Friday, 26 June 2009

பேருந்தும் ..........யும்



அழாகான சாலை வளைவுகள் ,
விடிகாலைப் பனி,
பால் நிறத்தில் நீர் சொரியும் அருவிகள்,
மலைத்தொடரின் மானங்காக்கும் பச்சைய உயிர்கள்,
நிமிர்ந்து பார்க்க கழுத்து வலிக்கும் உயர்ந்தமலைகள்,
குனிந்து பார்க்க வயிறு கூசும் சரிவுகள் ,
உந்துருளியில் உரசிக்கொண்டு செல்லும் ஜோடிகள்,
சாலைக்கடவையில் தோளில் பையோடு
தலையை சரித்தவாறு வேகநடையில்
வேலைக்கு செல்லும் பூலோக தேவதைகள் ,
எட்டிப்பார்க்கத் துடிக்கும் பாதையிலுள்ள ஒன்றிரண்டு கோவில்கள்,
அதிகாலைப் பயணத்தில்
என்னையும் சுமந்து இவற்றையும் எனக்குகாட்டும்
பேருந்தே !
நீ காட்டும் காட்சிகளை மனம் ரசிக்கத் துடித்தாலும்
மலையாளின் இடுப்பினில் வளைந்தோடி
செய்யும் சில்மிஷத்தை பொறுக்காமல்
உடல் பொறாமையில் வாந்திஎடுக்கிறது.
பி .கு:-எனக்கும் அதிகாலைப் பேருந்துப் பயணத்திற்கும் ஒத்தே வருவதில்லை. வாந்திதான்............ (பேருந்தும் வாந்தியும்)

3 comments:

ஆ.ஞானசேகரன் said...

//மலையாளின் இடுப்பினில் வளைந்தோடி
செய்யும் சில்மிஷத்தை பொறுக்காமல்
உடல் பொறாமையில் வாந்திஎடுக்கிறது.//

நல்ல கர்ப்பனை

Anonymous said...

கற்பனை. நான் ஏதோ மலையாளி எண்டு நினைச்சு உள்ள வந்திட்டன்.

பனையூரான் said...

நன்றிகள் ஆ.ஞானசேகரன் ,pukalini