"என்னடா இப்ப ஒரே காதல் தலைப்பிலேயே பதிவுகள் போடுறாய் ஏதாவது விசேசமோ அல்லது தோல்வியோ என அடிக்கடி கேட்கும் வடலியூரான் காதலர் தினத்தில் ஏன்டா ஒரு பதிவு போடல்லை "என்று கேட்டுவிடக் கூடாது என்பதற்காய் கஷ்டப்பட்டு எழுதும் ஒரு பதிவு. காதல் பற்றி அலசாத கவிஞர்கள், உளவியலாளர்கள், மருத்துவர்கள், ஊடகங்கள், வலைப்பதிவர்கள் என்று யாருமே இல்லை. காதல் தொடர்பாக நான் நேரடியாக கேட்டு உரையாடி வாசித்து வியந்த சில சில விடயங்கள் தொடர்கின்றன. முக்கியமான விடயம் காதல் என்றால் அன்பு .தாய் பிள்ளை மேல காட்டுவதும் காதல்தான் என அதிகப் பிரசங்கித் தனமான விடயம் எதுவும் இல்லை.
........................................
சங்க காலங்களில் ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புகின்ற போது "அவன் அவள் மேல் காமம் கொண்டான்." எனக் கூறுவது ஒரு நாகரிகமற்ற சொல்லாகக் கருதப்பட்டது. அவையிலே பிரயோகிக்கப் பட வேண்டிய அவசியம் கருதி "காதல்" என்ற சொல் மூலம் அந்த உறவு விபரிக்கப் பட்டதாம். ஆக
காதல் என்பது காமம் எனும் பதத்தின் இடக்கரடக்கலாம்.
........................................
உலகத்திலுள்ள அழகான விடயம் என்ன? காமம் ஒன்றே ஒப்பற்ற அழகுடையது. காமம் என்ற ஒன்று இல்லா விட்டால் வாழ்வியலிலே ஒரு ஆழ்ந்த ஈடுபாடு யாருக்கும் வந்துவிடாது. ஆனால் காமத்தை சிற்றின்பம் என்றும் இறைவனை உணர்தலே பேரின்பம் என்றும் மதங்கள் போதிக்கின்றன. அது பற்றி நமக்குத் தெரியாது விட்டுவிடுவோம்.
...................................................
ஒருதலைக் காதல் என்று சொல்வது சரியா?
உண்மையில் ஒருதலையாகக் காதலித்தல் என்பது காதல் இல்லையாம் . அது காதல் மீதான ஒரு ஏக்கமாம். ஆனால் இந்த காதல் மீதான ஏக்கம் எனும் உணர்வு காதலை விட புனிதமானதாம். இதிலே காதல் கொஞ்சம் தூக்கல் காமம் கொஞ்சம் கம்மி
முரளி ஒருபடத்திலே சொல்லுவார்
ஒருத்தி ஒருத்தனின் காதலை ஏற்றுக்கொள்ளும்போது அங்கு காதல் 50 %
ஒருதலையாக ஒருத்தியை விரும்பி அவள் அந்தக் காதலை மறுக்கிறபோது காதல் 75 % .
சொல்லாமலே ஒருத்தியைக் காதலிக்கின்றபோது அதாவது நீ காதலிப்பது அவளுக்கே தெரியாமல் இருக்கும்போது அங்குதான் காதல் 100 %
...............................................
காதலர்கள் காதலையும் காதலரையும் காதலிக்கும்போது அக்காதல் ஒருவேளை தோற்றுப் போனாலும் அப்பிரிவு தாங்கிக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும். ஏனெனில் காதலித்த காதலர் இல்லை ஆனால் காதலை நான் காதலிக்கிறேன்.இன்னொருவரைக் காதலிக்கலாம் என்ற நிலைப்பாடு இருக்கும். ஆனால் காதலரை மட்டும் காதலித்து அக்காதல் பிரிந்தால் சோகமே மிச்சம்.
எல்லாத்தையும் விட்டிட்டு காதலர் தினத்தை சந்தோசமாக் கொண்டாடுங்கோ.
காதலர்தின வாழ்த்துக்கள்

3 comments:
சுவாரஸியமா தான் இருந்தது..
//காதலர்கள் காதலையும் காதலரையும் காதலிக்கும்போது அக்காதல் ஒருவேளை தோற்றுப் போனாலும் அப்பிரிவு தாங்கிக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும். ஏனெனில் காதலித்த காதலர் இல்லை ஆனால் காதலை நான் காதலிக்கிறேன்.இன்னொருவரைக் காதலிக்கலாம் என்ற நிலைப்பாடு இருக்கும். ஆனால் காதலரை மட்டும் காதலித்து அக்காதல் பிரிந்தால் சோகமே மிச்சம்.
இதிலே நானும் உங்களுடன் பனையூரான்
ஒருதலையாக ஒருத்தியை விரும்பி அவள் அந்தக் காதலை மறுக்கிறபோது காதல் 75 % .
superb thanks
Post a Comment