Thursday 31 December 2009

இந்தமுறையாவது நல்லதாய் மலர்வாய் புத்தாண்டே ....

2009 ?????????

சோகங்களை அளவின்றி வழங்கினாய்.

அதிர்ஷ்டம் இல்லாத இலக்கமோ ?

இல்லை அது தமிழருக்கு மட்டும்தான்.

எங்களால் உன்னை மன்னிக்க முடியாது.

பெருந்தன்மையோடு மன்னித்து வழியனுப்புகிறோம்.

சென்று வா .........

மனிதர்கள் செய்த தவறுக்கு நீ என்ன செய்குவாய்.

சென்று வா .........

உண்மையில் கோபப்பட வேண்டியவனிடம்

நாம் கோபப்பட முடியாது.

கோபப்பட்டால் சில வேளை உன்னுடனேயே நாங்களும்

பூவுலகுக்கு பிரியாவிடை கொடுக்க நேரிடலாம்.

சென்று வா.........

நாகரிகத்துக்காய் "சென்று வா "என சொல்லிவிட்டேன்.

நீ போ போய் விடு வராதே ........

உன்னைத் திட்டவும் பயமாய் இருக்கு.

அனுப்பி வைக்கும் உன் அயல் வீட்டுக்காரிக்காவது (2010)

உன்னுடைய பெயரால் (2009) தமிழருக்கு நிகழ்ந்த அநீதிகளை கூறு .

இன்னும் ஒரு கொஞ்ச நேரந்தான்

வடிவா அவளுக்கு விளங்கப்படுத்து.

வர ஆயத்தமாகிறாள் போல எல்லாத்தையும் ஒன்று விடாமல் சொல்லு.

வரப் போகும் அவள் எங்களைப் பார்த்து,

முகத்தில் சோகம் தெரியவில்லையே எனக் கேட்பாள்.

"அவர்களுக்கு எல்லாமே பழகிப் போய்விட்டது"

என்ற உண்மையைக் கூறு.

சரி சரி வரப்போறாள் போல கிடக்கு

நீ போ ...

நான் அவளை வரவேற்க ஒரு வாழ்த்துப்பா தயார் செய்ய வேண்டும்

"இரண்டாயிரத்துப் பத்தே

சென்ற வருடம் கண்ணீர் எங்கள் சொத்தே

எல்லோருக்கும் பிடித்ததே ஒரு வகைப் பித்தே

ஆயினும் இன்முகத்தோடு வரவேற்கிறோம்


அனைத்தையும் மறந்து விட்டே

வாராய் வாராய் மகிழ்ச்சியை மட்டும் கொண்டு வாராய் "






அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

6 comments:

sathishsangkavi.blogspot.com said...

அழகான தொகுப்பு....

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

யோ வொய்ஸ் (யோகா) said...

Wishing you a happy new year

தர்ஷன் said...

என்னையும் இம்மாதிரியான எண்ணங்களே கவ்வியுள்ளன
ஆனால் இன்னதென்று சொல்லத் தெரியாத ஒரு நம்பிக்கையும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

பெருங்காயம் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நிலாமதி said...

உங்கள் பதிவில் என் ஊரின் மண் வாசனை காண்கிறேன்.
உங்களுக்கும் புத்தாண்டு இனிதாய் பிறக்க வாழ்த்துக்கள்.
சென்றதை செலவில் வைப்போம்
இனிவருவதை எதிர்பார்த்து நிற்போம். நட்புடன் நிலாமதி அக்கா.

வடலியூரான் said...

//மனிதர்கள் செய்த தவறுக்கு நீ என்ன செய்குவாய்.
சென்று வா .........
உண்மையில் கோபப்பட வேண்டியவனிடம்
நாம் கோபப்பட முடியாது.
கோபப்பட்டால் சில வேளை உன்னுடனேயே நாங்களும்
பூவுலகுக்கு பிரியாவிடை கொடுக்க நேரிடலாம்.
சென்று வா.........

அர்த்தங்கள் அதிகம் பொதிந்த பயம், ஏக்கம் கலந்த வரிகள் நண்பா..

//நாகரிகத்துக்காய் "சென்று வா "என சொல்லிவிட்டேன்.
நீ போ போய் விடு வராதே ........

//உன்னைத் திட்டவும் பயமாய் இருக்கு.
//வரப் போகும் அவள் எங்களைப் பார்த்து,
முகத்தில் சோகம் தெரியவில்லையே எனக் கேட்பாள்.
"அவர்களுக்கு எல்லாமே பழகிப் போய்விட்டது"

எங்கள் அவலங்களை எங்களது பாணியிலேயே பொறித்திருக்கிறாய் நண்பா.. வாழ்த்துக்கள் உன் எழுத்தக்களிற்கு..