Friday, 25 September 2009

உலகை ஆளும் GIS - பகுதி 1

GIS எனும் பதம் பல இடங்களில் பாவிக்கப் படுவதை இன்றைய நாட்களில் உணரமுடிகிறது. அது என்ன GIS ??? பலருக்குத் தெரிந்திருக்கலாம் .இருந்தாலும் ஒரு தொடராக இப்பதிவை எழுத இருப்பதால் ஆரம்பத்தில் இருந்தே நகர்த்திச் செல்லாலாம் என இருக்கிறேன்.


GIS - Geographical Information System -புவியியல் தகவல் முறைமைகள்

புவியியல் தொடர்பான தகவல்களை தரவுகளை கையாள்வதற்குரிய கணணி மயப்படுத்தப் பட்ட ஒரு முறைமை என்று கூறலாம். புவியுடன் தொடர்பு குறிக்கத்தக்க சேகரித்தல் (Data collection) , சேமித்தல்(save) , பகுத்தாய்தல்(Analyize), மேலாண்மை(Management) செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முறைமை .ஆகும் ஒரு வரைபடம் (map) மூலம் குறிப்பிட்ட தகவல்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் GIS என்பது ஒரு பலநோக்குக் கொண்ட ஒரு தொகுதியாகும். (multypurpose). முக்கியமாக பகுத்தாய்தல் எனும் தேவைப்பாட்டை நிறைவேற்ற சிறப்பான ஒரு தொகுதி GIS இற்கு நிகர் எதுவும் இல்லை.புவியியல் தகவல்கள் தொடர்பான ஆய்வுகளில் GIS இன் பங்கு அளப்பரியது. மேலும் மருத்துவம் , பாதுகாப்பு, நகரத்திட்டமிடல் என்று இதன் வீச்சு மிகவும் பெரியது. GIS இனுடைய பாவனை பயன்பாடுகள் என்ன ?? என்பது பற்றி விரிவாக ஒரு பகுதயில் பேசுவோம். அதற்கு முன்பதாக அடிப்படை விடயங்களை முதலில்விளங்கிக் கொள்ளல் அவசியமானது .




தரவு (Data) , தகவல் (Information) இவையிரண்டுக்கும் இடையேயான வேறுபாடு என்ன ?? தரவுகள் எனப்படுபவை உள்ளீடு (input), தகவல் எனப்படுவது வெளியீடு (output) . தரவுகள் மூலம் எந்த முடிவுகளும் அணுக முடியாது. தகவல்கள் மூலமே முடிவுகள் எட்டப்படலாம். தகவல்களை உருவாக்குவதற்காக சேகரிக்கப் படுபவையே தரவுகள். தரவு ,தகவல் என்பது எல்லாத்துறையிலும் ஒரு முக்கியமாக இருப்பது போல GIS இலும் முக்கியமானது.



உதாரணம் :-

தரவு - ஒரு இடத்தை நில அளவை செய்து அதை ஒரு வரைபடமாக (plan/map) ஆக மாற்ற முதல் அதன் வடிவம். இதன் மூலம் ஒரு சாதாரண பயனாளரால் (user) எந்த விடயத்தையும் உணர முடியாது.


நில அளவை செய்யப் பட்டு வரைபடமாக மாற்ற முதல் அதன் வடிவம்.




தகவல் :- மேலே நில அளவை செய்யப்பட்ட இடத்தினுடைய வரைபடம்.(plan).



நிறைய எழுதி அலுக்கவைக்காமல் முதலாவது பதிவை சுருக்கமாக நிறைவு செய்கிறேன். இன்னும் GIS என்ற தலையங்கத்துக்குள் சரியாக புகவில்லை. தொடர்ந்து வரும் பதிவுகளில் நிறைய ஆராய்வோம். என்னுடைய இந்த புது முயற்சியை எவ்வாறு முன்னெடுத்து செல்ல வேண்டும் என பின்னூட்டத்தில் அவசியம் தெரிவிக்கவும்.

5 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு வாழ்த்துகள்

Unknown said...

வாழ்த்துக்கள்.தொடருங்கள் சேவையினை.

Muruganandan M.K. said...

சற்று புரிகிறது. வாழ்த்துக்கள். நல்ல முயற்சி

பனையூரான் said...

நன்றி ஆ.ஞானசேகரன் ,Siva, Dr.எம்.கே.முருகானந்தன்

பனையூரான் said...
This comment has been removed by the author.