எங்க போனாலும் துரத்திக் கொண்டிருக்கிற கடவுள். பேசவே கூடாது இந்தத் தலைப்புப் பற்றி என்று யோசித்தாலும் முடியுதில்லை ஏன் ??
முதலில் நான் இது பற்றி தெளிவா இருக்கிறனோ என்பதிலே நிறைய சிக்கல் நேற்றுக் கூட கடவுளை தூசணங்களால் அர்ச்சனை??கடவுள் எனப் படும் விடயம் இருக்கு அது கூடாது என்று நினைக்கிறேனா கடவுளே இல்லை என்று நினைக்கிறேனா? ஏன்திட்டோணும்
எங்களுக்கு எதுவுமே நல்லது நடக்கலை எண்டு கடவுளை நம்பிக்கையை விட்டாலும் கடவுளை முன்வைச்சோ அதை நம்பியோ எதுவும் நாங்கள் தொடங்கலை பிறகு என்ன கோதாரிக்கு திட்டி. நாங்களா நம்புவம் எதுவுமே செய்யாம கடவுள் வழி காட்டுவார் என்று இருப்போம் நல்லது நடக்கல்லை எண்ட உடன திட்டித் தீர்க்கிறன். சமுதாயத்துக்கு கருத்து சொல்றது என்பது இல்லை இங்க பிரச்சனை நான் ஏன் திட்டினேன் . நம்பிக்கை வராது .ஓ ....... கடவுள நம்பிறன் என்பது இல்லை கதை. கோபம் வரக்கூடாது. இல்லை எனப் படும் விசயத்திலை ஏன் கோபம் வரோணும் .
விட்டிடு அதை விட்டிடு இண்டையோட உதைப்பற்றி கதைக்கிறத விட்டிடு. சரி நாங்கள் இறை நம்பிக்கைஇல்லாதவர்களாய் இருந்திருந்தா விடிவு கிடைச்சிருக்குமா.? ????/
எனக்கு நம்பிக்கை இல்லை. விடிவு கிடைக்கல்ல என்ற கோபத்த நம்பிக்கை உள்ள ஆக்களில காட்டிக் கொள்வதோட இச்சையை தீர்க்கிற வேலையத்தான் செய்து கொண்டிருக்கன் . விட்டிடு இந்தத் தலைப்பை இனியாவது
மூண்டு வருடமாச்சு .....
மூண்டு வருடமாச்சு .....
......................................................................................................................................
வெறும் புகழுக்கான எழுத்தைத்தான் இவ்வளவு காலம் எழுதியிருக்கிறேன் என்பது உண்மை போலத்தான் தெரிகிறது. நல்லா எழுதிறாய்? ஏன் இப்ப எழுதுவதில்லை ? வித்தியாசமான எழுத்து . இவ்வாறு எத்தனையோ பேர் மனசாரப் பாராட்டினாலும் அந்த போதைதான் எழுதக் கூடிய மன நிலையைத் தந்திருக்கிறது, ஒரு புகழுக்கப்பால் என்னால் எழுத முடிந்தால் மாத்திரம் எழுதலாம்.
...................................................................................................................................
27 வருசங்கள் அருகே இருந்து பேசாமல் இருந்ததை எத்தனை நாளுக்குள் பேசி முடிப்பது. தனிமை என்ற உணர்வை இல்லாது செய்திருக்கிற ஏற்கெனவே அறிமுகமாகிய புது அறிமுகம்.
...................................................................................................................................
அரபிகளுக்கு மனுசனை மதிக்கத் தெரிவதில்லை ஏன் யாழ்ப்பாணத்தில நீ குறைஞ்ச சாதி எண்டு செய்யிற கூத்துக்களை விடவா அரபிகள் மோசம்???
No comments:
Post a Comment