BINARY என்று சொல்வார்களே அதுதான்.
உன்னைப் போல் ஒருவனில் கமல் மோகன்லாலிடம் "BINARYயாப் பதில் சொல்லுங்க மிஸ்டர்.மாறன் tell yes or no " என்று கூறுவார். அதுதான் அதேதான். ஒன்று அல்லது மற்றொன்று. எது வித நெகிழ்வுத் தன்மையற்றவை. கணிதத்தில் ஈரடி எண்கள் (Binary numbers)என்று உள்ளது. அதிலுள்ள இலக்கங்கள் ௦,1 மாத்திரமே.
சாதாரண இலக்கங்கள் ஈரடி எண்கள்
(பத்தின் அடிகொண்டவை)
1 =1
2 =10
3 =11
4 = 100
5 =101
என்னடா கணித பாடம் நடத்த வெளிக்கிட்டான் என்று சொல்கிறீர்கள். விளங்குது.
எதற்காக இந்த binary என்று கேட்கலாம். சொல்ல வந்த விஷயம் இதுதான். இருமை இயல்புகள் நடைமுறையில் மிகவும் குறைவே. இல்லை என்றுகூட சொல்லலாம். இல்லை என சொல்ல முடியாமைக்குக் காரணம் அனைத்துமே இருமை அற்றவை என கூறும்போது. நான் கூறும் விடயம் அங்கு இருமைத் தன்மையை சுட்டுகிறது. எதுவுமே இருமை இல்லை அல்லது அப்படி நீ கூறுவது பிழை என்று கூறலாம். இங்கு தொனிப்பது இருமை இயல்பே.
நீ நல்லவனா கெட்டவனா?
கடவுள் இருக்கிறாரா இல்லையா?
கடவுள் இருந்தால் அவர் நல்லவரா கெட்டவரா?
அவள் அழகா இல்லையா?
தமிழ் பேசும் மக்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த விதம் சரியா பிழையா ???
இவ்வாறு எண்ணற்ற கேள்விகள் கேட்டுப்பார்த்து binary யாப் பதில் கூறிப் பாருங்கள். மிகவும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். உலகம் என்பது கறுப்பு வெள்ளை நிறங்களை மாத்திரம் கொண்டதல்ல சாம்பல் நிறங்களையே பெருமளவில் கொண்டது. காப்மேயர் வெற்றிக்கான வழிமுறைகள் என்ற நூலில் இதையே குறிப்பிட்டிருப்பார்.
உரு 1 போல் வாழ்க்கை இருக்காது உரு 2 போன்றதே இந்த உலகம்
இருமை குறைவுதான் இந்த உலகத்திலே ...............
1 comment:
சரியாகச் சொன்னாய் பனை.இருமையால் எத்தனை பேர் முடிவுகளை எடுக்காமலும்,எடுத்த முடிவுகளால் இருதலைக்கொள்ளிஎறும்புகளாகவும் உள்ளனர் என்று தெரியும் தானெ.
Post a Comment