முதலாவது பகுதியில் GIS என்றால் என்ன என்பது பற்றி பார்த்திருந்தோம் இம்முறை தரவுகள் சேகரிக்கப்படும் பல்வேறு முறைகள் பற்றி ஆராய இருக்கிறோம். GIS என்பது கணனி மயப்படுத்தப்பட்ட ஒரு system என பார்த்திருந்தோம். கணனி மயமான இந்த system எல்லா வகையான தரவுகளையும் உள்வாங்கிக் கொள்ளாது. ஆனால் இதற்கு ஏற்றாற்போல் தரவுகளின் வடிவத்தை (format) மாற்ற வேண்டிய நிலைப்பாடும் இங்கு உள்ளது. தரவு வடிவங்கள் (data format) பற்றி பிறகு ஆராய்வோம்.
எவ்வாறு தரவுகள் சேகரிக்கப்படலாம்??
01 ) வரைபடங்கள் (maps)
வரை படங்கள் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கின்றன.வரைபடங்களும் இரு வகையாக பிரிக்கப்படலாம்.
1.Conventional map (பாரம்பரியமுறை வரைபடங்கள்)
2.Digital maps (இலத்திரனியல் வரைபடங்கள்)
பாரம்பரிய முறை வரைபடங்களை உபயோகிப்பதில் பல சிக்கல்கள் இருந்தாலும் கூட பாவிக்க முடியாது என்று கூறி விட முடியாது. ஆனால் இலத்திரனியல் வரைபடங்கள் GIS இன் தோழர்கள் போன்றவை.
இலத்திரனியல்
வரைபடம்
பாரம்பரிய வரைபடம்
02 ) Arial Pahotographs
விமானங்களிலிருந்து வரைபட உருவாக்கம் போன்ற தேவைகளுக்காக எடுக்கப்படும் புகைப்படங்கள்
இப்புகைப்படங்கள் பல்வேறு பகுத்தாய்தலின் (Analyze) பின்பே பயன்படுத்தப்படும்.
03 ) செய்மதிப் படங்கள் (Sattelite images)
இவையும் பலவேறு பகுத்தய்தலின் (Analyze) பின்பே பயன்படுத்தப்
படுகின்றன. Georeferencing , Clssiification , Filtering போன்றன இவைபற்றி எதிர்வரும் பகுதிகளில் விரிவாக ஆராய இருக்கிறோம்.
செய்மதிப் படம் ஒன்று.
Arial Pahotographs நேரடியாக பாவிக்கப்படக்கூடியது போல தோற்றமளித்தாலும் செய்மதிப் படம் அவ்வாறு பாவிக்க முடியாது என படத்தை பார்த்தவுடன் புரிகிறது அல்லவா ??
04 )நில அளவை மூலம் பெறப்படும் தகவல்கள் (Field Surveying )
05 ) மனித உள்ளீடுகள் (Human Inputs )
தரவுகளை மனிதர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளல்.
உதாரணம்:- "இவ்விடத்திலே பெரிய கட்டடம் ஒன்று இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன.. அது என்ன கட்டடம் ?"
இவ்வாறாக தரவுகளை உள்வாங்கல்
முக்கியமான தரவு சேகரிக்கும் முறைகள் பற்றி ஆரர்ய்ந்திருக்கிறோம். மேலும் அடுத்த GIS பதிவில் சந்திப்போம்.