Wednesday, 8 July 2009

கடவுள் = 0

உலகத்தில் நடக்கும் அநீதிகளை அவதானிக்கும்போது மனம் நாத்திகப் பாதையில் செல்ல எத்தனிக்கிறது. ஆனாலும் அவ் விடயத்தில் பல குழப்ப நிலைகளும் பல தெளிந்த கருத்துக்களும் ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றன. விஞ்ஞானம் எப்படி என்பதற்குத்தான் விடையளிக்கும் அனால் மெய்ஞ்ஞானமே ஏன் என்பதற்கு விடையளிக்கும். என்று அண்மையில் எங்கோ வாசித்த ஞாபகம். ஆனால் சில ஏன் என்ற கேள்விகளுக்கு மெய்ஞ்ஞானத்திடமும் பதில் இல்லை. உலகம் ஏன் படைக்கப் பட்டது? உலகத்தையும் உயிர்களையும் படைத்ததால் கடவுள் என்ன சாதித்தார்? போன்ற பல கேள்விகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் கேட்டிருக்கிறேன்.திருப்தியான விளக்கங்கள் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் ஏன் என்று கேட்டுப்பாருங்கள் இனம் புரியாத குழப்ப நிலை தோன்றும். இதற்கு இறை நம்பிக்கையுடையோர் கொடுக்கும் விளக்கம் இறைவன் மனித அறிவால் வரையறுக்க முடியாதவன் என்பது.

எது எப்படியோ அகிலம் , உலகம் என்பன எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பது பற்றி எனது நண்பன் ஒருவன் சொன்ன கருத்தில் மனம் ஒன்றிப் போய் இருக்கிறது. இதுதான் அவனுடைய விளக்கம்.
எண்கோடு ஒன்றைக் கருதுமிடத்து வலது பக்கமாக நேர் எண்கள் அதிகரித்துச் செல்கின்றன. அதேபோல் இடதுபக்கமாக மறை எண்கள் பெறுமான அடிப்படையில் குறைந்து செல்கின்றன. வலது பக்கத்தில் நேர் முடிவிலி வரைக்கும் இடது பக்கத்தில் மறைமுடிவிலி வரைக்கும் எண்களின் பரம்பல் காணப்படுகிறது. எவ்வளவுதான் எண்களின் பரம்பல் இருப்பினும் எண்கோட்டின் மொத்தப் பெறுமதி பூச்சியம் ஆகும். ஆகவே எண்கோட்டின் ஆதாரம் பூச்சியம் என்பது தெளிவு. பூச்சியத்திலிருந்து இவ்வாறு எண்கள் தோன்றியுள்ளது போல எதுவுமேயற்ற சூனியத்திலிருந்து அகிலம் ,உலகம் போன்ற அனைத்துமே தோன்றியிருக்கலாம்.
எண்கோடு
எதுவுமேயல்லாத அந்த வெறுமை நிலைதான் கடவுள் என்பது. சித்தர்கள் ஞானிகளே இறைவனின் இந்நிலையை உணர்ந்தவர்கள். இந் நிலையை அறிவது அவ்வளவு சுலபமானதொன்றல்ல.
இப்படியிருந்தது நண்பனின் விளக்கம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்????

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

ஆக, நல்ல விளக்கம்

Admin said...

நல்லதொரு விளக்கம்.... நல்ல சிந்தனை...

தமிழன்-கறுப்பி... said...

அதுக்கு சூன்யம் என்றே பெயர் வைக்கிறதுதானே,பிறகென்ன அதுக்கு கடவுள் எண்டொரு கதை?

சினேகிதி said...

நல்ல விளக்கம் பட் என்னத்த சொல்றது. கடவுள் பற்றிக் கதைக்கிறதே வில்லங்கம் இப்பெல்லாம்.

ISR Selvakumar said...

//விஞ்ஞானம் எப்படி என்பதற்குத்தான் விடையளிக்கும் அனால் மெய்ஞ்ஞானமே ஏன் என்பதற்கு விடையளிக்கும். //

நீங்கள் எழுதியுள்ள வரிகளில் ஒரு சிறிய மாற்றம்

விஞ்ஞானம் எப்படி என்பதற்குத்தான் விடையளிக்கும் அனால் மெய்ஞ்ஞானமே ஏன் என்பதற்கு விடையளிக்கும் என்று நாம் எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

ISR Selvakumar said...

பூச்சியத்திலிருந்து இவ்வாறு எண்கள் தோன்றியுள்ளது போல எதுவுமேயற்ற சூனியத்திலிருந்து அகிலம் ,உலகம் போன்ற அனைத்துமே தோன்றியிருக்கலாம்.

அணுவுக்குள் அணுவாய், அப்பாலுக்கப்பாலாய் என்று ஔவையார் இதைத்தான் எழுதியுள்ளார்

நான் தற்போது ”அவர்” என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றேன். தற்செயலாக படிக்க நேர்ந்த இந்தப் பதிவு எனக்குள் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் நீங்கள் இங்கே எழுத முயற்சித்துள்ள விஷயத்தை நாங்கள் ”அவர்” படத்தில் ஒரு பாடலாக தந்திருக்கின்றோம்.