Thursday, 10 September 2009

சொல்லவே இல்லை

பதிவு போட்டும் கனகாலம். .......


study leave வாட்டி எடுக்குது. (மற்ற நேரத்தில் புத்தகத்தைத் தூக்கினால் தானே ) பதிவுகள் வாசிக்க நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடிகிறது. எழுத முடியவில்லை. இண்டைக்கு நினைச்ச விஷயத்தை எழுதியே ஆகோணும் எண்டு நேரத்தை ஒரு மாதிரி ஒதுக்கியாச்சு.






ஒரு விசயமும் இல்லை எழுத வேணும் என்பதற்காய் எழுதுகிற பதிவு இது.

சல் அடித்தல்
"கொஞ்ச நேரம் சல் அடிச்சுக் கொண்டிருந்தோம். "
இவ்வாறான வாக்கியப் பிரயோகங்களை அரிதாக எங்கேயும் கேட்டிருக்கலாம். அதென்ன சல் அடித்தல் ??



salivia என்று ஒரு ஆங்கிலப் பதம் உள்ளது. உமிழ்நீர் என்று பொருள். salivia என்ற வார்த்தையின் சுருங்கிய வடிவமே sal. அது சரி, அப்ப எச்சிலுக்கும் கதைப்பதற்கும் என்ன சம்பந்தம்??

எதிர்ப் பாலாருடனான் உரையாடலையே(அரட்டை) சல் அடித்தல் என்று கூறப்படும். ஆண்கள் பெண்களோடு பேசும்போது வழிஞ்சு வழிஞ்சு கதைப்பார்கள். அதுதான் அதுதான் இந்த சமாச்சாரம். எதிர்ப்பாலாருடன் அரட்டை அடிக்கும்போது வாயில் எச்சில் அதிகமாக சுரக்குமாம். (பேசும்போது கவனியுங்கோ) அளவுக்கு அதிகமாக சல் அடித்தால் அது வாளி வைத்தல் என்ற பதத்தால் இன்று பல இடங்களில் வழங்கப் பட்டு வருகிறது.

(salacious என்றால் காமமுள்ள இச்சையுள்ள )

con அடித்தல்
con என்றால் எதிராக, மாறுபட்ட கருத்து தெரிவித்தல் , ஏட்டிக்குப் போட்டியாக என்று அர்த்தம். ஒரேபாலாருடன் அரட்டை அடிக்கும்போது விட்டுக்கொடுக்காமல் எதிராக போட்டியாக பேசுவது வழமை. ஆனால் எதிர்ப் பாலாருடனான அரட்டை அவ்வாறு இருப்பதில்லை. ஆண்கள் ஆண்களோடும் பெண்கள் பெண்களோடும் பேசிப் பேசி காலத்தை வீணாக்கும் உரையாடல்கள் con அடித்தல் எனப்படும்.



சல் அடித்தல் தமிழ் பேசும் மக்கள் சிறிய அளவில் பாவித்தாலும் con அடித்தல் பாவனையில் இல்லை என்றே கூறலாம். இப்பதம் தாம் படித்த காலத்தில் பாவனையில் இருந்தது என ஒரு ஆசிரியர் கூறியிருக்கிறார்.






விசிறி

fanatic என்றால் ஆர்வம் மிகுந்த அதிக அபிமானமுள்ள என்று பொருள். அதன் சுருங்கிய வடிவம்தான் fan.இப்போது ஆங்கில அகராதிகளில் fan என்றால் தீவிர அபிமானி என்று காணப் படுகிறது. நாங்கள் fan ஐ மொழிபெயர்த்து விசிறியாக்கிட்டம். முந்தி அரசர்மாருக்கு சாமரம் வீசினபடியால்தான் விசிறி என்ற சொல் வந்தது என்று மாத்திரம் சொல்லாதேங்கோ. பக்கத்தில் இருந்து சாமரம் வீசியவர்கள் சம்பளத்துக்கு வீசியவர்கள்.


எல்லோரிடமும் ஒரு கேள்வி ???? ????? ????? ?



I இற்கு அடுத்ததாய் is வரக்கூடியவாறு ஆங்கில வாக்கியம் ஒன்று அமையுங்கள் பார்ப்போம் .

11 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

i am first

ஆங்கிலத்துல Ph.d பன்னபோரிங்கள ..............

சல் அடித்தல், con அடித்தல், விசிறி ,நல்லா ஜோல்ரிங்க......sorry சொல்றிங்க ...........

வாழ்த்துக்கள்............

பால்குடி said...

முன்னர் அறியாத விடயத்தைப் பகிர்ந்து கொண்டீர்.

Subankan said...

I is the ninth letter in English alphabet. ஓகேவா?

யோ வொய்ஸ் (யோகா) said...

நீ்ங்கள கூறிய சல் அடித்தல், விசிறி போன்ற பதங்கள் பேராதனை பல்கலைகழகத்தில் அதிகமாக புழக்கத்தில் உண்டு..

வாழ்த்துக்கள்

பனையூரான் said...

பால்குடி said...
//முன்னர் அறியாத விடயத்தைப் பகிர்ந்து கொண்டீர்.//

பகிர்வுக்கு நன்றி பால்குடி

Subankan said...
//I is the ninth letter in English alphabet. ஓகேவா?//

சரி வாழ்த்துக்கள் சுபாங்கன்



யோ வாய்ஸ் (யோகா) said...
//நீ்ங்கள கூறிய சல் அடித்தல், விசிறி போன்ற பதங்கள் பேராதனை பல்கலைகழகத்தில் அதிகமாக புழக்கத்தில் உண்டு..//

தகவலுக்கு நன்றி யோ

Muruganandan M.K. said...

நாங்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்களாக இருந்த காலத்தில் (1970-75) 'சல் அடித்தல்' மிகவும் பிரபல்யம்.
இன்னுமா என ஆச்சரியமாக இருக்கிறது.

maruthamooran said...

'சல்' அடித்தல் என்பதற்கு இதுதானோ விளக்கம். அற்புதம்.

SShathiesh-சதீஷ். said...

உங்களுக்கு என் தளத்தில் பரிசொன்று காத்திருக்கின்றது. வந்து பெற்றுக்கொள்ளுங்கள் . வாழ்த்துகள்.

Unknown said...

உங்களுக்கு இன்னொரு கேள்வி கேட்கவா?

pro என்பதன் எதிர்ப்பதம் தான் con என்பது தெரியுமல்லவா?
அப்படியாயின் progress என்பதன் எதிர்ப்பதம்???

வந்தியத்தேவன் said...

//கனககோபி said...

pro என்பதன் எதிர்ப்பதம் தான் con என்பது தெரியுமல்லவா?
அப்படியாயின் progress என்பதன் எதிர்ப்பதம்???//

அடப்பாவி கோபி எப்படி ஐயா இப்படி ஜோசிக்கின்றீர்கள். இப்போதான் புரிகிறது ஏன் உங்களுக்கு அனானித் தாக்குதல் நடந்திருக்கின்றது என‌.

M.Thevesh said...

Progress என்பதின் எதிர்பதம் பெரும்
பாலும் Regress என்பதற்கே பொருந்தும்.
வந்தியதேவன் உங்கள் விளக்கம் அருமை.