருந்தே வலு விண்ணனடா.... அதுசரி பதிவர்.. //
என்னத்திலையடா விண்ணன்?
பதிவர் சந்திப்பில் பேச அந்த நேரம் கரு எதுவும் இருக்கவில்லை.