Monday 28 December 2009

காமமும் காலச்சாரமும்


கட்டுப்பாட்டை மீறுகின்ற உடலியல் ஆசைகள்.

பெண் ஸ்பரிசத்தைத் தேடுகின்ற வயது.

விலைமாதை நாடினால் நல்லவனாய் இருந்துவிடுவோமோ

என சில கணங்களில் யோசிக்கின்ற தருணங்கள்.

ஆசைகளை மெருகூட்டும் பேருந்தினுள் கூட சில்மிஷம் செய்யும் காதல் ஜோடிகள்

காலாச்சாரம் எனும் போர்வையில் மறைக்கப்படவேண்டிய உணர்வுகள்.

ஏன் இப்படி ? என்ன செய்வது.
காமத்துக்காய் கனகாலம் ஏங்குவது காலாச்சாரம் எனும் கட்டுப்பாட்டோடு வாழும் மனித இனம் ஒன்றுதான்.

எந்த உடலியல் தேவைகளையும் அவ்வப்போது நிறைவேற்றி விடுகிறோம். காமம் ஒன்றைத் தவிர.

இதனால் காமத்தை வரையறுக்கும் கலாச்சாரத்தை வெறுப்பதா ??

எந்த விடயமும் முழுக்க முழுக்க நன்மை என்று இல்லை

முழுக்க முழுக்கத் தீமையும் இல்லை

அதாவது

எதுவுமே BINARY கிடையாது.
காலாச்சாரம் காமத்துக்கு எல்லைக் கொடு கீறியபோது
பெறப்பட்ட விளைவும் இப்படித்தான்
நன்மை 98% தீமை 2%

சில இடங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டோடு வாழ்வதாலேயே மனிதஇனம் ஏனைய விலங்குகளிலிருந்து வேறுபடுகிறது.
காலாச்சாரம் என்பதன் ஆணிவேர் முறையான காமம் என்பதுதான். ஒழிய வேறேதும் இல்லை
கலாச்சாரத்தை வடிவமைத்திராவிட்டால் மனிதனின் ஆயுள்காலம்
இருபதைத் தாண்டியிருக்காது.

6 comments:

நிலாமதி said...

தற்காலத்தில் சிந்திக்க பட வேண்டிய தலைப்பு .......ஒருவனுக்கு ஒருத்தி சுகாதாரமான வாழ்வும் கூட .
பாராடுக்கள்.

cherankrish said...

Good thinking..

வடலியூரான் said...

பனை வித்தியாசமான சிந்தனை தான்...

கருணையூரான் said...

///காமத்துக்காய் கனகாலம் ஏங்குவது காலாச்சாரம் எனும் கட்டுப்பாட்டோடு வாழும் மனித இனம் ஒன்றுதான்.///

உண்மைதான் பனையூரான் ..... காம ஆசைகளை அடக்கி வைத்துக்கொண்டு கன காலம் இருப்பது மனித இனம் தான் ..ஆனால் காம உணர்வுகளை வேறு பல பல வழிகளில் நிறைவேற்றிக்கொண்டிருப்பதும் மனித இனம் தான்

கண்றாவி! said...

கலாசாரம் என்று எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். காலாசாரம் இல்லை.

thumpaiyooran said...

இன்றுதான் உனதான வலைப் பூவை கண்ணூற்ற முடிந்தது.பரவாயில்லையே வளர்க.