தமிழ் சினிமா எத்தனையோ திறமையான இசையமைப்பாளர்களை கண்டுவிட்டது. தமிழ் திரையிசையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாற்றங்கள் கொண்டுவந்த M.S. விஸ்வநாதன், இளையாராஜா, A.R. ரஹ்மான் என ஒரு வரிசைப் படுத்தப்பட்ட தொடர் ஒன்று உள்ளது. கர்நாடக சங்கீதத்தின் பாதிப்பு அதிகமாக இருந்த திரையிசையை மெல்லிசை என்ற நிலைக்கு கூட்டிச் சென்ற பெருமை M.S.விஸ்வநாதன் அவர்களைச் சாரும். மெல்லிசைக்குள் கிராமத்து இசையை புகுத்தியவர் இளையராஜா. இலத்திரனியல் தொழில்நுட்பத்தை புகுத்தியவர் இசைப்புயல். இவர்கள் எல்லோரும் தமிழ்த் திரையிசையின் கிரீடங்கள். இவர்களைத் தவிர்த்து இன்றைய இசையுலகை நோக்கினால் யுவன், ஹரிஷ், பிரகாஷ் ,......... என நீண்ட பட்டியல் ஒன்று உள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் ஹரிஷ்ஜெயராஜ் இசையுலகில் புதுமை செய்த ஒருவர்தான். நூற்றுக்கு தொண்ணூறு வீதமான தமிழ் சினிமாப் பாடல்களில் பெண்குரலின் சுருதி(pitch) அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அந்த வழமையான பாணியை சில பாடல்களில் வித்தியாசமாகக் கையாண்டிருப்பார் ஹரிஷ். சுருதி குறைவான பெண்குரல் பாடல்கள் பலவற்றை இசையமைத்திருக்கிறார். முதல் படமான மின்னலேயில் "வசீகரா", வேட்டையாடு விளையாடு படத்தில் "பார்த்த முதல் நாளே", வாரணமாயிரத்தில் "அனல்மேலே பனித்துளி" போன்ற பாடல்களில் பெண் குரலின் சுருதியை வேறு பாடல்களில் பெண்குரலின் அவதானித்துப் பாருங்கள். மிகவும் குறைவாகவே இருக்கும். பெரும்பாலும் பாம்பே ஜெயஸ்ரீயையே இவ்வாறான கீழ்ஸ்தாயிப் பாடல்களுக்கு பாவித்திருப்பார்.
தொட்டிஜெயாவில் வரும் உயிரே என்னுயிரே பாடலில் பெண்குரலின் சுருதி ஆண்குரலைவிடக் குறைவாக இருக்கும். இவ்வாறான புதுமைகளால் மற்றைய இசையமைப்பாளர்களிடமிருந்து வேறுபடுகிறார்.
ரஹ்மானிடம் பணி புரிந்ததால் இவருடைய இசையில் அனேகமாக ரஹ்மானின் பாதிப்பு காணப்படுகிறது எனவும் பிற மொழிப் பாடல்களை நகல் செய்பவர் போன்ற விமர்சனங்களும் இவர்மீது காணப்படுகின்றது. மேலும் youtube இல் haris jeyaraj எனத் தேடும்போது copycat of haris jeyaraaj என பல காணொளிகள் காணப்படுவது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. எது எவ்வாறு இருப்பினும் மேலும் ஒரு அசாத்தியத் திறமை அநேகமான பாடல்களில் இளமையை வெளிப்படுத்தும் இசை ஹரிஷ் ஜெயராஜ் அவர்களுக்கே சொந்தம்.
விக்கிப்பீடியாவில் ஹரிஷ் தொடர்பான தகவல்களைப் பெற இங்கே சொடுக்கவும்.
8 comments:
உண்மைதான் நண்பா....
நண்பரே,
என்னை பொறுத்தவரை ரஹ்மானுக்கு அடுத்து ஹரிஷ் ஜெயராஜ்தான் சிறந்த மியூஸிக் டைரக்டர்.
இவர் ஓர் சிறந்த இசையமைப்பாளர்
என்பதை நீங்கள் குறிப்பிட்டபாடல்
கள் உறுதி செய்கின்றன.
Yes..I accept he is a good music director...But he should reduce copying songs from English albums...Proof:http://www.itwofs.com/tamil-others.html
வணக்கம்! இது என் முதல் பின்னோட்டம் உங்கள் பதிவிற்கு! ARR எவ்வளவோ melody கொடுத்திருந்தாலும் அவருடைய பாடல்கள் பலவற்றில் வார்த்தைகள் புரியாமல் இருந்தன! அந்த விஷயத்தில் ஹாரிஸ் ஜெயராஜை நிச்சயம் பாராட்டலாம், ஹாரிஸின் பாடல்களில் பெரும்பாலும் வார்த்தைகள் புரியும் படி இருக்கும்! ஆனால் Youtube-ல இருக்குற copy cat மேட்டர பாக்கும் போதுதான் தெரியுது, இன்னும் ஏன் இவரால் இந்தி சினிமாவில் கூட சாதிக்க முடியவில்லை என்று !
ஹாரீஸ் நல்ல இசையமைப்பாளர் தான் அதில் எந்த கருத்துவேறுபாடும் கிடையாது, ஆனால் இவரது இசைகள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கிறது. மின்னலேயில் ஆரம்பித்த பின்னணி இசைகளின் சில துணுக்குகளை ஏனைய சகல படங்களிலும் பாவித்திருப்பார். இந்த திரும்பதிரும்ப வரும் இசையைத் தவிர்த்தால் ஹாரீஸ் நல்ல இடத்தைப் பிடிக்கமுடியும் , இல்லையென்றால் யூடூயூப் கொப்பிகட் பட்டம் இவரைத் தொடரும்.
நல்ல ஆப்சர்வேஷன் பனையூராரே. ஆனால் அனல் மேலே பனித்துளி பாட்டு சோபிக்காததற்கு காரணம் இந்த கீழ் ஸ்தாயீ சமச்சாரத்தால்தான். சுதாவுக்கு கீழ் ஸ்தாயீ சுகமில்லை. அதுவே சௌம்யாவாக இருந்தால் பின்னுவார்.
இன்னொன்று, இன்றைய சினிமா இசை கால் இசை ஞானமும்-முக்கால் டேக்னாலஜியும்தான்.
நம்பா விட்டால் எனக்கொரு சிச்சுவேஷன் கொடுங்கள் ஒரு மணி நேரத்தில் ஒரு பாட்டு கம்போஸ் செய்து காட்டுகிறேன்!
http://kgjawarlal.wordpress.com
நன்றிகள் ஆ.ஞானசேகரன் ,
என். உலகநாதன், Thevesh, Gowtham,
குட்டி பிரபு, வந்தியத்தேவன்,Jawarlal
வருகைக்கும் பகிர்வுகளுக்கும்.
Post a Comment