Friday, 31 July 2009

இன ஒற்றுமை என்பது இதுதானோ?

இலங்கையிலுள்ள சிங்கள மாணவர்கள் அதிகமாக கல்வி கற்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம்.சிரித்து சிந்தித்து கவலைப்பட வேண்டிய விடயம் ஒன்று.


பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சில செயற்பாடுகளை எதிர்த்தும், அரசாங்கத்தின் ஒரு சில செயற்பாடுகளை எதிர்த்தும் சுவரொட்டிகள் ஒட்டப்படுவது வழமை. இதுவரை காலமும் சிங்கள மொழியிலேயே சுவரொட்டிகள் ஓட்டப் பட்டு வந்தன. இரண்டு கிழமைகளுக்கு முதல் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திலிருந்து சுவரொட்டி ஒன்று தமிழில்மொழி பெயர்த்து எழுதப்பட வேண்டும் என அறிவித்தல் வந்திருந்தது. இன ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம் என்பதே அச்சுவரொட்டியின் சாரம்.தமிழ் மொழியிலேயே தமிழ், முஸ்லீம் மாணவர்களுக்கு எழுதிக் கொடுக்கப் பட்டிருந்தது. இதனை அப்படியே தீந்தையால் எழுதுங்கள் என்று. "சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையேயான இன ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்" என்பதே சுவரொட்டியில் எழுதப் படவேண்டிய வாசகம்.

தமிழ் மாணவர்கள் தமிழ் மீது கொண்ட காதலால் "தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களுகிடையேயான இன ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்" என எழுதிவிட்டார்கள். தமிழ் வாசிக்கக்கூடிய சிங்கள மாணவர்கள் இம் மாற்றத்தை கண்டுபிடித்துவிட்டார்கள். சுவரொட்டி எழுதிய மாணவனை சிறிது நேரம் ஏசினார்கள். பின்பு தங்களே ஒழுங்கை தாங்கள் எழுதிக் கொடுத்தது போல் மாற்றினார்கள். சுவரொட்டி ஒட்டப்பட்டது.


பி.கு:- சிறுபான்மை இனங்களின் மனதை வெல்லவேண்டும் என்பதற்காக ஒட்டப்படும் சுவரொட்டியிலேயே பெரும்பான்மையினரின் குறுகிய மனப்பான்மை.

11 comments:

பால்குடி said...

இது ஒன்றும் புதியதில்லையே.....

கீத் குமாரசாமி said...

ஹும்...

Indy said...

நம்ம தமிழ் மக்களிடம் கூட தான் இந்த அல்ப புத்தி. சுவரொட்டி வாசகங்களை ஏன் மாற்ற வேண்டும்.

Indy said...

தமிழ் மாணவர்கள் செய்தால் " தமிழ் மீது கொண்ட காதலால் ...". சிங்கள மாணவர்கள் செய்தால் :பெரும்பான்மையினரின் குறுகிய மனப்பான்மை.".
நீங்கள் ஒருத்தர் போதும் நம் மக்களை வெறி பிடிக்க வைக்க.

நன்றி.

பனையூரான் said...

@ பால்குடி
இது ஒன்றும் புதிதில்லைத்தான் அனால் ஆனால் ஒற்றுமையைப் பேணுவோம் என சிறுபான்மையினரின் மனங்களை வெல்ல முயன்று செய்த தவறு கொஞ்சம் வித்தியாசம்.

பனையூரான் said...

@ வணக்கம் indy
யாரையும் வெறி பிடிக்க வைக்க இப் பதிவை நான் போடவில்லை.ஒருவனுக்கு ஒரு கருத்தை இன ஒற்றுமை சம்பந்தமாக கூற வரும்போது அவனது இனத்தை முதன்மைப் படுத்தி கூறும்போதே அவனை அது சென்றடையும் என்பது உண்மை .இச் சுவரொட்டி ஒட்டப்பட்டது சிறுபான்மையினரின் மனங்களை வெல்வதற்காக. அது சுவரொட்டி எழுதப்பபடும்போதே தலைகீலாகிவிட்டது.மேலும் உங்களை போன்றவர்கள் சிலர் தமிழனாக பிறந்தது தமிழ்த்தாய் செய்த புண்ணியம்.நன்றி

ஆ.ஞானசேகரன் said...

அப்படியா நண்பரே

குரும்பையூர் மூர்த்தி said...

//பனையின் நிழலைத்தவிர ஏனைய அனைத்துமே பயனுள்ளவை//

எனக்கு உடன் பாடில்லை. சில காணிகளில் ஒன்றிரண்டு பனை மட்டுமே மரமாக இருக்கும். கஸ்டப்பட்டு வேலை செய்து விட்டு பனை நிழலில் இருந்து தாகம் தணிப்பது தனி சுகம்!!

வலசு - வேலணை said...

//
சிறுபான்மை இனங்களின் மனதை வெல்லவேண்டும் என்பதற்காக ஒட்டப்படும் சுவரொட்டியிலேயே ...
//
உண்மையான மாற்றங்கள் உதட்டிலிருந்தல்ல, உள்மனதின் ஆழத்திலிருந்து வரவேண்டும். மற்றையவையெல்லாம் வெறும் பாசாங்கே

பனையூரான் said...

@ குரும்பையூர் மூர்த்தி

ஒற்றைப் பனையை எடுத்தக் கொண்டால் அதன் நிழல் சூரியனின் திசையோடு மாறிக்கொண்டிருக்கும். மற்றப்படி பல பனைகள் சேர்ந்தால் நிழல்தான். "பனை நிழலையும் பகைவர் உறவையும் நம்பாதே" என பல மொழி ஒன்று உள்ளது ஞாபகம் இல்லையா? நன்றிகள் வருகைக்கும் பகிர்வுக்கும்

பனையூரான் said...

@வலசு - வேலணை

இதன் மூலம் சிறுபான்மையினரின் மனங்கள் வெல்லப்படமுடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். இச்ச சம்பவத்திலுள்ள வேடிக்கையை சொல்லவே இப் பதிவு.நன்றிகள் வருகைக்கும் பகிர்வுக்கும்