Wednesday 19 August 2009

அம்மாவிடம் ஒரு மன்னிப்பு

ஊரிலிருந்தபோது ஊர்க்கோவிலோடு காலத்தைக் களித்தேன்.

ஊரைவிட்டுப் பிரிந்தபின் கடவுள் எனும் விடயம் கேள்விக்குறியானது .

காரணம் கோவிலை விட்டுப் பிரிந்ததால் அல்ல

நடந்தேறிய அநியாயங்களாலும்

உலக ஒழுங்கில் மனிதனே எல்லாம் என்ற பட்டறிவாலும்

அம்மா தொலைபேசியில் பேசியபோது

மனதில் பட்டதை சொன்னேன்

" அப்பிடி சொல்லாதையடா அப்பு " என்றாள்.

இல்லை அப்பிடித்தான் என்றேன்.

சிறிது நேரத்தின் பின் என் தங்கை

" ஏன் உப்புடிக் கதைக்கிறாய்

அம்மா சரியாக் கவலைப்படுறா " என்றாள்.

திரும்பவும் அம்மாவோடு பேசினேன்.

" நான் சொன்னதை யோசிக்காதே

சும்மா வாய்க்குள்ள வந்ததைக் கதைத்திட்டன் "

அம்மா "ம் "

தங்கச்சி " உண்மையா உனக்கு நம்பிக்கை இல்லையோ ?"

"ம்."

" அம்மா எல்லே சரியா யோசிக்கிறா "

" நான் வீட்ட வந்தாப் பிறகு எதாவது விளங்கப்படுத்தி

நம்பிக்கையை வரப் பண்ணு "

" நம்பிக்கை இல்லாமப் போனா வாறது கஷ்டம்
எண்டு அம்மா சொல்லுறா "

அம்மா என்னை மன்னித்துவிடு

என் நம்பிக்கையீனம் என்னைப் பற்றி உன்னைக்

கவலைப்பட வைத்து விட்டது.

உனக்காக எனக்குள் நம்பிக்கையை வரவழைக்கப் பார்க்கிறேன்

முடியவில்லை மன்னித்துவிடு.

பி.கு:- வரிக்கு வரி வெட்டி எழுதியுள்ளதால் இது கவிதை எழுத வெளிக்கிட்டு சொதப்பியிருக்கிறான் என திட்டாதீங்கோ .இது தொலைபேசி உரையாடலை பெரும் பகுதியாகக் கொண்ட உண்மைச் சம்பவம்.

11 comments:

பால்குடி said...

எங்களூர் அம்மாக்கள் தங்கள் பிள்ளை தன்னைக் காப்பான் என்பதை விட தன் பிள்ளையை கடவுள் காப்பான் என்பதிலேயே அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

நிலாமதி said...

கடவுள் பக்தி( எம்மை மீறிய ஒரு சக்தி ) பக்தி எம்முடைய ரத்தத்தில் ஊறியது.
அது நம்மை பழி பாவங்களில் இருந்து காப்பாற்றும் தீமை செய்ய விடாது . கடவுள் நம்பிக்கையை விட்டு தொலை தூரம் போய்விடுவாயோ என்று தான் அம்மா கவலை பட்டா. தாயின் அன்பிலே கடவுளை கண்டு , இன்று வரை உன்னை உயிரோடு காத்த இறைவனுக்கு நன்றி சொல்லு .உணவு உடை உறையுள் தந்த அந்த சக்திக்கு நன்றி சொல்லு .ஒன்றை பெற்று கொள்ளவதற்கு மட்டும் , கடவுள் அல்ல உன்னை இது வரை காத்தவனும் (சக்தி) அவன் தான் . மற்றவனை (கையிலாதவனை விட ) விட உயர்வாகக் வைத்து உன்னை எழுத வைத்திருப்பதும் அந்த சக்தி ,கடவுள்.

Unknown said...

பனையூரான்...why blood? same blood!!.. ஹும்

Unknown said...

எனக்கு சாத்திரம் பற்றிக் கதைக்க வெளிக்கிட்டு நடந்த்து... தலைப்பைப் பாக்கேக்க எங்கட பொடியன் அம்மாக்கு சொல்லாமல் ஆரையோ இழுத்துக் கொண்டு ஓடீட்டான் எண்டு பதறியடிச்சுப் போய் வந்தால்.. இவன்..

அம்மாக்குச் சொல்லும் ‘எடையும் பேசிக்கிலை இருந்து யோசிக்கோணும்' எண்டு.. (ஆர். கே. அடிக்கடி அப்பிடித்தான் சொல்லுறவர்)

Muruganandan M.K. said...

இது கதையானாலும் சரி, கவிதையானாலும் சரி்,
தலைமுறைகளுக்கு இடையேயான சிந்தனை இடைவெளியை வெளிப்படுத்துகிறது.

பனையூரான் said...

பால்குடி கூறியது............
//எங்களூர் அம்மாக்கள் தங்கள் பிள்ளை தன்னைக் காப்பான் என்பதை விட தன் பிள்ளையை கடவுள் காப்பான் என்பதிலேயே அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.//

ஓம் பால்குடி நீங்கள் சொல்வது உண்மைதான்.

பனையூரான் said...

நிலாமதி கூறியது............
//கடவுள் பக்தி( எம்மை மீறிய ஒரு சக்தி ) பக்தி எம்முடைய ரத்தத்தில் ஊறியது.//

உரிமையுடனான அறிவுரை நெகிழ வைக்கிறது அக்கா. ஆனாலும் "மற்றவனை விட உயர்வாக உன்னை வைத்திருப்பவன்" என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை விட கஷ்டங்களை ஒருவன் அனுபவிக்கிறான், ஆனால் ஏன் வாழ்வில் துன்பங்கள் குறைவுதான் என நிம்மதியடைவது எவ்வளவு பாரிய சுயநலம்.

பனையூரான் said...

Kiruthikan Kumarasamy கூறியது............
//அம்மாக்குச் சொல்லும் ‘எதையும் பேசைக்குள்ள இருந்து யோசிக்கோணும்' எண்டு.. (ஆர். கே. அடிக்கடி அப்பிடித்தான் சொல்லுறவர்)//


நன்றி கீத் என்னை மிகவும் கவர்ந்த ஆசானின் அறிவுரையை நினைவூட்டியமைக்கு.

பனையூரான் said...

Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது............
//தலைமுறைகளுக்கு இடையேயான சிந்தனை இடைவெளியை வெளிப்படுத்துகிறது.//

ஒரு சம்பவத்தை ஆழ்ந்த கண்ணோட்டத்துடன் நோக்கும் உங்கள் பார்வை பல பாடங்களைக் கற்றுத்தருகிறது டொக்டர்

Admin said...

நன்றாகவே எழுதி இருக்கிங்க.

சினேகிதி said...

உங்கட வீட்டிலயுமா :)

http://snegethyj.blogspot.com/2009/09/blog-post_13.html