சார்பு வேகம் பற்றி அநேகமானோர் அறிந்திருப்பீர்கள். உணர்ந்தும் இருப்பீர்கள். பிரயோக கணிதத்திலே இந்த சார்பு வேகம் பற்றிய கணக்குகள் மிகவும் சுவாரஸ்யமானவையாகவும் தேற்றங்கள் மூலம் சில உணர்ந்த விடயங்களை நிறுவும் போது ஒரு நல்ல அனுபவத்தையும் தரும். இயங்குகின்ற பேருந்தில் இருக்கும் போது வீதியிலுள்ள மரங்கள் இயங்குதல் போன்ற தோற்றப்பாடு இந்த சார்பு வேகத்திற்கு மிகவும் எளிமையான ஒரு உதாரணம். கணித ரீதியாக இது எவ்வாறு நிறுவப்படுகிறது என்று பார்த்தால்..........
இங்கு சட்டம் என்ற ஒரு பதம் கையாளப்படும். சட்டம் எனும்போது உதாரணமாக பேருந்தின் சட்டம் எனும்போது பேருந்து ஓய்வில் இருந்தால் எனக் கருதும் போது என்று பொருள்படும். ஆனால் இங்கு பேரூந்து, பூமி சார்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
பூமி சார்பாக பேருந்து -> -> -> திசையில் 20km/h வேகத்தில் இயங்குகிறது என கொள்வோம். கீழ்க் கண்டவாறு குறித்துகாட்டப்படும்.
V -வேகம்
B -பேருந்து
E -பூமி
M -மனிதன்
V B ,E = 20km/h -> -> -> (பூமி சார்பாக பேரூந்தின் இயக்கம்)
ஆனால் பேருந்து சார்பாக நாம் ஓய்வில் இருக்கிறோம். ஆகவே
V M ,B = ௦ (பேருந்து சார்பாக மனிதனின் இயக்கம் பூச்சியம் அதாவது ஓய்வு )
காவி விதிப்படி
V E,M = V E,B + V B ,M
= 20km/h <- <- <- + ௦ (பேருந்து சார்பான பூமியின் இயக்கம் பூமி சார்பான பேருந்தின் இயக்கத்துக்கு எதிர்த் திசையில் இருக்கும்.)
ஆகவே V E,M = 20km/h < - <- < -;
மனிதன் பார்க்கும் போது பூமி எதிர்த் திசையில் இயங்குவது எவ்வாறு என கணித ரீதியான நிறுவல் இவ்வாறுதான் இருக்கும்.
இவ்வாறுதான் மனிதர்களுக்கிடையேயான புரிதல் நிலையும். உலகம் என்பது எல்லோருக்கும் பொதுவாயினும் ஒவ்வொருவரின் வாழ்க்கைமுறை, தேவை, பழக்க வழக்கங்கள் என்பவற்றால் அவர்களுடைய வாழும் களம் ( சட்டம்) வெவ்வேறாகிறது. ஒருவருக்கு நல்லது என படும் விடயங்கள் இன்னொருவருக்கு பிழை எனப்படுகிறது. ஒருவருக்குத் அவசியம் தேவை எனப்படும் விடயங்கள் இன்னொருவருக்கு அவசியம் அற்றதாய் இருக்கிறது. மக்களுக்கிடையேயான புரிதல் குறைவான காரணத்திற்கு முக்கியமானது வெவேறு சட்டத்தில் வசித்தல் அல்ல. வெவ்வேறு சட்டம் சார்ந்த தவறான புரிந்துணர்வு. பேருந்தினுள் உட்கார்ந்து கொண்டு மரங்கள் இயங்குகிறது என தவறாக விளங்கிக்கொள்ளல்.
எந்த ஒரு பிரச்சினை இன்னொருவரோடோ அல்லது இன்னொரு சமூகத்தோடோ வருகின்ற சந்தர்ப்பத்தில் நாங்கள் அவர்களாக மாறி சிந்திக்க வேண்டும். அங்கு நானிருந்தால் எனக்கு எவ்வாறான மன நிலை தோன்றும் நான் என்ன செய்திருப்பேன் என்றவாறான சிந்தனை. சார்பு வேகம் எவ்வாறு உணரப்பட்டு உண்மை அறியப்படுகிறதோ அது போல புரிதலும் புரிய வேண்டும் நமக்கு. ஒவ்வொருவருடைய உலகமும் வித்தியாசமானது என்பதை உணர்ந்தால் போதும் வாழ்வு இன்பமே.
5 comments:
// ஒருவருக்கு நல்லது என படும் விடயங்கள் இன்னொருவருக்கு பிழை எனப்படுகிறது. ஒருவருக்குத் அவசியம் தேவை எனப்படும் விடயங்கள் இன்னொருவருக்கு அவசியம் அற்றதாய் இருக்கிறது. //
யதார்த்தமான வார்த்தைகள்...
//
எந்த ஒரு பிரச்சினை இன்னொருவரோடோ அல்லது இன்னொரு சமூகத்தோடோ வருகின்ற சந்தர்ப்பத்தில் நாங்கள் அவர்களாக மாறி சிந்திக்க வேண்டும். //
நிச்சயமாக...
என்னால் முயன்றளவு முயற்சித்திருக்கிறேன்.
ஆனால் எல்லா நேரங்களிலும் இதைச் சரியாக செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை, ஆனால் முயற்சிக்க வேண்டும் அனைவரும்...
நல்ல பதிவு... :)))
நல்ல தகவல்கள்
அருமை .............
பனையூரன்! புரிந்தும் புரியாமலும் இருக்கிறது.
ஏம்பா இன்னும் விட மாடிகளா ?
பனையூரான், பிரயோககணிதத்தின் உணமையான பிரயோகம் இது தானோ.அந்த சட்டம் எல்லாம் மறந்துவிட்டது.ஞாபகப் படுத்தியமைக்கு நன்றிகள்.வாழ்த்துக்கள்
Post a Comment