Friday 17 July 2009

நானும் 3,4 வரியில க(வி)தை எழுதுவமெண்டு...

அண்மையில் இது ஒரு கனவுக்காரனின் பக்கத்தில் ஹைக்கூ பதிவைப் படித்தபின் நானும் அப்படி ஒரு பதிவு போட வேண்டும் என்ற ஆசையில் எழுதிய பதிவு இது.








நேரத்தை தின்கிறதா?
தேடலை அதிகரிக்கிறதா?
வரையறுக்க முடியவில்லை
பதிவுலகம்......






பந்தி வைக்கையில் (சொந்தக் கதை)

"வைக்கவா?"-நான்
"வேண்டாம் "-நீ
நமக்கிடையேயான முதல் உரையாடலே முற்றும் கோணலாய்






என்போன்ற .......


"படிக்காம நடுத்தெருவிலதான் நிக்கபோறாய்"
"படிச்சாப் பிறகும் நான் நடுத்தெருவிலதான் அம்மா"
நில அளவைத்துறை மாணவன்.





கேலி


எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்

ஒருவன் மட்டும் மௌனமாய்

கேலியின் விளைவு






இணையத்தில்

உன்னிடம் வரக்கூடாது என உறுதியாக நினைக்கிறேன்

மின்னஞ்சல் பார்த்தபின் அவ்வாறு இருக்க முடியவில்லை

facebookஏ உன்னைத்தான்








இலங்கையில் ஊடகங்களின் நிலை ......




"தேவையில்லாம வாய்காட்டதே

மனுசரைச் சுடுவதுபோல சுட்டுபோடுவாங்கள் "

தாய் நாய் தன் குட்டியிடம்.






இறைவன்


கடவுள் உங்களைக் கைவிட கைவிடமாட்டார்
நமட்டுச் சிரிப்புடன் ஈழத்தமிழர்

5 comments:

ரெட்மகி said...

"வைக்கவா?"-நான்
"வேண்டாம் "-நீ
நமக்கிடையேயான முதல் உரையாடலே முற்றும் கோணலாய்
//
Super...

Unknown said...

நம்ம நண்பன் ஒருத்தன் அடிக்கடி ஒரு ஹைக்கூ சொல்வான் எங்கள் பள்ளிக்காலத்தில்... கொஞ்சம் விவகாரமாக இருக்கும்.. படித்துப் பாருங்களேன்.

ஓட்டுவதில்
இன்பமோ இன்பம்.....
மோட்டார் பைக்

பனையூரான் said...

நன்றி ரெட்மகி,Keith Kumarasamy

வருகைக்கும் பகிர்வுக்கும்,

Muruganandan M.K. said...

படங்களும் குறுங்கவிதைகளும் சிறப்பாக இருக்கின்றன. சந்தோசம்.

பனையூரான் said...

நன்றி டாக்டர்