6 வயதுடைய சிறுவன் ஒருவன் நித்திரை வராது கட்டிலில் படுத்தபடி தன் தந்தையிடம் "அப்பாய் அரசாங்கம் ,முதலாளி ,தொழிலாளி, மக்கள்,அதிகாரி இவங்களெல்லாம் ஆர்? " என்று கேட்கிறான்.
தந்தையும் மகனுக்கு நன்றாக விளங்கப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் "இப்ப பார் அப்பு எங்கட வீட்டை எடுத்தால் உன்ட அம்மா இருக்கிறாதனே அவ அரசாங்கம் எல்லா வேலையையும் பார்த்துக்கொள்ளுவா. நான் முதலாளி காசு உழைக்கிறவன். நீ ஒரு அதிகாரி மாதிரி நீ சொல்லுறதைத்தான் அம்மா செய்வா.உன்ட தங்கச்சி மக்கள். எங்கடவீட்டு வேலைக்காரி இருக்கிறாள்தானே அவள் தொழிலாளி" என்று ஒரு விளக்கம் கொடுக்கிறார்.
தந்தையும் மகனுக்கு நன்றாக விளங்கப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் "இப்ப பார் அப்பு எங்கட வீட்டை எடுத்தால் உன்ட அம்மா இருக்கிறாதனே அவ அரசாங்கம் எல்லா வேலையையும் பார்த்துக்கொள்ளுவா. நான் முதலாளி காசு உழைக்கிறவன். நீ ஒரு அதிகாரி மாதிரி நீ சொல்லுறதைத்தான் அம்மா செய்வா.உன்ட தங்கச்சி மக்கள். எங்கடவீட்டு வேலைக்காரி இருக்கிறாள்தானே அவள் தொழிலாளி" என்று ஒரு விளக்கம் கொடுக்கிறார்.
சிறுவனும் விளக்கத்தை கேட்டபடி நித்திரையாகிவிட்டான். நள்ளிரவில் அவனது 2 வயது தங்கச்சி வீரிட்டு அழத்தொடங்குகிறாள்.உடனே அவன் தன் தாயை எழுப்புகிறான். தாய் நித்திரையால் எழவில்லை. தந்தையை அங்கு காணவில்லை . அறையிலிருந்து வெளியே வந்து பார்க்கிறான் தந்தை நித்திரையிலுள்ள வேலைக்காரியின் காலைச் சுரண்டிக் கொண்டிருந்தார். அப்போது தங்கச்சி அழுகையை நிறுத்தியிருந்தாள். பின்னர் அவன் சென்று படுத்துவிட்டான்.
அடுத்தநாள் அதிகாலை நித்திரையால் எழுந்தவுடன் தகப்பனிடமும் தாயிடமும் " அப்பா எனக்கு நீங்கள் நேற்று இரவு சொல்லித்தந்த எல்லாம் விளங்கீற்று " என்கிறான்.
"என்னடாவிளங்கினது?" என தாய் கேட்கிறாள் .
"மக்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள் அதை அதிகாரிகள் அரசாங்கத்திடம் முறையிடுகிறார்கள். அரசாங்கம் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதேநேரம் முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள் "என்றான் .
தாய் அவனை வாரி எடுத்து முத்தமிடுகிறாள் பாவம் தகப்பன் கதை சொல்லும்போதே அவள் நித்திரை. தந்தையின் முகத்தில் ஈயாடவில்லை.
பி.கு:- suntv இன் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு முன்னர் ரசித்த நகைச்சுவை ஒன்று.
4 comments:
///"மக்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள் அதை அதிகாரிகள் அரசாங்கத்திடம் முறையிடுகிறார்கள். அரசாங்கம் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதேநேரம் முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள் "என்றான்///
ஆகா.... அருமை .
very niceda thambi, vaasichu kondu pokekka ninaichchan enkaavathu suddatho endu. lastaa thaan paaththan asaththa povathu yaru endu.
very goodda, tv la paaththatha ul vaanki, athai rasikkum padiya pathivil iddathukku... carry on. we r there as ur fans.....
நன்றி ஆ.ஞானசேகரன்,
உங்கள் வார்த்தைகள் உற்சாகத்தைத் தருகின்றன Geeththa
டேய் இதைமாதிரி கன கதை கிடக்குது.. நாங்கள் முந்தி கதைப்பம் மீன், கோப்பை, குடை...
Post a Comment