உன்ட பேரை பாவிக்கிறது இல்லை
பாவிச்சா ஆருக்கும் தெரியாது
விண்ணப் படிவங்களிலும் கேட்பதில்லை உன்பெயர்
ஆனால் உன்னை ஒத்தவர்களுக்கு
கவிதை எழுதுபவர்கள் அதிகம்.
மனதிலே ஒப்பற்ற இடம் உனக்கு .
ஆனால் உன்ட பேரை பாவிக்க முடியல்லை.
மின்னஞ்சல் தனி நபர் கணக்குகளிலும்
கேட்கப்படுவதில்லை உன் பெயர்.
பாவிச்சே ஆகோணும் எண்டு உறுத்தியது மனசு
கையெழுத்திலும் கடவுச் சொல்லிலும்
உன் பெயரை நான் பாவிக்கிறன் அம்மா .....
6 comments:
அநேகர் சிந்திக்காத பகுதி, பார்த்தவுடன் கவருகிறது, வாழ்த்துக்கள்
வித்தியாசமான சிந்தனை ......வாழ்த்துக்கள்.
அருமை
தாய்மையின் மென்மையினப் உணர்த்தும் கவிதை. அருமை.
அனைவருக்கும் நன்றிகள் பாராட்டுக்களுக்கு
Post a Comment