Sunday, 20 September 2009

என்னைப் பாத்து எண்டாலும் திருந்துங்கோவன்

நிறைய கெட்ட பழக்க வழக்கங்கள் என்னிடம் இருந்தன. ஒன்றா இரண்டா ஊருப்பட்ட கெட்ட பழக்கங்கள். ஆனால் ஒரு மாதத்தில திருந்திவிட்டன். அதோட சில நல்ல பழக்கங்களையும் பழகிவிட்டன்.எப்பிடி திருந்தி இருக்கிறன் தெரியுமே?



01) குடியை விட்டிட்டன் எண்டே சொல்லலாம்.
02) குடிச்சிட்டு வீட்ட போவதில்லை.
03) சிகரெட்டை நிப்பாட்டியாச்சு.
04) Engilish improve பண்ணியாச்சு.
05) first கிளாஸ் அடிக்க முடியாமப் போச்சு ஆனால் second கிளாஸ் அடிக்கலாம் என்ற மட்டத்துக்கு வந்திட்டன்.


இப்பிடியெல்லாம் சாதிச்ச அடியேன் பெரிய ஒண்டும் .....................


௦6) பேரழகியான என்னவளோடு கைகோர்த்து நடப்பது பலருக்கு கண்கொள்ளாக் காட்சி. அப்பிடி ஒரு பொருத்தம்.









இதெல்லாம் ஒரு மாதத்தில எப்படி சாதிச்சான் எண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம் . நான் மட்டுமில்லை நீங்களும் சாதிக்கலாம்.
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>



எப்பிடி இருந்த நான் இப்படி ஆனது இப்பிடித்தான் .
>>
>>
>>
>>
>>
>>
>>

01) குடியை விட்டிட்டன்.
சாராயம், பீர் எல்லாத்தையும் எண்ட வயித்துக்குள்ள விட்டிட்டன்.



02) குடிச்சிட்டு வீட்ட போவதில்லை.
குடிச்சா வீட்ட போறதில்லை , அதுக்காண்டி குடியை நிறுத்தவில்லை.



03) சிகரட்டை நிப்பாட்டியாச்சு.



04) English improve பண்ணியாச்சு.
கடைசியா நடந்த presentation ஒன்றில் எல்லா விரிவுரையாளர்களுக்கும் எனக்கு English எப்பவுமே impossible என்பதை prove பண்ணியாச்சு.
05)first கிளாஸ் அடிக்க முடியாமப் போச்சு ஆனால் second கிளாஸ் அடிக்கலாம் என்ற மட்டத்துக்கு வந்திட்டன்.
எல்லாரும் ஒண்டா இருந்து தண்ணி அடிக்கும்போது first கிளாஸ் (peg) chears சொல்லியடிப்பதால் first கிளாஸ் அடிக்கிறது நடக்காது ஆனால் இரண்டாவது ரவுண்டு அடிக்கும்போது செகண்ட் கிளாஸ் முதலாவது அடிப்பது நான்தான்.
06)பேரழகியான என்னவளோடு கைகோர்த்து நடப்பது பலருக்கு கண்கொள்ளாக் காட்சி. அப்பிடி ஒரு பொருத்தம்.
இப்படியெல்லாம் நான் வாழ்வதால் என்னவள் வேறொருவனுடன் கைகோர்த்து செல்வது கண்ணில் நீர் கொள்ளாக் காட்சி எனக்கு. கண்ணீர் கண்களில் கொள்ள முடியாமல் வழிகிறது .( கண்கொள்ளாக் காட்சி ).அவளுக்கும் அவனுக்கும் நல்ல பொருத்தம்
திந்துங்கோவன் என்னைப் பாத்து .......................

10 comments:

துஷியந்தன் துஷி said...

நல்ல கருத்து நானும் ஏதோ நீங்கள் திருந்திவிட்டீர்கள் அப்ப நானும் திருந்துவோம் என்று நினைச்சனான் ஆனா பிறகுதான் தெரிஞ்சுது இப்படி திருத்திவிட்டீங்க என்று mm super advice

பனையூரான் said...

முதல் தடவையா வந்திருக்கிறீங்கள் துஷி. நன்றிகள் வருகைக்கும் பகிர்வுக்கும். தொடர்ந்து வாங்கோ .

நிலாமதி said...

எதோ நினைத்து கொண்டு நுழைந்தால், அட இப்படியா ...நல்ல கற்பனை பாராடுக்கள்.

பால்குடி said...

இப்பிடியும் சொல்லலாமோ? நல்லாத்தான் இருக்கு.

Unknown said...

//06)பேரழகியான என்னவளோடு கைகோர்த்து நடப்பது பலருக்கு கண்கொள்ளாக் காட்சி. அப்பிடி ஒரு பொருத்தம்.
இப்படியெல்லாம் நான் வாழ்வதால் என்னவள் வேறொருவனுடன் கைகோர்த்து செல்வது கண்ணில் நீர் கொள்ளாக் காட்சி எனக்கு. கண்ணீர் கண்களில் கொள்ள முடியாமல் வழிகிறது .( கண்கொள்ளாக் காட்சி ).அவளுக்கும் அவனுக்கும் நல்ல பொருத்தம் //

ஆகா...
இவ்வளவு சோகமான விடயத்தை இவ்வளவு நகைச்சுவையாக சொல்கிறீர்கள்???

ஆனால் அழகான பதிவு...
இதை தான் optimism என்பார்களோ?

vasu balaji said...

இது அகில உலக லொள்ளு:)) நல்லா இருக்கு.

M.Thevesh said...

திருந்தி விட்டேன் என்றவுடன் சந்தோசப்பட்டு உள் நுளைந்தால் இப்படியா? ஆனால் அழகான பதிவு.

ARV Loshan said...

அதானே பார்த்தேன்.. இதெல்லாம் திருந்துற கேசா என்று நினைத்துக் கொண்டே உள்ளே வந்தேன்.. சரி தான்..

நடத்துங்கோ ராசா.. ;)

பனையூரான் said...

நன்றி நிலாமதி, பால்குடி, கனககோபி ,வானம்பாடிகள் ,Thevesh ,LOSHAN

Prapa said...

அடப்பாவிகளா.......
ஆனா... இங்க எல்லாமே விட்டாச்சு....