Wednesday, 2 September 2009

பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு...

பால்குடி என்னட்டைக் கோலைத் தந்திட்டான் இவ்வளவு விரைவாகஎனக்கு வரும் எண்டு நினக்கல்லை.இதில என்ன புதினம் எண்டா பாடசாலைகளுக்கிடையேயான போட்டி போல என்னிடம் வந்த கோல் வந்தி, கீத், பால்குடி எண்ட கல்லூரி ஒழுங்கில் வந்திட்டுது. பதிவர்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இதில பால்குடியைப் பற்றி சொல்லியே ஆகோணும். ஒரு வார்த்தையில சொல்லுற தெண்டா இவன் ஒரு பெரிய மண்டைக்காய். விரிவா சொல்லுறதெண்டா ஒரு பதிவு காணும் எண்டு நினைக்கிறன். ஆனால் கொஞ்சம் நீளமான பதிவாய் இருக்கும். கீத் பல பதிவுகளில் இவனை பற்றி தொட்டுச் சென்றிருக்கிறான்.

மயூரன் அண்ணா தொடக்கி வைத்த இந்த விளையாட்டு உண்மையில் நல்ல ஆவணத்தகவல்களைத் தரக்கூடிய பெட்டகமாக அமையும் என்பது உண்மை . ஆனால் என் போன்ற ஆரம்பப் பதிவர்களிடம் வரும்போது சிற்சில இடங்களில் நாங்கள் நடந்து கொண்ட விதங்கள் சிரிப்பை வரவழைக்கலாம்.இருந்தாலும் ஒரு மனத்திருப்தி இருக்கிறது இவ்வாறான விடயங்களைப் பகிரும்போது .


விதி முறைகள்.

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

நான் எழுத வந்த கதை

2008 இல்தான் வலைப்பதிவுகள் பற்றி அறிந்தேன். ஒரு முறை லோஷன் அண்ணாவின் பேட்டி ஒன்று இசை உலகம் சஞ்சிகையில் வெளிவந்திருந்தது. இசை உலகம் சஞ்சிகையைத் தவறாது படிக்கும் பழக்கம் சிறிது காலம் இருந்தது. லோஷன் அண்ணாவின் பேட்டியில் அவருடைய இணையத்தள முகவரி ஒன்றும் கொடுக்கப் பட்டிருந்தது. இத் தளத்துக்கு உலாவி பல சுவரஸ்யமான விடயங்களை வாசிக்கக் கூடியதாக இருந்தது. இது பற்றி எனது சக மட்டத் தோழன் மைக்கலிடம் "லோஷன் இணையத்தளம் ஒன்று வைத்திருக்கிறார் பாத்தனியோ ??"எனக் கேட்டேன். மைக்கல் கணணி, இணையம் சம்பந்தமான விடயங்களில் ஒரு புலி. அது ஒரு இலவசத் தளம் நீ கூட வைத்திருக்கலாம் என்றான். கட்டுரைகள் எழுதுவதில் நாட்டமிருந்தமையால் எனக்கும் ஒன்று உருவாகித்தரச்சொல்லிக் கேட்டேன். வலைப் பதிவை உருவாக்கி எவ்வாறு பதிவிடுவது ,திரட்டிகள் என்று முழுக்க முழுக்கச் சொல்லித்தந்தது மைக்கல்தான். இப் பதிவில் அவனுக்கு நன்றிகள்.

எமது பல்கலைக் கழக கணணி ஆய்வு கூடம்தான் எங்கள் இணைய வாசஸ்தலம். இரவு 12.00 மணியிலிருந்து காலை 7.30 வரைதான் ஆய்வுகூடம் மூடியிருக்கும். வலைப்பதிவு ஒன்று வைத்திருப்பதால் அதிக நேரம் ஆய்வு கூடத்திலேயே செலவாகியது. ஆரம்பத்தில் நான் வைத்திருந்த http://panaiyooran.blogspot.com/ என்ற வலைப்பதிவு NTAMIL திரட்டியால் தாக்கிய வைரஸ் சிக்கலால் அழிந்துவிட்டது. பலருக்கு இந்தச் சிக்கல் ஏற்பட்டிருந்ததை அறிந்தபின் இந்த வலைப்பதிவை உருவாக்கிக் கொண்டேன் . பின்பு பிரபல தொழில்நுட்ப பதிவர்கள் இணைக்கும் திரட்டிகளையே இணைத்துக் கொண்டேன்.

வலையுலகத்துக்கு வந்தபின் முதலில் எனக்குப் பதிவராக அறிமுகமாகியவன் தமிழன் கறுப்பி ஊர்த்தோழன். நல்ல கவிஞனாக இவனை எனக்குதெரியும் . அதற்குப்பின் பலரது அறிமுகங்கள் கிடைத்தன. இன்று நான் ஒரு வலைப்பதிவர் என பலகலைக் கழக நண்பர்கள் பலருக்குத் தெரியும் பனையூரான் என்று அழைப்பதும் இவனோட சில விசயங்கள் கதைக்கக் கூடாது பதிவில் போட்டுவிடுவான் எனவும் ஒரு புகைப்படம் எடுத்தால் கூட " இதை blog இலை போடுறதில்லை "போன்ற அரோக்கியமான நக்கல்களுடன் வலையுலகத்துக்கு வெளியே வாழ்க்கை நகர்கிறது.

எழுதியது எவ்வாறு ?

தமிழ் எழுத்துருவிலோ தட்டச்சு முறையிலோ தட்டச்சிட எனக்குத் தெரியாது. இன்றைய சூழலில் அந்தத் தேவையும் எனக்கு ஏற்படவில்லை. தெரிந்ததெல்லாம் amma அம்மாதான்.

விளையாட்டுக்கு அழைப்பது

லோஷன்

இவரைப் பார்த்துத்தான் நான் பதிவுலத்திற்கு வந்தேன். இவரைப் பற்றி நான் அறிமுகம் தரத்தேவையில்லை. எங்கிருந்தாலும் ஆயத்தமாகுங்கள் அண்ணா.

தமிழன் கறுப்பி

நல்ல கவிஞன். வாசிப்பை உயிர் போல நேசிப்பவன். இப்போது மத்திய கிழக்கில் பணி புரிகின்றான் . வாங்கோ தமிழன்.

சுபாங்கன்

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் தொழில்நுட்பம் சம்பந்தமான நல்ல விடயங்களைத் தரக்கூடியவர். பல்கலைக்கழக வாழ்வுபற்றி இவரது சில பதிவுகள் நெஞ்சைத் தொட்டவை.

யாழினி

கவிதைகளால் வலைப்பதிவை அலங்கரிப்பவர். காத்திரமான விடயங்களையும் கவிதையில் பிரதிபலிப்பவர். நிலவில் ஒரு தேசத்தை உருவாக பாடுபடுபவர்.

பி.கு:- மூத்த பிரபல பதிவர்களையும் அழைக்கக் கிடைத்ததில் உண்மையில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட பதிவாக தரமுடியவில்லை என்பது வருத்தம்தான் . இருப்பது இவ்வளவுதான் என்ன செய்வது?

இப்போது யாருடைய வலைப்பதிவையும் தொடர்வதற்காக என்னால் புகுபதிகை செய்ய முடியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் தெரியப் படுத்தவும்.

8 comments:

தமிழன்-கறுப்பி... said...

அழைப்புக்கு நன்றி நண்பா...
என்ன அவசரப்பட்டு முடிச்ச மாதிரி இருக்கு,

என்னைப்பற்றி கவிஞன் அப்படியெண்டு ஏதோ அறிமுகம் குடுத்தமாதிரி இருக்கு பாவம் நண்பா படிக்கிற மக்கள் :)

வெள்ளிக்கிழமை பதிவை எதிர்பார்க்கலாம்...

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் வாழ்த்துகள்

யாழினி said...

ஆஹா நான் காத்திரமான கவிஞரா? எனக்கே சிரிப்பு வந்திற்றுது இதை வாசித்தவுடன். நன்றி பனையூரன் என்னை பதிவெழுத அழைத்தமைக்கு!

பால்குடி said...

இக்கட்டான சூழலிலும் உன் பணி தொடர வாழ்த்துக்கள் நண்பா...

ARV Loshan said...

பனையூரான், ஏன் மூலமாக நடந்த ஒரு சில நன்மைகளில் பனையூரான் என்ற பதிவர் கிடைத்ததும் என்பது மகிழ்ச்சி..

என்னை மறுபடி நீங்களே அழைத்திருப்பது இன்னுமொரு சந்தோசம்.. இன்றே ஆரம்பிக்கிறேன்.

பனையூரான் said...

அழைப்பை ஏற்றுக்கொண்ட உங்களுக்கு நன்றிகள் (தமிழன்-கறுப்பி,யாழினி, LOSHAN )

பனையூரான் said...

நன்றிகள் ஆ.ஞானசேகரன்,பால்குடி

Subankan said...

அழைப்பிற்கு நன்றி. பனையூரிலிருந்து நேற்றிரவுதான் திரும்பினேன். விரைவில் எழுதிவிடுகிறேன்.