Saturday, 5 December 2009

தெய்வீகக் காதல்



நீ அழகிதான்
உன் அழகில் நான் மயங்கியது உண்மைதான்
உண்மையைச் சொன்னால் ......
உன் அழகால்தான் உன்னை காதலிக்கவே ஆரம்பித்தேன்
ஆனால்.... உன்னை நேசிக்கத் தொடங்கிய பின்
உன்னைவிட அழகிகளை
பார்த்து ரசிப்பதைக் கூட நிறுத்திவிட்டேன்.
என் காதல் தெய்வீகமானதில்லைத்தான்.
புனிதம் இல்லைத்தான்.
ஆனால் நடைமுறையானது.
பி.கு :- குட்டிப் பதிவாகப் போனாலும் தனிப் பதிவாக கொடுக்க வேண்டும் போல இருக்கிறது இந்த உண்மையைச் சொல்ல.


16 comments:

Unknown said...

சொந்தக் கதை சோகக்கதையா?

யோ வொய்ஸ் (யோகா) said...

எது எப்படியோ நன்றாக இருக்கிறது? கவிதையை சொன்னேன்..

கமலேஷ் said...

நல்ல கவிதை...

வடலியூரான் said...

பனை இப்ப ஒரே காதல் ரசம் கொட்டுது. என்னடாப்பா நடந்தது?

பால்குடி said...

இப்பிடியான நல்ல நல்ல விசயங்களை எங்களுக்கும் சொல்லிக் கொள்ளுங்கோ...

ஆ.ஞானசேகரன் said...

//என் காதல் தெய்வீகமானதில்லைத்தான்.
புனிதம் இல்லைத்தான்.
ஆனால் நடைமுறையானது.//

ம்ம்ம் அந்த படம் நல்லாயிருக்கே

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே இது என்னோட ஆள் இந்தப்படத்தை எடுத்துட்டு வேற படத்தை போடுங்கோ!

:)

தமிழன்-கறுப்பி... said...

எல்லாம் முடிஞ்சு இப்ப புளொக்குல தகவல் சொல்லுற அளவுக்கு வந்துட்டுது காலம்.

:)

பனையூரான் said...

கனககோபி said...
//சொந்தக் கதை சோகக்கதையா//
அப்பிடியெல்லாம் இல்லை :(

பனையூரான் said...

யோ வொய்ஸ் (யோகா) said...
//எது எப்படியோ நன்றாக இருக்கிறது? கவிதையை சொன்னேன்..//

கமலேஷ் said...
//நல்ல கவிதை..//

கவிதை என சான்றிதழ் கொடுத்தமைக்கு நன்றிகள் :)

பனையூரான் said...

வடலியூரான் said...
//பனை இப்ப ஒரே காதல் ரசம் கொட்டுது. என்னடாப்பா நடந்தது?//
சும்மா ஒரு மாறுதலுக்காக எழுதுவது வேறொன்றும் இல்லை வடலி.

பனையூரான் said...

தமிழன்-கறுப்பி... said...
//அண்ணே இது என்னோட ஆள் இந்தப்படத்தை எடுத்துட்டு வேற படத்தை போடுங்கோ!//
உதுக்கு நல்ல பழமொழி ஒன்று இருக்கு ஊருக்கு வா சொல்லுறன்.

பனையூரான் said...

தமிழன்-கறுப்பி... said...
//எல்லாம் முடிஞ்சு இப்ப புளொக்குல தகவல் சொல்லுற அளவுக்கு வந்துட்டுது காலம்.//
என்ன இருந்தாலும் உங்கள மாதிரி உண்மை எல்லாத்தையும் வலைப்பதிவில் சொல்ல என்னால முடியாது.

பனையூரான் said...

பால்குடி said...
//இப்பிடியான நல்ல நல்ல விசயங்களை எங்களுக்கும் சொல்லிக் கொள்ளுங்கோ...//
நல்ல விசயமா இது?

பனையூரான் said...

ஆ.ஞானசேகரன் said...
//ம்ம்ம்
நன்றிகள் ஞானா
//அந்த படம் நல்லாயிருக்கே//
நன்றிகள் கூகிள்

நிலாமதி said...

படத்தை பார்த்ததுமே கவிதை வருவது நியாயம் தான்.....அழகாய் இருக்கிறது உங்கள் கவிதையும் படமும்.