Wednesday, 23 January 2013

பாதுகாப்பு

 அலை பேசி  அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களைத் தவிர கட்டார் உன்னோடுதான்   விடிகிறது. இதை உன்னட்ட சொன்னா சும்மா போங்கோ  புளுகாமல் என்பாய்.  இன்றோடு நாட்டைவிட்டு வந்து ஒரு வருடம் எட்டு மாதம் ஆகுது. வயது 30 வருடம் 2 மாதம். கட்டுமானத் துறையில் Foreman  உத்தியோகம். Gulf Experience இல்லை  என்று சொல்லி இரண்டாயிரம்  ரியால் தரலாம்  எண்டு கொழும்பில ஒரு ஏஜென்ட் மூலமா வந்து. அட எழுப்பி இருந்து ஒவ்வொரு நாளும் நாளை எண்றதும் தொழில ஞாபகப் படுத்திறதும் வேலையாப் போச்சு. அவசரமா  காலைக் கடன்  முடித்து வெளிக்கிட்டு உடுத்தி இரவு   சமைத்து குளிரூட்டியில் இருந்த மீன்கறியை சுட வைக்க நேரமில்லை  ஹோட்பாக்ஸ்ல போட்டுக்கொண்டு  வெளிகிட்டன்.சூடா இருக்காது ருசி மாறாமல் இருக்கும்.  சைட்டுக்கு  பக்கத்தில இருக்கிற பக்காலாவில (கடை) கபூஸ் (ரொட்டி மாதிரி இருக்கும் ) வாங்குவம். காணும் ரண்டு நேரத்துக்கு காலமையில மூண்டு அல்லது நாலு மீன் இறைச்சி எண்டா நாலு  இல்லாட்டி மூன்றுதான். அதே போல மத்தியானத்தில நாலு சராசரி நல்ல கறி எண்டா அஞ்சு பாயும். ஒரு ரியாலுக்கு கிடைக்கிற கபூஸ் தொடந்து சாப்பிட உடம்பு வைக்கிற போலையும் ஒரு உணர்வு. அடுத்த முறை லுளுக்கு (Lulu Hypermarket ) போனா நிறுத்து பாக்கோணும். "போர்மன் ஜி சாய் பீயகா". எங்கட காம்போட இருக்கிற கடையில எண்ட  சைட்ல  வேலை செய்யிற தொழிலாளி ஒருத்தன் கேக்கிறான். "நா தாங்க்ஸ்."

வெளில பஸ் ஆயத்தமா நிக்குது நானும் தொழிலாளிகளும் வெளிக்கிட்டாச்சு. இன்ஜினியர்மாருக்கு தனித்தனியா கார் இருக்கு. பிந்தியும் வரலாம் அவங்கள். உதுக்குத்தான் படிச்சிருக் கோணும் என்ற. இப்ப அதை யோசிச்சு என்ன செய்ற.ஏதோ தொழில்நுட்ப கல்லூரியில் படிச்சிருக்கன் சிவில் துறையில. கல்வி கூட பல நேரங்களில் அதிகார வர்க்கத்தை தோற்றுவிக்கிறதோ என்று கூட எண்ணத் தோன்றும். பஸ் சினையாவ விட்டு வெளியேறி சல்வா ரோட்டை பிடிச்சிட்டுது. இனி டிராப்பிக் இருக்காது. நான் படிப்பு குறைவெண்டதால அப்பிடி நினைக்கிறானோ தெரியல. ஆனா வேற  கொம்பனி கூட்டாளிகள் அதில ஒருத்தன் சர்வயர் மற்றவன் மெட்டீரியல்  டெக்னீசியன். அவங்கள் சொல்லுவாங்கள்  "இங்க எங்கட கொம்பனில படிப்புக்கோ அறிவுக்கோ மரியாதையை இல்லை மச்சான்." கல்வி அதிகாரத்தை உருவாக்கினால் கூட பரவாயில்லை என்றும் நினைப்பதுண்டு  அவங்கட நிலமையை  பாக்கும்போது. இருமை இல்லை எண்டே சொல்ற அளவுக்கு கபில பகுதிகள் (Gray area) வாழ்க்கையில மிச்சம் இருக்குது.


 எது இல்லையோ அதைத் தேடி ஓடிறது மனுசனுக்கான இயல்பு. கொஞ்ச காசுத் தேவை அதுக்காகத்தான் கட்டாருக்கு  வந்தன். வீட்டிலை நானும் தம்பியும் அம்மாவும்தான். அப்பா தவறீட்டார். வேறை சாதிப் பிள்ளை ஒண்டை நான் விரும்ப அம்மா மறுப்பு ஒண்டும் சொல்லாம சம்மதிச்சது. அம்மாக்கு ஏதும் செய்யோணும் அம்மாண்ட பேர்ல கொஞ்ச காசு போடோணும். மற்றது தாலி செய்றதுக்கு கொஞ்ச காசு வேணும் இது இரண்டும்தான்  முக்கிய காரணம். அப்ப அம்மா காதலுக்கு சம்மதிக்காட்டி அம்மாக்கு ஏதும் செய்திருக்க மாட்டனா ? விடை எனக்கு கிடைப்பதில்லை எப்ப கேட்டாலும்  இந்தக் கேள்விக்கு.சாதியப் பற்றி தூக்கிப் பிடிக்காதது புதுசாத்தான் இருந்திச்சு. சாதி எதுக்கு பாக்கிறாங்களோ இல்லையோ யாழ்ப்பாணத்தார் கலியாணம் எண்டா அதுதான் முன்னுக்கு  வைப்பாங்கள். அடுத்தது பொருத்தம். ஒன்பது கிரகம் எண்டு நாங்கள் எப்பவோ கண்டு பிடிச்சிட்டம் எண்டு பழமை பெருமை பேசிற ஆக்கள் அதுக்குள்ளே சூரியனும் இருக்குங்கோ. 

மத்திய கிழக்கு  நாடுகளுக்கு படிச்சு நல்ல உத்தியோகத்துக்கு வார எண்டா வாங்கோ இல்லாட்டி வந்து கஷ்டப்படக்கூடாது. எல்லாருக்கும் சொல்லோனும் எண்டு நினைப்பன்.  ஆனா எவ்வளவு  தூரம் ஆக்கள் நம்புவாங்கள் எண்டு நினைச்சிட்ட்டு நிப்பாட்டீடுவன். பத்து மணித்தியாலம் தொடந்து சைட்ல நிக்கிறம். அரை மணித்தியாலம்தான்  இடைவேளை. காலமை சாப்பாட்டு நேரம்  இல்லை. நிண்ட நிலையில போடறதுதான், 

ம்ம் சைட் வந்தாச்சு. மக்கி மண்.,புழுதி.,க்ச்காவேடர் (Excavator) ஒலி.  கட்டாரில அதிகமா கேட்கிற சத்தம் எண்டா எச்காவடோர்களின் டுக் டுக் தான். இந்த   பீட்டுக்கு பின்னணியா  ஐடெம் சாங்  ஹரிஷ் ஜெயராஜ்ண்ட இசையில போட்டா நல்லா இருக்கும். இப்பிடி கிறுக்குத்தனமா யோசிக்கிற அளவுக்கு இருக்கன்.


இந்த மோட்டர் கிரேடர் எப்ப திரும்பி வந்திச்சு???? போன கிழமை இந்த  மெசிண்ட  சில்லுக்க அகப்பட்டு ஒரு நேபாள தொழிலாளி இறந்துவிட்டான்.  ஒரு நாள் கூட சைட் மூடல. அடுத்த நாள் எல்லாரும் வழமை போல  வேலைக்கு வந்தம். மனிதம் ?? காசு கொட்டும் கட்டுமானத் துறையில் சில கொம்பனிகளுக்கு  கணக்கே இல்லை. அதுக்காக எல்லா இடமும் அப்பிடி இல்லை. தொண்ணூறு சதவீதமான கொம்பனிகள் பாதுகாப்புக்கு முதலிடம்தான், நாங்கள் கவனமா இல்லாட்டிலும் பொறுப்பான உத்தியோகத்தர்களின் நச்சரிப்பு அதிகம்.
 
முகத்துக்கு face cover ஐ அணிகிறேன் Helmet  மாட்டுகிறேன்.  safety glass ஐ . மாட்டுகிறேன். 

எங்களை நேசிக்கிறவங்களுக்கு கவலையை மட்டுமே கொடுத்து விடாமல் இருக்க Safety First .