Tuesday 1 June 2010

அவளென்றால் அவ்வளவு இஷ்டம்

நினைவில் கனவாகி கனவில் நினைவாகி உயரில் புகுந்து உணர்வை வதைக்கின்ற உறவே ..............................
உன்னை வர்ணிக்கத் துடிக்குது மனசு
நீ .................

முகத்தில் வழிகின்ற கூந்தலில் ஊசலாடுது மனசு ஏனடி ஏன்??
தலை முடியை வாரி கட்ட உனக்கும் கொம்மாவைப் போல அலுப்போ ??

நெற்றியில் சிரிக்கின்ற  பொட்டு வட்டமாய் இல்லாது நீளமாய் .....
வட்டம் வரையத் தெரியாமல் கோடு வரைந்த மொக்குப் பரம்பரைதானே உங்கட குடும்பம்.

கழுத்தில் மினுமினுக்கும் வியர்வைத் துளியிலே மேலும் சிறக்கின்ற அழகு 
கிட்ட வர முடியல்லை, நீ  கடைசியாக் குளிச்சது எப்ப ???  

குட்டைப் பாவாடையில் மினுமினுக்குது உன் வாழைத்தண்டுக் கால்கள் ..
இழுத்து மூடடி வாழைத்தண்டிலே பூச்சி அரித்த கறுப்புப் புள்ளிகள்.  

எதுக்கெடுத்தாலும் அம்மாவைக் கேட்கோணும்  என கூறும்  உன்னிலே  அதிகரிக்கிற  மரியாதை
உங்கட பரம்பரையில சொந்த புத்தி யாருக்குமே கிடையாதோ ???

பெண்களே மன்னியுங்கள் ..................

6 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதையும்.. கிண்டலும்..
வர்ணனையும்.. வஞ்சனையும்..
வாழ்த்துகளும்.. வசைகளும்..
அருமை,

நிலாமதி said...

முகத்தில் வழியும் முடி ...ஒதுக்கும் சாக்கில் உன்னை தேடும் கள்ளப்பார்வையடா...பொட்டு....என் இனத்தின் சோகம் கண்ட அடையாளம். வியர்வை கடின உழைப்பாளி நானடா ...எது கேடாலும் அம்மாவை கேட்கனும் தந்தையற்ற எனக்கு தந்தையும் தாயுமாய் என்னை வளர்த்த அன்னையடா ....அவள் ஊட்டி வளர்த்த பிள்ளையடா நான்..( பெண் மீது விழுந்த வசைகளுக்கு எதிர பாட்டு )

தமிழ் மதுரம் said...

பனையூரான் நகைச்சுவை ரசம் ததும்பி வழியுது.. பகிடியோ... பகிடி..

பனையூரான் said...

//கவிதையும்.. கிண்டலும்..
வர்ணனையும்.. வஞ்சனையும்..
வாழ்த்துகளும்//

நன்றி வெறும்பய

பனையூரான் said...

//முகத்தில் வழியும் முடி ...ஒதுக்கும் சாக்கில் உன்னை தேடும் கள்ளப்பார்வையடா//

நினைச்சன் நிலாமதி அக்காட்ட இருந்து ஏதாவது வருமெண்டு. சந்தோசம். என்ன கோபமோ அக்கா ???

பனையூரான் said...

//பனையூரான் நகைச்சுவை ரசம் ததும்பி வழியுது.. பகிடியோ... பகிடி..///
நன்றி கமல்