காதலுக்கான ஏக்கத்துடன் அடிக்கடி கேட்டகத் துடிக்கிற பாட்டா ஏழாம் அறிவு படத்தில ஹரிஜெயராஜ் இசையில கபிலனின் வரிகளில S .P . B இன் குரலில ஏதோ மனசுக்கு நிம்மதியை தந்து விடக் கூடிய இசையில் நல்லா இருக்கு. இளமை எண்டா அது ஹரிஷ்தான். பாடல்களில இளமையை வாலிபத்தனத்தை தரக் கூடிய நிலையில் ஹரிஷுக்கு நிகர் எவரும் இல்லை. நாங்கள் ரஹ்மான் பைத்தியம் ஆனா ஹரிஷைப் பார்த்து வியந்து போறது மெலடி பாடல்களில் அவருடைய ஒலிப் பதிவில் இருக்கிற துல்லியம் .என்னதான் சொன்னாலும் தமிழ் திரையிசையில் ரஹ்மானுக்கு அடுத்ததா எனக்கு ஹரிஷ்தான்.
coooool பனையூரான் எதுக்கு இப்படி உணர்ச்சிவசப் பட்டு சொல்லவந்தது எதோ இப்ப ஏன் ஏன் சின்னப் பிள்ளைத்தனமா ???
S .P . B இன் குரல் வரிகளிண்ட அர்த்ததத்தை இசையால் சரியாக வெளிக் கொண்டுவந்திருக்கு. பெண்கள் காதல பெரிதாக கணக்கெடுக்காமல் இருக்கிறபோது ஆண்கள் உருகி உருகி காதலித்து உடைந்து போவது என்ற கருவோடு எந்த மொழியிலும் நல்ல இசையில் அமைந்த பாடல்களின் ஆயுட்காலம் அதிகம். வழமையான உவமைகள் பல கையாளப் பட்டிருந்தாலும் தன்னுடைய உயிரோட்டமான இசையால் அவற்றை புதுப்பித்திருக்கிறார் ஹரிஷ். ஆணோட காதல் கைரேகை போல கை ரேகை போல பெண்ணோட காதல் கைக் குட்டை போல என்ற வரி ஏதோ அழுத்தமா பதிய மறுக்குது. ஆனா புல்லாங்குழலை கையில் தந்தாளே என் மூச்சுக் காற்றை வாங்கிப் போனாளே என்ற வரி அழுத்தமா நெஞ்சில நிக்குது. கைரேகை கைக்குட்டை வரியில ஒட்டு மொத்தப் பெண்களையும் குறைத்து சொல்லறதால அது பிடிக்கலை என்ற அரசியல் எதுவும் இல்லை. :) பாட்டில் கவிஞர் நிறைய இடத்தில மூங்கிலைப் பற்றி சொல்றார்.
"புல்லாங்குழலை கையில் தந்தாளே என் மூச்சுக் காற்றை வாங்கிப் போனாளே"
ஓட்டை போட்ட மூங்கில் அது பாட்டுப் பாடக் கூடும் நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும் மனம் உன்னை பற்றி பாடும் "
""காதல் ஒரு போதை மாத்திரை அதைப் போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை ""
அந்த வரியில S. P .B நக்கலா சிரிக்கிறது சூப்பர் .
அதென்ன மூங்கில் யாத்திரை நீரால் மூங்கில் அடித்து செல்வது போல எங்கே போகிறோம் என்று தெரியாம போகிற பயணம். "
"பொம்பிளைய நம்பி கெட்டுப் போனவங்க ரொம்ப... அந்த வரிசையில் நானும் கடைசியில் நின்னேன் "
ம்ம் என்று சொல்லக் கூடிய ஒரு வரி .
"பொம்பிளைய நம்பி கெட்டுப் போனவங்க ரொம்ப... அந்த வரிசையில் நானும் கடைசியில் நின்னேன் "
ம்ம் என்று சொல்லக் கூடிய ஒரு வரி .
பின்னணியில் கடத்தால் (கடம் ) கொடுக்கப் பட்டிருக்கிற பீட் பாடலுக்கு ஒரு அமைதியையும் தந்து விடுகிறது. பாடலின் மூன்றாவது நிமிடத்தில் ஒலிக்கின்ற பெண் குரல் சுவேதா மோகனுடையது.
என்னவோ இந்தப் பாட்டு மனசில நல்லா பதியுது . இதைப் பற்றி எழுத ரொம்ப பிந்தி விட்டேன் என்பது சின்ன கவலை.
இதை விட ........
அனேகமாக இசையில் சோகம் கலந்த இசை யாருக்குமே பிடித்துப் போவது வழமை. தமிழ் திரையிசையைப் பொறுத்தவரை பெரும்பாலும் காதல் சோகம், அம்மா சார்ந்த பாடல்கள் இந்த வகையில் அடங்கும். பொதுவாக கலை என்று வரும்போது மனிதன் சோகம் என்ற உணர்வைசோகத்தோடு ரசிக்கிறான். ஆனால் அதே சோகம் நிசமாக ஒருவனுக்கு ஏற்படும்போது வித்தியாசம். இசையைப் பொறுத்தவரை சோகத்தை பிரதிபலிக்கின்ற பாடல்களை அநேகமான இளைஞர்கள் தங்களுக்குள்ளே ஒரு சோகத்தை உருவகித்து அந்த இசையை ரசிப்பார்கள்.இரு தலையாகக் காதலிக்கும் காதலர்கள் கூட காதல் சோக இசையை நிறையவே ரசிப்பதை காண்கிறோம் .ஆக இவ்வாறான ஒரு வித்தியாசமான உணர்வு மனிதனிடம் இருப்பது வியப்புக்குரியதே.....

.............................................................................
அளவுக்கதிகமான வெளிச்சத்தையும்
உன்னை நினைத்து கலங்கும் கண்களையும்
.............................
No comments:
Post a Comment