Saturday 27 June 2009

facebook ஆல் சாதித்தவையும் சறுக்கியவையும்.


அதிகமானோர் உலாவரும் வலைத்தளங்களின் வரிசையில் facebook நான்காம் இடம் வகிக்கின்றது. குறுகிய காலத்தில் இதன் வளர்ச்சி அபரிதமானது. பயனாளர் பற்றிய உண்மைத் தன்மைகள், பிடிக்காத எதனையும் அகற்றக்கூடிய வசதிகள் போன்ற சிறந்த தீர்க்கதரிசனமான அமைப்பால் வலைப் பாவனையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

facebook ஐ உபயோகித்தல் இன்று பல பேர் மத்தியில் ஒரு போதையாக மாறியுள்ளது.உதாரணத்துக்கு எமது பல்கலைக்கழகத்திலே கணனி ஆய்வுகூடத்திற்கு வந்தவுடன் முதலாவதாக facebook ஐ திறக்கும் மாணவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.இந் நிலை எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது என்பதை என்னால் வரையறுக்க முடியவில்லை. அனால் நான் facebook மூலம் சில விசயங்களை சாதித்திருக்கிறேன். சில விடயங்களில் சறுக்கியிருக்கிறேன். "இவன் சாதிச்சா என்ன சறுக்கினா நமக்கென்ன" என்று கேட்காதீர்கள். எதாவது உங்களோடு ஒத்துப்போறானா? என்று பாருங்கள்.

பாவிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை பாடசாலை காலத்தில் திக்குத்திக்காக பிரிந்த எத்தனையோ தோழர்களை சந்தித்துவிட்டேன். அவர்களுடனான தொடர்பை புதுப்பித்துள்ளேன். ஒரு பெரிய நட்புவட்டத்தின் அங்கத்தவனாக facebook என்னை மாற்றியிருக்கிறது. பலரின் பிறந்தநாட்களை ஞாபகப்படுத்தியிருக்கிறது.(அப்பிடி முறைத்துப் பார்க்காதீங்கோ) மேலும் எனது ஊரிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் சொந்தங்கள், அயலவர்கள் ,நண்பர்களை சந்தித்துவிட்டேன். எமது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளிநாடுகளில் வசிக்கும் அண்ணன்மாரோடு தொடர்புகளைப் பேணி நல்ல ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறேன். இவையே நான் சாதித்தவை. அனால்.....

எதுவித பலனும் இன்றி சில தோழிகளுடனான அரட்டைகள் எத்தனையோ மணித்தியாலங்களைத் தின்றுவிட்டது. இது இக்கால தொழில்நுட்ப வளர்ச்சியால் இளம்பருவத்தினரிடையே காணப்படும் ஒரு நோய். பயன் எதுவுமின்றி இளஞ்சமுதாயம் நேரத்தை அநியாயமாக்கும் செயலாக எதிர்ப் பாலாருடனான அரட்டை இன்று பெரும் விடயமாக உருவெடுத்துள்ளது. இவற்றில் காதல் என்ற அணுகுமுறையிலான அரட்டைகள் என்பது வெகு சொற்பமே. "நீ அவளைக் காதலிக்கவும் இல்லை காதலிக்கவும் போவதில்லை ஏன் மச்சான் இவ்வளவு நேரத்தை அவளோடு facebook இல் செலவழிக்கிறாய்?" என்று கேட்டால் பதில் "எல்லாம் ஒரு சின்ன சந்தோசம்தான்" என்று இருக்கும். (நான் கூட இதற்கு விதிவிலக்கில்லை) ஆக இது எமது குறைபாடில்லை.மனிதனின் இயல்பு அவ்வாறானதே. இவ்வாறான செயற்பாட்டால் கல்வி சம்பந்தமான எத்தனையோ விடயங்களை செய்வதற்கான நேரத்தை இழந்திருக்கிறேன்.இது எக்காலத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.

பொழுதுபோக்கு சாதனங்கள் எதுவுமே மிகையாகப் பாவிக்கும்போது நன்மையை விட தீமையையே தருகின்றது. ஆனால் இன்று பலருக்கு facebook அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதை எவ்வாறு பாவிக்கலாம் என்பது பற்றி எனது அனுபவம் மூலம் சில ........

எவ்வாறு பாவிக்கலாம்?

** அரட்டைகளிலேயே அதிக நேரம் செலவாகின்றது எனின் offline இல் வேலைகளை செய்யுங்கள்.

** எதாவது நல்ல விடயங்களை புகைப்படங்கள் மூலமோ குறிப்புகள் மூலமோ அடிக்கடி பகிர்ந்துகொள்ளும் பழக்கம் இருந்தால் வலைப்பதிவராகுங்கள். (வலைப்பதிவுகளும் நேரத்தை விழுங்குபவைதான் ஆனால் ஏதாவது வகையில் உங்கள் தேடல் அதிகரிக்கும்)

** நல்ல துறை சார்ந்த குழுக்கள் உள்ளன. அவற்றில் அங்கத்தவராகுங்கள். பல நல்ல வலைப்பதிவுகள் ,இணையத்தளங்கள் ,செய்திகள் அவற்றில் உள்ளன. உங்களுக்கு விருப்பமான துறையை தேடும்(search) பகுதியில் தட்டச்சிட்டு தேடிப்பாருங்கள் எத்தனை குழுக்கள் உள்ளன என்று.( நெருங்கியவர்களுக்கு....... GIS என தேடிப்பாருங்கள்)

**குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.(நேர முகாமைத்துவம்)

(தெரியாதவர்களை நண்பராக இணைக்காதீர்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அதெல்லாம் பிரச்சினை இல்லை. மேற்கூறிய ஒரு விடயத்தை எனினும் பின்பற்றிப் பாருங்கள் நிறைய மாற்றங்கள் உங்களில் தெரியும்.)

12 comments:

தமிழன்-கறுப்பி... said...

சரி அண்ணன்...!

ஆ.ஞானசேகரன் said...

//பொழுதுபோக்கு சாதனங்கள் எதுவுமே மிகையாகப் பாவிக்கும்போது நன்மையை விட தீமையையே தருகின்றது. //

உண்மைதான் நண்பா.. பொழுதுபோக்கு சாதனமே தவிற பொழுதை போக்கும் சாதனமில்லைங்கோ....

தமிழன்-கறுப்பி... said...

தொடர்புகளை புதுப்பித்தல் என்கிற ஒன்றுதான் உருப்படியானது. மற்றும்படி சலிப்பபைத்தருக்கிறது,

இதற்கு பதில் நிறைய வாசிக்கலாம்.

மயாதி said...

mm...

Subash said...

இணையத்தள மார்க்கட்டிங்குக்கு facebook உம் எனது சிறந்த தெரிவுகளில் ஒன்று. laexa rank ல் சிறந்த ரேங் வர அதிவிருந்து வரும் எண்ணற்ற கிளிக்குகளும் காரணம். மற்றும் எனது template footer links களை விற்கவும் facebook ஐ பயன்படுத்துகிறேன். மிகவும் எபயோகமானதொன்று.

Manoj (Statistics) said...

எனது ஊரிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் சொந்தங்கள், அயலவர்கள் ,நண்பர்களை சந்தித்துவிட்டேன். எமது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளிநாடுகளில் வசிக்கும் அண்ணன்மாரோடு தொடர்புகளைப் பேணி நல்ல ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறேன்.

அவற்றை தவிர பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை...completely useless

இவன் said...

இருங்க facebookக்கு போய்ட்டு வந்து வாசிக்கிறேன்...

பனையூரான் said...

வாங்கோ தமிழன்-கறுப்பி
நன்றிகள் பகிர்வுக்கு.

..........................

நன்றிகள் பகிர்வுக்கு ஆ.ஞானசேகரன்

அன்புடன் அருணா said...

உபயோகமான பதிவு......பூங்கொத்து!!!

பனையூரான் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் தனித்தனியேயான நன்றிகள்.

Media 1st said...

உபயோகமான பதிவு................நன்றிகள் பகிர்வுக்கு http://dshan2009.blogspot.com

சினேகிதி said...

நானும் தொடர்பற்றிருந்த நிறைய நண்பர்களை facebook மூலம் மீண்டும் கண்டுபிடித்திருக்கிறேன். facebook ல் அரட்டையடிப்பது கஸ்டமாச்சே அந்த விண்டோல எப்பிடித்தான் அரட்டையடிக்கிறதோ.